சிறுவர் கல்வி

சிறுவர், சிறுமிகளுக்கான கல்வி,பொது அறிவு, நல்ல பழக்கவழக்கங்கள் சம்மந்தமான அறிவுரைகள், யோசனைகள், இணையத்தள முகவரிகள் பற்றி சொல்லுங்கள். நன்றி.

http://www.learningplanet.com/stu/kids0.asp

http://www.fekids.com/kln/index.html

http://www.kidsgames.org/

http://www.dltk-kids.com/

http://crafts.kaboose.com/index.html

http://www.netrover.com/~kingskid/108b.html

http://www.magickeys.com/books/

http://pbskids.org/stories.html

http://www.indianchild.com/

அப்ரமா நிறைய்ய அனுப்பரேன்

மிக்க நன்றி thalika. அனைத்தும் மிக மிக உபயோகமான வெப் சைட்ஸ்.

ஹலோ தளிகா

நலம். நலமறிய ஆவல். Audio/Video Children Education வெப்சைட்ஸ் பெயர்கள் இருந்தால் குறிப்பிடவும். நன்றி.

Pls check this out. stateboard books are online..you can teach the kids tamil and maths by seeing this and you can print it out too ..hope this helps you.. :-)

http://www.textbooksonline.tn.nic.in/

Arise,Awake, Stop not till the goal is reached.

Hello Prema

எப்படி இருக்கின்றீர்கள்?

நீங்கள் கொடுத்த வெப்சைட் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க மனமார்ந்த நன்றி.

நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் ? நலமா? தங்களுடைய குழந்தைக்கு என்ன வயது? என்னுடைய மகளுக்கு 5 ஆக போகிறது.

Arise,Awake, Stop not till the goal is reached.

நலம். எனது மகளுக்கு 18 மாதங்கள் ஆகிறது.

http://www.starfall.com
http://www.edhelper.com
http://www.mathfactcafe.com
http://www.kidzone.ws

this website learn tamil for kids.go this website

http://www.tamilvu.org/coresite/html/cwintrodu.htm

click மழலைக்கல்வி

bye
kavitha

யாரும் கோவப்படாதீங்கா..இப்பத்திக்கி இந்த பதிவில் மட்டுமே லாகினா காமிக்குது..மீத பதிவில் லாகின் பன்ன முடீல.....தேவா உங்களை எப்படி பாராட்ட எப்படி நன்றி சொல்லன்னு தெரீல..
எல்லாரும் வாய் கிழிய தானம்,தர்மம் ,தத்து எடுக்கரதுன்னு பேசினாலும் அதில் பெரும்பாலான வார்த்தைகள் போலியா யார்டயோ பந்தா விட ,பெருமைக்காக,மதம் அது இதுன்னு ஒரு 5 ருவா விஷயத்தையெல்லாம் பெரிசா காம்மிக்கர இந்த உலகத்தில் நீங்க எழுதின எழுத்துக்கள் ரொம்ப உன்மையா உங்க மனசில் இருந்து எழுதி இருக்கீங்க....
இங்க இருந்துட்டு உதவி செய்யும்போது வேன்டியவங்களை சேருதாங்கர ச்ந்தேகம்...ஏதாவது ஜெனூயின் வெப்சைட் குறிப்பா தமிழ்னாட்டுக் குழந்தைகளை ஸ்பான்சர் பன்னுர மாதிரி இருந்தா சொல்லுங்க தேவா.
இதுவரை எனக்கு சாப்பிட இல்லாட்டி சாப்பாடு கொடுக்க,,,5 ருவா 10 ருவா தானம் செய்ய,ஏழைகளுக்கு சின்ன உதவி செய்ய்ச்ன்னில்லாம பெரிசா இப்படி எதுவும் மனசில தோனல....இப்ப ரொம்ப சீரியஸா யோசிச்சுட்டிருக்கேன்...உங்கள் நல்ல மனசுக்கு கடிப்பா நீங்க நிறைய சம்பாதிச்சு நிறைய பேர்கு உதவி செய்விங்க...ரொம்ம்ம்ம்ப நன்றி தேவா
http://www.udavumkarangal.org/

தளிகா:-)

இதில் என்னைப் பாராட்டவோ, நான் இப்படி செய்கிறேன் அல்லது செய்ய நினைக்கிறேன் அதனால் நீங்களும் செய்யுங்கள் என்று சொல்லவோ நிச்சயம் நான் இதனை எழுதவில்லை. எனவே தயவு செய்து என்னை இதற்காக பாராட்ட வேண்டாம்.

நமக்குள் இருக்கும் குறுகிய வட்டம் இதனால் விரிவடைந்து நம்மால் முடிந்த உதவியை குழந்தைகளுக்கு செய்ய அனைவரும் ஒரு நிமிடமாவது நினைத்து பார்த்தார்களானால்கூட போதும். இன்றும் அனைத்து ஏழைக் குழந்தைகளுக்கும் பார்த்த மாத்திரத்தில் உதவி செய்யும் என் அம்மாவால் தனது பேரக்குழந்தையாக மற்றொருவர் பெற்ற குழந்தையை ஏன் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. நீ என்ன வேணாலும் உதவி செய். எதாவது சொன்னேனா. ஆனால் இது மட்டும் வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். எத்தனை எடுத்து சொல்லியும் மாற்ற முடியவில்லை. இனி வரும் நம்மைப் போன்ற இன்றைய ஜெனரேஷினிலாவது ஒரு மாற்றம் ஏற்படாதா என்று மனம் நினைக்கிறது. மற்றவர் செய்யும்போது பாராட்டும் நாம் , அதனை நாமாக செய்ய தயங்குகிறோம்.

இதில் மனசு நோகும் வார்த்தைகள் அது எவனுக்கும் எவளுக்கும் பொறந்துச்சோ என்றெல்லாம் பேசுவது. என்ன ஜாதியோ, மதமோ என்றும் நம்ம ஊரில் சொல்வார்கள். இப்படியெல்லாமே தெரிந்து இருந்தால் அந்தக் குழந்தை அங்கே போய் சேர்ந்துவிடாதா. குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அதன் எதிர்காலம் இப்படி ஆனதுக்கூட அதுக்கு தெரியாது. ஒரு முறை குழந்தை தத்தெடுத்து கொள்வது பற்றி சுஜாதா ஒரு புக்கில் எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது. அவர்களுக்கு அவர்களைப் பற்றிய உண்மைகளை சரியான வயதில் சொல்லிவிடுவது நலம். பேருக்கு தத்தெடுத்துவிட்டு பிறகு கவனிக்க முடியாமல் போய் திரும்ப அவர்களை ஆசிரமத்தில் விட்டுவிட்டு வரும் கதையும் நடக்கிறது. எனவே இது மிகவும் யோசித்து நம்மால் கடைசி வரை முடியும் என்றால் மட்டும் செய்ய வேண்டிய விஷயம். இது ஸ்பான்சருக்கும் பொருந்தும். ஸ்பான்சர் என்பது வேறு, நன்கொடை என்பது வேறு.

நாம் நமது தெருவிலிருந்தே இதனை செய்யத் தொடங்கலாம். நம்கொடை வழங்குவது யாரிடம் போய் சேருமோ என்ற ஐயம் இல்லாமல் நாமே நமது ஊரில் கஷ்டப்பட்டு படிக்கும் ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்து உதவிகள் செய்யலாம். அது நமது தூரத்து சொந்தமாகவும்கூட இருக்கலாம். நமது நாட்டில் வசிக்கும் நம் பெற்றோரின் மூலமாக கண்டுபிடிக்கலாம். நீங்கள் ஊருக்கு செல்லும்போது தேர்வு செய்யலாம். அப்பா, அம்மா இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்குதான் என்றில்லாமல் கஷ்டப்படும் குழந்தைக்கு நமது உதவியை செய்யலாம். இதை நம்மால் ஒழுங்காக செய்ய முடிந்தால் பிறகு ஸ்பான்சரைப் பற்றி நினைக்கலாம். இதற்கும் இண்டர்நெட் முலமாக ஆரம்பிப்பதை விட நமது ஊரில் இருக்கும் ஆசிரமங்களுக்கு சென்று பார்த்து முடிவெடுக்கலாம். பல பெரிய காப்பகங்களை விட இப்படி பெயர் தெரியாத ஆசிரமங்களில் வளரும் குழந்தைகளுக்குதான் உதவி கிடைப்பது கடினம். அனைவரும் இனியாவது யோசிப்போமா. எத்தனை டாய்ஸ், டிரஸ் என்று நமது குழந்தைகளை சந்தோஷப்படுத்துகிறோம். அதெல்லாம் கிடைக்காத ஒரு குழந்தையின் மனநிலையை நினைத்துப் பார்த்தது உண்டா? அதனை யாராவது மனசார கொஞ்சி இருப்பார்களா? அதன் செயல்களை யாராவது பாராட்டியிருப்பார்களா? இது போல் கேள்விகளை நினைத்தால் எப்போதும் மனது கனக்கும். பதில் நம்மால் சொல்ல முடியாது. இனி நாம் ஊருக்கு செல்லும்போது ஒரு முறையாவது அவர்களை சந்திக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டால் போதும். நிச்சயம் மாற்றங்களை நாம் உருவாக்கலாம்.

மேலும் சில பதிவுகள்