உதவி தேவை

உங்கள் இணைய தளம் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு இணைய தள வசதி கிடைப்பது அரிது. எனவே, இந்த தளத்தில் உள்ள தகவல்களை மொத்தமாக டவுன்லோடு செய்து படிக்க முடியுமா?

சகோதரி கீதாவுக்கு,
தாங்கள் கூறிய கருத்து வரவேற்க்கத்தக்கதாகும். நான் ஒரே ஒரு பக்கத்தினை சேமிக்க முயற்ச்சி செய்து பார்த்தும் முடியவில்லை. இதற்கு இனைய தள பொறுப்பாளர் என்ன அறிவுரை அளிக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன சேகர் சார், வரவேற்கத்தக்க கருத்தா?! அறுசுவையை மொத்தமா டவுன்லோடு பண்ணி வச்சு வீட்ல உக்காந்து படிக்கிறது உங்களுக்கு வரவேற்கத்தக்க கருத்தா? எல்லாரும் இப்படி பண்ணிட்டா அப்புறம் அறுசுவையை பார்க்க வர்றது யாரு? :-)

சகோதரி அவர்களுக்கு, மன்னிக்கவும். நீங்கள் இதே கேள்வியை மின்னஞ்சலில் கேட்டு இருந்தீர்கள். நானும் தங்களுக்கு பதில் அனுப்பியிருந்தேன். ஒருவேளை தங்களுக்கு அது கிடைக்கவில்லையோ என்னவோ (bulk mail ல் பாருங்கள்).

ஒட்டுமொத்தமாக டவுன்லோடு செய்துகொள்வது என்பது இங்கே இயலாது. அறுசுவை மொத்தமும் static pages கிடையாது. அறுசுவை பழைய தளத்தை வேண்டுமானால் அவ்வாறு செய்ய இயலும். புதிய தளத்தில் அனைத்தும் Dynamic pages. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு spiders, bots போன்றவற்றை தடுத்து வைத்துள்ளோம். எனவே அவ்வாறு செய்ய இயலாது.

என்னிடம் அவ்வபோது சிலர் இதே கேள்வியை கேட்கின்றனர். எனக்கு அவர்களின் ஆர்வம் புரிகின்றது. ஆனால், எனது நிலையை அவர்கள் யாரும் புரிந்து கொள்வதில்லையே என்பதில்தான் எனக்கு வருத்தம். நான் மேலே விளையாட்டாக குறிப்பிட்டாலும் அதில் உள்ள ஒரு சீரியஸ்ஸான பிரச்சனையை நீங்கள் கவனிக்க வேண்டும். எந்த ஒரு இணையத்தளத்தையும், அதுவும் வியாபார ரீதியில் எடுத்துச் செல்லப்படும் ஒரு தளத்தை முழுவதும் டவுன்லோடு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று யாரும் எளிதாக கொடுத்துவிட மாட்டார்கள். மூன்று வருடங்களாக இந்த தளம் இருந்தாலும், இதில் நான்கு வருட உழைப்பு இருக்கின்றது. ஒரு தளத்தின் வெற்றியை நிர்ணயிப்பது அந்த தளத்திற்கு வரும் வருகையாளர்கள்தான். அவர்கள் மீண்டும் மீண்டும் தளத்தினை பார்வையிட வருதல்(செய்தல்)தான் வெற்றியே. இதற்குதான் அத்தனை இணையத்தளங்களும் பகீரத பிரயத்தனம் செய்கின்றன. அதைத் தாங்களாகவே குறைத்துக் கொள்ள யார் விரும்புவர்?

எத்தனையோ சிரமங்களுக்கிடையில் நாங்கள் இந்த தளத்தினை தொடர்ந்து நடத்திவருவதற்கு காரணம், அதிகரித்து வரும் வருகையாளர்கள், அதனால் எங்களுக்கு கிடைக்கும் உற்சாகம். இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதால், நாமும் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் எங்கள் உழைப்பை அதிகரித்து இதற்காக இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றோம். நீங்கள் கேட்டது போன்ற வசதிகள் செய்து கொடுத்தால், வருகையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும். அது எங்களின் உற்சாகத்தை குறைத்துவிடும். நாங்கள் உற்சாகம் இழந்தால் அதன் பாதிப்பு அறுசுவையில் தெரியும்.

சகோதரி அவர்களே, வீட்டில் நெட் கனெக்சன், கம்ப்யூட்டர் இல்லாமல், பிரவுசிங் சென்டருக்கு அவ்வபோது சென்று, அறுசுவை குறிப்புகளை பார்த்து, எழுதி எடுத்துச் செல்லும் சகோதரிகள் நிறைய பேர் இருக்கின்றனர். நீங்கள் மென்பொருள் வல்லுனர் என்று வேறு குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். நீங்கள் நினைத்தால் இணைய வசதி பெறுதல் கடினமா என்ன? அறுசுவை மொத்தத்தையும் எனக்கு தாருங்கள் என்பதற்கு பதில், அறுசுவைக்காகவென்றே நான் இணையத்தள வசதியை வாங்கியுள்ளேன் என்று அடுத்தமுறை எங்களுக்கு சொல்லுங்கள். இன்னும் பலமடங்கு உற்சாகமாக நாங்கள் பணியாற்றுவோம். நாங்கள் உற்சாகமடைந்தால் உங்கள் அனைவருக்கும் இன்னும் ஏராளமான பயன்கள் கிடைக்கும்.

எங்களின் நிலை புரிந்து கொள்வீர்களா?

சேகர் சார், போன பதிவில் குறிப்பிட மறந்துவிட்டேன். ஒரு பக்கத்தை அப்படியே save செய்ய முயற்சி செய்தீர்கள் என்றால் இயலாமல் போகலாம். அதற்கு பதில், பக்கத்தில் உள்ள குறிப்பினை மட்டும் copy செய்து notepad அல்லது word ல் store செய்து கொள்ளுங்கள்.

அச்சிடுவதற்கு ஏற்ற பக்கத்தினை திறந்து (printer friendly page), அதனை save செய்தீர்கள் என்றால் அதில் பிரச்சனைகள் இருக்காது. ஆனால், இந்த வசதி யாரும் சமைக்கலாம் குறிப்புகளுக்கு செய்து தரப்படவில்லை.

சகோதரி கீதாவிற்கு தாங்கள் அளித்த பதில் எனக்கு திருப்தி அளிக்கிறது. அதே சமயம், வேன்டிய பக்கதினை மட்டும் சேமிக்கும் வசதியினை விளக்கிய விதம் உங்களின் பெருந்தன்மையை பரை சாற்றுகிறது.
தொடரட்டும் உங்களின் இந்த அரும் பனி. உங்கள் தோளோடு தோளாக உதவ நானும் காத்திருக்கிறேன்.

thiru admin avarkalukku

unmaileye ungalai paratukiren. puthiya paguthiyana neengalum seiyalam paguthi mikavum payanullathaga ullathu. naan ithumathiri hand work seithu parkka vendum enpathu enathu siru vayathu muthal viruppam. anal eppadi seivathu, enna seivathu enbathellam theriyathu. aanal intha puthiya paguthi romba romba ubayogamaga ullathu.I am very happy to say this. aanal ellarum tamilil aratai adikum pothu enaku eppadi type seivathu enbathu theriyamal mikavum kastapadukiren. analum nichayamaga neengal ithai parpeergal endra nambikail ithai eluthugiren. thank you and All the best

அறுசுவை பக்கத்திலே கீழே வந்தா 'எழுத்துதவி' லிங்க் இருக்கு. அதில வந்து தமிழ்ல டைப் பண்ணும்மா. இப்படி தங்கிலீஷ் லே டைப் அடிச்சா யாரும் பாக்க மாட்டாங்க. படிக்க மாட்டாங்க. என்ன புரிஞ்சுதா?
அன்புடன்
ஜெயந்தி

சகோதரி பிரியா அவர்களுக்கு,

மிக்க நன்றி. தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் எளிது. நீங்கள் இப்போது தமிங்கிலத்தில் அடித்துள்ளது போலவே கீழே எழுத்துதவி என்று இருக்கும் பக்கத்திற்கு சென்று டைப் செய்தீர்கள் என்றால் போதும். தமிழில் கிடைத்துவிடும். முயற்சி செய்து பாருங்கள். எவ்வளவு எளிது என்பது புரியும். அதில் கற்றுக் கொண்டவுடன் எகலப்பை(ekalappai) யை உங்கள் கணினியில் நிறுவிவிட்டீர்கள் என்றால் அதன் பிறகு மிக எளிதாக, நேரடியாக தமிழில் எங்கும் டைப் செய்யலாம்.

மேலும் சில பதிவுகள்