தோப்பம்

தேதி: February 25, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
<b>பூரணத்திற்கு:</b>
தேங்காய் - ஒன்று
பொட்டுக்கடலை மாவு - ஒரு கைப்பிடி
வெல்லம் - ஒரு கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
<b>மேல்மாவிற்கு:</b>
மைதா மாவு - ஒன்றரை கப்
இட்லி மாவு - கால் கப்
பேக்கிங் பவுடர் - அரைத் தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி


 

தேங்காயைப் பூந்துருவலாகத் துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியைச் சூடாக்கி, அதில் இந்த தேங்காய்த் துருவலைப் போட்டு, குறைவானத் தீயில் அதில் உள்ள நீரெல்லாம் சுண்டும் வரை வதக்கவும்.
பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி, அது சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலை மாவு, ஏலப்பொடி, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து கையால் பிசையவும்.
நன்கு பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
மேல் மாவிற்கு தேவையான அனைத்தையும் சிறிது நீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடாகியதும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மேல் மாவில் தோய்த்து எண்ணெய்யில் போடவும்.
உருண்டை வெந்து இளம் பழுப்பு நிறமானதும் எடுத்து விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தங்களின் தோப்பம் இனிப்பினை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. சுழியனைப் போல் இருந்தாலும் சுவையில் வித்தியாசம் நிறையவே இருந்தது. வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. மேலும் இது போன்ற குறிப்புகளைத் தருமாறு வேண்டிக்கொள்கின்றேன்.