பூண்டு பொடி

தேதி: August 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

வரமிளகாய் - 10
கொத்தமல்லிவிதை - அரை கப்
பூண்டு பல் - 20
உப்பு - தேவையான அளவு


 

ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வரமிளகாய், மல்லியை வறுத்துக் கொள்ளவும்.
பூண்டுப்பற்களை உதிர்த்துக்கொள்ளவும், ( பூண்டு தோலை உரிக்கக்கூடாது )
மிக்ஸியில் மிளகாய், உப்பு, மல்லியை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
பூண்டு பற்களை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.


இந்த பூண்டுப்பொடி இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hai Sister,
I tried ur podi with half the amount of dried chilli.It came out very well.Really very very tasty.now i am eating 6 idlis instead of 4.I hav included this in my favourite recipe list.My heartfelt thanks 2 u.

Jasmin

இன்று பூண்டு பொடி செய்தேன். சப்பாத்தி இட்லி, தோசை எல்லாவற்றுடனும் நல்லா இருந்தது.

மாலதி,

படிக்கும் போதே நல்லா இருக்கு. சென்சு பார்த்து அப்புஅரம் சொல்ரேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மாலதியக்கா, இதுக்கு பூண்டைப் பச்சையாகப் போடுவதா? வதக்க வேண்டாமா? பதில் தேவை பிளீஸ்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா..!! மிளகாய், மல்லியை மட்டும்தான் வறுத்துக்கொள்ளவேண்டும். பூண்டு கடைசியில் பச்சையாகவே சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.

மாலதி அக்கா, இந்த பொடி நல்ல வாசனையாக தோசைக்கு பொருத்தமாக இருந்தது. நான் மிளகாய் குறைத்து போட்டேன். நன்றி உங்களுக்கு.

அன்புள்ள மாலதி!

உங்களின் பூண்டுப்பொடி, முருங்கைக்காய் ரசம், பருப்பு சாதம், அனைத்தும் செய்தேன். வித்தியாசமான சுவையுடன் நன்றாக வந்திருந்தன. அதுவும் பூண்டுப்பொடி தனியா கலந்து மிகவும் நன்றாக இருந்தது.

தனியா சேர்த்து செய்த பூண்டுப் பொடி ரொம்ப நல்ல வித்தியசமான சுவையா இருந்தது மேடம்.

மேனகா..!! பூண்டுப்பொடியின் டேஸ்டே அதில் தனியா சேர்ப்பதுதான் பூண்டு பச்சையாக வைப்பதால் அதன் டேஸ்டும் நன்றாக இருக்கும். மேனகா..! நன்றிப்பா

மிஸஸ். மனோ..!! உங்க சமையலிலும் பாரம்பரியமான பழங்காலத்து முறைகளை நான் பலமுறை கவனித்து இருக்கிறேன்.
இந்த பூண்டுப்பொடி எங்கள் பாட்டிகாலத்து செய்முறை. இந்த பொடியில் தனியா சேர்ப்பதால் டைஜஷன் நன்றாக இருக்கும். இதில் பூண்டு பச்சையாக சேர்ப்பதால் இந்த பொடியை பத்துநாட்கள் மட்டுமே வைத்து உபயோகிக்க முடியும். ஃப்ரிட்ஜில் வைத்திருப்பது நலம்.
அரிசிபருப்பு சாதம் எங்கள் மாமியார் வீட்டு ஸ்பெஷல். செய்வதும் எளிது.
முருங்கைகாய் ரசம் குழந்தைகளுக்கு சாதத்தில் போட்டு பிசைந்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
இவைகளை செய்து பார்த்து சுவைத்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி...!!

எஸ்...வின்னி இந்த கோடை காலத்திற்கு ஏற்றவாறு ஒன்று மிளகாயை குறைத்துக்கொள்ளவேண்டும் அல்லது மல்லியை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும். சுவையில் குறைவில்லாமல் நன்றாகத்தான் இருக்கும். பின்னூட்டத்திற்கு நன்றி..!!

மாலதியக்கா, பூண்டுப்பொடி செய்தேன். ஒரு வித்தியாசமான சுவையாக இருந்தது. காரம்தான் அதிகம். மல்லி சேர்த்திருப்பதால் புது சுவையை உணர முடிந்தது. புட்டுக்கு தொட்டுச் சாப்பிட நன்றாக இருந்தது.

உறைப்பைக் குறைக்க கொஞ்சம் எலுமிச்சம் புளி சேர்த்தேன் நன்றாகவே இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்களுடைய குறிப்பில் இருந்து பூண்டு பொடி செய்தேன். மிகவும் நன்றாக இருந்த்து. நல்லெண்ணெய் சேர்த்து தோசையுடன் சாப்பிட அருமை.
இதுநாள் வரை பருப்பு இல்லாமல் இட்லி பொடி செய்த்து இல்லை.. இது வித்தியசமாக இருந்த்து.
குறிப்புக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மாலதிஅக்கா உங்களுடைய பூண்டுப் பொடி செய்தேன் நல்ல சுவையாக இருந்தது.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த பூண்டுப்பொடியின் படம்

<img src="files/pictures/aa213.jpg" alt="picture" />

அதிரா..!! சாதாரணமாக பூண்டுப்பொடியை இதற்கு முன்னால் சுவைத்திராதவர்கள் நைஸாக அரைத்து விடுவார்கள். அல்லது பூண்டுத்தோலை உரிக்காமல் போட பயந்துகொண்டு உரித்துப்போட்டு பொடியின் தோற்றத்தையே மாற்றிவிடுவார்கள். ஆனால் நீங்கள் கரைக்டாக நாங்கள் எந்த கன்ஸிஸ்டன்ஸியில் பொடி செய்வோமோ அதே மாதிரி செய்து இருக்கிறீர்கள்.
ஃபோடோ எடுத்து அனுப்பியதற்கு தேங்க்ஸ்..!!