பாத வெடிப்பிற்க்கும், கை சுருக்கத்திற்க்கும்

பாத வெடிப்பிற்க்கும், கை சுருக்கத்திற்க்கும் எளிய டிப்ஸ் சொல்ல முடியுமா?
நன்றி.

பித்த வெடிப்பிற்கு
க்யூமிக் ஸ்டோன் என்று கடைகளில் கிடைக்கும் ஒரு விதமான கல்லை கொண்டு பித்த வெடிப்பு இருக்கும் இடத்தில் தினமும் குளிக்கும் போது தேய்த்து வர பித்தவெடிப்பு குறையும்.

கை சுருக்கத்திற்கு
மெனிக்யூர் செய்து வரலாம். கைகளில் உருளைகிழங்கு சாரு தடவி சிறிது நேரம் கழித்து கை கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்
சந்தனத்துடன் எலுமிச்சை சாரு கலந்து கைகளில் பூசி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்

hard work and self conficence leads you to the success

hard work and self confidence leads you to the success

பதில் கூறியதிற்க்கு நன்றி சிந்து. எனது முடி ரொம்ப soft ஆகவும் எண்ணெய் பசையாகவும் உள்ளது.நான் Head and shoulders ஷாம்பு உபயோகிக்றேன். அதற்க்கு வேறேதும் தீர்வு சொல்ல முடியுமா? முடி soft ஆக உள்ளதால் Hair straightening பண்ணிக் கொள்ளுவதால் கெடுதலேற்படுமா?

Himalaya herbals shampoo is good... you can select the one tht suits ur hair type...

உண்மைதான் டிசென்,
ஹிமாலாயா ஷாம்பூ உபயோகித்தால் தலைமுடி மென்மையாக இருக்கும்.அடிக்கடி hairstarihting
செய்தால்,முடி வரண்டு பொலிவில்லாமால் போய் விடும். நன்றி.

Hi
முதலில் என்னுடைய முடி ரொம்பவும் கொட்டியது. நான் ஹிமாலயா ஷாம்புதான் ஊரில் இருந்தவரை உபயோகித்தேன். நல்ல பலன் கிடைத்தது. இங்க வந்ததும் வேற ஷாம்பு யூஸ் செய்தேன். இப்போ திரும்பவும் ஹிமாலயாதான் யூஸ் செய்கிறேன். அதனுடன் கன்டிஷணரும் யூஸ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நான் ஹேர் டிரையர் வித் ஹேர் ஸ்ட்ரெட் வாங்கலமான்னு யோசிக்கிறேன். யாரவது எனக்கு கொஞ்சம் அதைப்பற்றிய விவரம் சொல்லமுடியுமா?
i am waiting for your reply.

sugu

sugu

உங்கள் கூந்தலின் தன்மைக்கு நீங்கள் ஹென்னா பௌடருடன் காய வைத்து அரைத்த கருவேப்பிலை பௌடர் சேர்த்து தண்ணீரில் கலந்து தலை முடி முழுவதும் தடவி 30 நிமிடஙல் ஊரவிட்டு தலையை கழுவுங்கள், உங்கள் கூந்தல் மிகவும் எண்ணை பசை தன்மை கொண்டதென்றால் இதை நீங்கள் மாதம் ஒரு முறை படி 3 மாதங்கள் முயற்சித்து பாக்கவும்.

முடி அதிகமாக கொட்டும் தன்மையுடையது என்றால் முதலில் அதற்குரிய ட்ரீட்மென்ட் செய்துவிட்டு பின்னர் hair sraightening செய்யவும். hair straightening 3 விதமாக உள்ளது,
1- நிரந்தரமானது.(புதிதாக வளர்வது மட்டும் உங்கள் பழைய முடி போல வளரும்)
2- ஒரு வருடதிற்குரியது( 6 மாதங்கள் வரை நிரந்தரமாக நிற்க்கும், பின்னர் சிறிது சிரிதாக குறைந்து ஒரு வருடதிற்குள் முழுவதுமாக பழைய முடி போல் வந்து விடும்.
3- ஒரு நாளைக்குரியது(திருமணம் போன்ற ஃபன்ஷனுக்கு போகும் போது செய்து கொள்வது, முடியை கழுவியதும் போய்விடும்)

இதில் முதல் 2 செய்வதாயின் கைதேர்ந்த அழகுகலை நிபுனரிடம் மட்டுமே செய்யவேண்டும். அப்படி செய்து கொண்டால் அனாவசிய முடி உதிர்வை தடுக்கலாம்.

one day ironing நீங்களே செய்துகொள்ளலாம்

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

பதில் அளித்த டிஸென் அவர்களுக்கும், விமலா அவர்களுக்கும், மகேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மிகவும் விளக்கமாக பதில் அளித்த சிந்து அவர்களுக்கு, மனமார்ந்த நன்றி. நா(ங்கள்)ன் உங்களிடமிருந்து மேலும் பல அழகு சம்பந்தமான குறிப்புகளையும், விளக்கங்களையும் அறிந்து கொள்ள ஆவலாய் உள்(ளோம்)ளேன்.

Hi this is aashaswamy here.
U can use vaseline moisturizing lotion for cracks on ur foot after bath and before going to bed. This is very simple and easy way which i have tried in home.

டிரை ஸ்கின் கால் பித்த வெடிப்பிற்கு என்ன செய்தாலும் சரியாகவில்லை.
டாக்கரிடம் சென்று கிரீமும் போட்டாச்சு,வாஸலைனும் டெய்லி போட்டச்சு இரண்டு நாள் தெய்க்கவில்லை என்றால் மறுபடியும். கால் வெடிப்பாக மாறி விடுகிறது.
யாராவது இத்ற்கு ஒரு வழி சொல்லவும். சுடிதார் ,சஏலை எல்லாம் கீழ்பாக கிழிந்து விடுகிறது.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்