கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா?

<table width="98%"><tr><td align="center">
</td></tr></table>
<br />
அறுசுவை உறுப்பினர்கள், வருகையாளர்களின் வேண்டுகோளினை ஏற்று, அறுசுவையில் மகளிருக்கென சிறப்புப் பகுதி ஒன்று வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பகுதியில் சமையல் அல்லாத மற்ற பல விசயங்கள் இடம்பெறும். அதில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றேன்.
<font color="#900000"><b>
அழகு குறிப்புகள்
கைவினைப்பொருட்கள் தயாரிப்பு
தையற்கலை
கவிதைகள்
கதைகள்
கட்டுரைகள்
ஆடை அலங்காரம்
குழந்தை வளர்ப்பு
குடும்ப பராமரிப்பு..
</b></font>
இப்படி இன்னும் ஏராளமான பகுதிகள் இணைக்கப்படவுள்ளன. அனைத்துப் பகுதிகளையும் ஒரே நாளில் கொண்டு வருவது என்பது சற்று சிரமமானது. ஒவ்வொன்றாக விரைவில் சேர்க்கவுள்ளோம். இதில் கதை, கவிதை, கட்டுரை பிரிவுகளுக்கு ஆர்வம் உள்ள நேயர்களிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளிலும் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் படைப்புகளை வழக்கம்போல் கீழே தொடர்புக்கு என்று உள்ள லிங்க் மூலமாக எங்களுக்கு அனுப்பி வைக்கவும். அல்லது நேரடியாக feedback at arusuvai.com என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் செய்யலாம்.

இதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே படைப்புகளை அனுப்பலாம்.

<b>விதிமுறைகள்:
</b>
1. படைப்புகள் தங்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். பிற ஊடகங்களில் இருந்தோ, தளங்களில் இருந்தோ எடுக்கப்பட்டிருக்கக்கூடாது.
2. உங்களது சொந்த படைப்புகள் என்றாலும், வேறு எந்த ஊடகத்திலும் அவை ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.
3. படைப்புகளின் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நபரையோ, அமைப்புகளையோ குறை கூறுவதாக இருக்கக்கூடாது.
4. படைப்புகளை தேவைப்படின் மாற்றியமைக்கவோ, நிராகரிக்கவோ அறுசுவை நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
5. படைப்புகளை அனுப்புவோர் கண்டிப்பாக அறுசுவையில் உறுப்பினராக பெயர்ப்பதிவு செய்திருத்தல் வேண்டும். படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் வெளியிட விரும்பும் பெயர் (புனைப்பெயரும் கொடுக்கலாம்), பதிவு செய்துள்ள பெயர் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடவும்.
6. நிராகரிக்கப்பட்ட படைப்புகளை திரும்ப அனுப்புதல் இயலாது. ஆகவே, எந்தவொரு படைப்பையும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பவும்.
7. படைப்புகள் அனைத்தும் கண்டிப்பாக தமிழில்தான் இருக்கவேண்டும். ஆங்கிலம், தமிங்கிலம் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
8. படைப்புகளுக்கு சன்மானம் எதுவும் கிடையாது.(எங்களின் அன்பையும், மற்றவர்களின் பாராட்டையும் தவிர)

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கே கேள்விகள் எழுப்பலாம்.

அன்புடன்
பாபு

அட்மின் அவர்களுக்கு
அருசுவை என்ற இந்த தளம்
சமையலுக்கானது என்ற சின்ன வட்டத்திலிருந்து பரந்து விரிந்து பல பயனுள்ள விஷயங்களை தாங்கிவரப்போவதை அறிந்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!தாங்கள் அறிவித்த பல விஷயங்கள் எனக்கு பிடித்தமான பகுதிகள்,ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்!தங்கள் முயற்ச்சியினால் எங்களுக்கு நிறைய்ய பயனுண்டு,வாழ்த்தி வரவேற்க்கிறேன்.
ரஸியா மாலிக்

அன்பு தம்பி, திரு அட்மின் அவர்களுக்கு எப்படி இருக்கின்றீர்கள்? நமது புதிய வரவான மகளிருக்கென்ற தனி சிறப்பு பகுதி மிகவும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதில் வரயிருக்கும் தலைப்புகளும் மிக மிக சுவாரசியமாகவும் உற்சாகமாகவும் எல்லோரும் பங்கு பெறும் வகையிலும், பயன் பெறும் வகையிலும் அமைந்துள்ளதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஒரு சந்தேகம், மகளிருக்கென்று இருப்பதைப் போல் ஆண்களுக்கென்று தனியாக தொடங்குவீர்களோ... என்று சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் இப்பொழுது தான் ஆண்களும் எங்களுக்கிணையாக பியூட்டி பார்லல் எல்லாம் சென்று தங்களை அழகுப் படுத்திக் கொள்கின்றீர்கள், எங்களுக்கிணையாக சமைக்கின்றீர்கள், குழந்தையை வயிற்றில் சுமப்பதைத் தவிர எங்களுடன் எல்லா விதத்திலும் போட்டி போடுவதால் பாவம் போனால் போகட்டும் என்று அவர்களுக்கென்று ஒரு பகுதி எங்களைப் போல் தனியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். அல்லது ஆண்களும் இதில் விருப்பப்பட்ட தலைப்புகளில் பங்கு பெற முடியுமா என்று சிறிய குழப்பம்.மற்றபடி கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளிலும், விதிமுறைகளிலும் என்னைப் பொருத்தவரையில் எந்த சந்தேகமுமில்லை. அட்டகாசமாக அதை வரவேற்க ஆவலோடு இருக்கின்றேன்.நன்றி.

அன்புள்ள சகோதரிக்கு,

நலம். தாங்கள் மற்றும் குடும்பத்தினர் நலமா? புதிய (ரகசியத்) தொழில் எப்படி சென்று கொண்டிருக்கிறது? நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நோக்கி ஒரு பதிவு கொடுத்து இருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி.

மகளிருக்கான சிறப்பு பக்கத்தில் மகளிர் மட்டுமே கலந்து கொள்ள இயலும் என்பது விதியல்ல. அதில் இடம்பெறும் விசயங்கள் பெரும்பாலும் மகளிருக்கானவை. ஆண்களும் அதில் பங்கேற்கலாம். பார்வையாளர்களாக அறுசுவைக்கு வருகை தரும் ஏராளமான ஆண்கள், உறுப்பினர்களாகி பங்களிப்பு கொடுப்பது மிகவும் குறைவு. மன்றம் போன்ற பகுதிகளை பார்த்தாலே தெரியும். ஒருவேளை பெண்கள் அளவிற்கு ஆண் வருகையாளர்கள், பங்களிப்பவர்கள் எண்ணிக்கை கூடும் போது ஆண்களுக்கான சிறப்பு பகுதிகள் கொண்டு வருவதில் எமக்கு கஷ்டம் எதுவும் இல்லை.

இந்த சிறப்பு பக்கம் அறுசுவையின் பாதையில் இருந்து விலகி போடப்படுகின்ற கிளைப் பாதைதான் என்றாலும், காலத்தின் கட்டாயமாக, நேயர்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்வதற்காக கொண்டு வரப்படுகின்றது. இதன் வெற்றியைப் பொறுத்து மேலும் பல விசயங்களை தீர்மானிக்கவுள்ளோம்.

அன்புள்ள திரு அட்மின் தம்பி அவர்களுக்கு, எங்கள் குடும்பத்தார் அனைவரையும் விசாரித்து பதில் எழுதியதற்கு ரொம்ப சந்தோசம்.நாங்கள் அனைவரும் நல்ல சுகம், அதுப் போல் உங்கள் சுகத்தையும் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி. தங்களின் கேள்விக்கு பதிலாக என்னுடைய தொழில் எந்த வித ரகசியமில்லாமல் நன்றாக ( ரோட்டில்)ஓடிக்கொண்டுள்ளது.அதில் முழு நம்பிக்கை வந்தவுடன் முதலில் சொல்லப் போவது உங்களிடத்தில் (அறுசுவையில்)தான்.மற்றபடி ரசசியமெல்லாம் கிடையாது. இதில் தோல்வி அடைந்தாலும் கூட அதையும் மற்றவர்களுக்கு பயனுரும் வகையில் ஒரு பதிவாக எழுதுவேன்.

சரி இனி நம் விசயத்திற்கு வருகின்றேன், தாங்கள் கூறியிருப்பதுப் போல் அறுசுவை உறுப்பினர்களில் ஆண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு தான். ஆனால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது அறுசுவையில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லையோ என்று சந்தேகிக்கின்றேன். ஒரு வேளை அவர்களுக்கும் முக்கியதுவத்தை கொடுத்தால் நிச்சயமாக அதை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒரு விசயத்தைக் குறித்து பொதுவாக எல்லொருக்கும் அழைப்பு விடுப்பதற்கும், தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது தானே.

அதை விளக்கமாக கூறுகின்றேன்.திருமணத்திற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையில், முறைப்படி அழைப்பு விடுவித்திருந்தாலும், நேரில் பார்த்து கொடுக்கும் பொழுது பத்திரிக்கையில் உள்ளதையே திரும்ப கூறினாலும், அரைமனதுடன் இருந்தவர்களுக்கு கூட நேரில் வந்து அழைத்தார்களே என்று எவ்வளவு தடங்கள் இருந்தாலும் தவறாமல் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வருவதைப் போல், அறுசுவையில் ஆண்களுக்கும் சிறப்பு பகுதி அல்லது தனி தலைப்பு கொடுத்து அழைப்பு விடுக்கும் பொழுது நிச்சயம் கூட்டம் அலைமோதும் என்று நம்புகின்றேன்.

மேலும் இதை நான் மீண்டும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு காரணம் பெண்களப் போலவே ஆண்களுக்கும் அழகு குறிப்பு, வீட்டு குறிப்பு, சமையல் குறிப்பு, மருத்துவக் குறிப்பு, மற்றும் குடும்ப ஆலோசனைகள், கேள்விகள் , சந்தேகங்கள் கட்டாயம் இருக்கும் என்றே நம்புகின்றேன். எத்தனையோ விசயங்களை கூட யாரிடத்தில் கூறுவது என்று தெரியாமல் மன உளைச்சலில் இருப்பார்கள்.அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக அறுசுவை திகழ கூடாதா என்பது எனது ஆவல். இது குறித்து தங்களை மறுபரிசீலனை செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். சிரமம் என்றால் தவிர்த்து விடவும்.நன்றி.

என் இனத்தாருக்கு(ஆண்) ஆதரவாக ஆலோசனைகள் பரிந்துரைக்கும் அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி :-)

//ஆண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு தான். ஆனால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது அறுசுவையில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லையோ என்று சந்தேகிக்கின்றேன்//

எதை வைத்து தாங்கள் அறுசுவையில் ஆண்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று சந்தேகப்படுகின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

இதுநாள் வரையில் அறுசுவையில் ஆண் பெண் என்று பேதம் பார்த்து, எந்த ஒரு பிரிவுக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. நமது முக்கிய சப்ஜெக்ட் சமையல் என்பதால் பெண் வருகையாளர்கள் அதிகம். அதற்காக இதனை பெண்கள் தளம் என்று நான் கூறமாட்டேன். அறுசுவை மகளிருக்கான இணையத்தளம் என்று எப்போதோ ஒரு சகோதரி சொன்ன போது நான் அவசரமாக மறுத்து இருக்கின்றேன். அப்படி எல்லாம் முத்திரை குத்திவிடாதீர்கள் என்று. இப்போதும் அதையேத்தான் கூறுகின்றேன்.

இதுநாள் வரையில் எந்த இடத்திலும் பெண்களுக்கு என்று சிறப்பு முக்கியத்துவம் தரப்படவில்லை. கூட்டாஞ்சோறு, குறிப்புகள் வழங்குதல், மன்றம் என்று எந்த இடத்திலும் மகளிருக்கு மட்டுமே என்பது போன்ற கட்டுப்பாடுகள் கிடையாது. மன்றத்தில் மகளிருக்காக ஒன்றிரண்டு பிரிவுகள் இருக்கின்றன. கர்ப்பிணி பெண்கள் போன்று (கர்ப்பிணி ஆண்களுக்கு வாய்ப்பு இல்லாததால்). அதனை தவிர்த்தால் அனைத்து பிரிவுகளும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதே. அழகு குறிப்புகள் பக்கத்தில்கூட பெண்களுக்கு என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

//ஆண்களுக்கும் அழகு குறிப்பு, வீட்டு குறிப்பு, சமையல் குறிப்பு, மருத்துவக் குறிப்பு, மற்றும் குடும்ப ஆலோசனைகள், கேள்விகள் , சந்தேகங்கள் கட்டாயம் இருக்கும் என்றே நம்புகின்றேன். //

கண்டிப்பாக இருக்கும். அவர்கள் மன்றத்தில் எல்லா கேள்விகளையும் கேட்கலாமே. சிலர் கேட்டும் இருக்கின்றார்களே. இங்கே இப்போது ஆண்கள் எதிலும் பங்கு கொள்ள தடையேதும் இல்லையே. நானும் அவர்கள் பங்கு கொள்ள வேண்டும் என்பதைத்தானே விரும்புகின்றேன்.

இப்போது சிறப்பு பிரிவு கொண்டு வருவது, நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் நேயர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யவே. நீங்கள்கூட இது சம்பந்தமாக சில ஆலோசனைகள் கொடுத்து இருக்கின்றீர்கள். இது நான் சென்று கொண்டிருக்கும் தடத்தில் இருந்து சற்று விலகிச் செல்லும் செயல். இருந்தும் துணிந்து செய்வதற்கு காரணம் ஏற்கனவே இது சம்பந்தமான விசயங்களுக்கு மன்றத்தில் இருக்கும் ஆதரவு, அதை தவிர்த்து எனக்கு வந்த ஏராளமான கோரிக்கைகள். தேவைகளின் கட்டாயத்தை அறிந்துதான் நான் இதனை செய்கின்றேன்.

புதிய பகுதிகள் கொண்டு வருவது என்பது மிக எளிதான விசயம் அல்ல. இந்த பகுதிகளுக்காக 6 நபர்கள் பின்னணியில் உழைத்து வருகின்றனர். அதற்காக நிறைய செலவு செய்கின்றோம். எங்களால் இயலுமா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே புதிய விசயங்களில் இறங்குகின்றோம்.

உங்களுடைய திருமண அழைப்பு உதாரணம் பொருத்தமாக இல்லை. விருப்பம் இல்லாவிடினும், அழைப்பிற்காக வந்து கலந்து கொள்ளுதல் என்பது இங்கே ஏற்புடையது அல்ல. திருமணம் என்பது ஒரு நாள் அரை நாள் விசேஷம். இஷ்டமே இல்லையென்றாலும் கூப்பிட்டதற்காக போய் எட்டி பார்த்து விட்டு வந்துவிடலாம். இங்கே அது போன்ற எண்ணத்துடன் உறுப்பினர்கள் ஒருமுறை மட்டும் வந்து போனால், வெகு விரைவிலேயே அந்த பகுதி தோல்வியடைந்துவிடும். உங்களது ஆர்வம், நோக்கம் எனக்கு புரியாமல் இல்லை. வளர்ச்சிக்கு தேவையானவற்றை, தேவைப்படும் காலத்தில் கண்டிப்பாக செய்துவிடுகின்றேன்.

அன்பு தம்பி அட்மின் அவர்களுக்கு, ஆண்களின் பகுதிக்கான தங்களின் விளக்கத்தை கண்டேன். ஏதோ வழக்கப்படி மனதில் தோன்றியதைக் கூறி இருந்தேன் அவ்வளவு தான். அதில் அறுசுவையில் ஆண் உறுப்பினர்களையும் அதிக அளவில் பங்கு பெற செய்ய வேண்டும் என்ற நோக்கம் தானே ஒழிய, மேலும் அதற்காக ஏதாவதொரு ஆலோசனையை வ்ழங்களாம் என்று தான் நினைத்தேன். அதற்காக அறுசுவையை குற்றம் சொல்ல வேண்டும் என்று கருதவில்லை,அவ்வாறு சொல்வதற்கும் எதுவும் இல்லை என்பது தான் உண்மை.எனது கருத்து அவ்வாறு தொணித்திருந்தால் தயவுச் செய்து மன்னித்து விடுங்கள். இன்றைக்கில்லாவிடில் ஒரு நாளைக்கு ஆண்களின் பங்களிப்பும் அறுசுவையில் அதிக்கரிக்கத்தான் போகின்றது என்பது என்னவோ உறுதி. ஆனால் என்னைப் பொருத்தவரையில் ஆண் நேயர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு அவர்களிடத்தில், ஏதோ ஒரு காரணம் இருக்கின்றது என்று தான் உணரமுடிகின்றது. அது என்னவாயிருக்களாம் என்று ஆண் உறுப்பினர்களால் தான் சரியாக கூற முடியும் என்று நினைக்கின்றேன், அல்லது நீங்கள் தான் அதை ஆராய வேண்டும் (வாக்கெடுப்பு நடத்தியாவது)என்று கேட்டுக் கொள்கின்றேன்.எனது பதிவிற்கு பதிலளித்த தங்களின் பொன்னான நேரத்திற்கு மிக்க நன்றி.

மிக மிக மகிழ்ச்சியான விஷயம் !:):):0
அறுசுவை அங்கத்தினர்களின் திறமைகள் அனைத்தும்
கண்டிப்பாக வெளிப்படும்! (என் திறமை உட்பட)!
நன்றி
விமலா.

அட்மின் அவர்கலுக்கு,
புதிதாக சேர்க்கபடவிருக்கும் , கதை,கவிதை ....... மிகவும் மகிழ்ச்சி உள்ளதாக இருக்கிறது கன்டிப்பாக இந்த யோசனை எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் எல்லாம் படைபுகள் தர காத்துக்கொன்டிருக்கிறோம் ஆனால் ஒரு வேன்டுக்கோள் கன்டிப்பாக சிறந்த கவிதை,கதை (;;;;;) என்று மன்றத்தில் அறிவிக்கப்படவேண்டும் அப்போது தான் இன்னும் சுவரிசியமாக இருக்கும் வேன்டாத வலவல பேச்சுக்கு இடம் இருக்காது. இந்த கருத்தை யோசியுங்கள் . இந்த தளம் மெம்மேலும் வளர என் வழ்த்துக்கள்.

நன்றி
மாலினிசுரேஷ்

சகோதரி மனோகரி அவர்களுக்கு,

நான் பலமுறை குறிப்பிட்டதுதான். உங்களது எந்த கருத்திற்கும், ஆலோசனைக்கும் நான் கோபப்பட்டது கிடையாது. நீங்கள் என்று கிடையாது, யார் எனக்கு என்ன கூறினாலும் அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை யோசித்து, அதில் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை உடனே தெரியப்படுத்திவிடுகின்றேன். நீங்களும் எனது மறுப்பில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு, வருத்தப்படாமல் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில். ஆனால், நீங்கள் அடிக்கடி 'தவறு இருந்தால் மன்னித்துவிடுங்கள்' என்று கூறும்போது கஷ்டமாக இருக்கிறது. ஏற்கனவே சொன்னதுதான். நீங்கள் தவறாகவே கூறினாலும், தவற்றை எடுத்துரைப்பேனே தவிர வருத்தம் கொள்ளமாட்டேன்.

அறுசுவையின் வளர்ச்சிக்கு நீங்கள் ஆற்றிவரும் பங்கை நான் மட்டுமல்ல, அறுசுவை நேயர்கள் அனைவரும் நன்கு அறிவர். உங்களின் ஆலோசனைகள் அனைத்தும் அதன் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கிலே இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களால் இயன்ற போது உங்களின் அனைத்து ஆலோசனகளுக்கும் நிச்சயம் செயல்வடிவம் கொடுக்கின்றோம்.

சகோதரி விமலா மற்றும் மாலினி அவர்களுக்கு,

உங்கள் திறனை உலகுக்கு காட்டும் நோக்கிலேயே புதிய பகுதிகள் கொண்டுவரப்படுகின்றன. நீங்கள் அனைவரும் கட்டாயம் பங்களிக்க வேண்டும்.

மாலினி, சிறந்த கதை கவிதைகளை நான் மன்றத்தில் அறிவிப்பதில் சிரமம் இருக்கின்றது. ஆனால், கதை கவிதைகள் சிறப்பாக இருக்கும்போது அவை தானாகவே மன்றத்திற்கு வந்துவிடும். நிச்சயம் அனைவரும் அதை பாராட்டுவர்.

நீங்கள் உங்களின் படைப்புகளை இப்போதே அனுப்ப ஆரம்பித்துவிடுங்கள்.

அனைவரின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும் சில பதிவுகள்