புகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்?

புகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்?
கணவன், மாமனார், மாமியார், மற்ற உறவுகள், பிரச்சனையே இல்லை.

உங்களுடைய அனுபவத்தில் யாரால், எந்த மாதிரியான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தது. அதனை எப்படி சமாளித்தீர்கள் என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். அதேபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் மற்றவர்களுக்கு உங்கள் அனுபவங்களும், ஆலோசனைகளும் பயன் தரலாம்.

குறிப்பு:

இனி வரும் வாக்கெடுப்புகளின் தலைப்புகள் அனைத்தும் மன்றத்தில், இங்கே விவாதிக்கப்படும். வாக்கு மட்டும் அளித்தவர், தன்னுடைய சுய விளக்கத்தையும் அளிப்பதற்கு இந்த விவாதப் பக்கம் பயன்படும்.

வாக்களிப்பை பற்றின விவாதத்திற்க்கு மட்டும் நம்ம லாகின் பேர் இல்லாம யார் வேனா பேசர மாதிரி இருந்தா இன்னும் கொஞ்சம் பயமில்லாம மனசில இருக்கரது சொல்லலாம்..உங்களுக்கும் உன்மையான பதில் அப்ப நிறைய்ய கிடைக்கும்னு நினைக்கிரேன்...
அதாயது வாக்களிக்கும்போதே ஒரு பேஜ் ஓபெனாகி அங்கே comments நம்ம பேர் இல்லாம கொடுக்கரதா இருந்த கொஞ்சம் தைரியமா பேசலாம்..கை அரிக்கிது எழுத..ஆனா பயமா இருக்கு தப்பா நெனச்சுகாதீங்க..இது வெரும் சஜெஷன் தான்

உங்களது பிரச்சனை புரிகிறது. யார் வேண்டுமானாலும் பதிவுகள் கொடுக்கலாம் என்று கொண்டுவந்தால், மிகவும் மோசமான பதிவுகள் எல்லாம் இங்கே விழும். கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம். பெயர்ப்பதிவு செய்யாமல் கருத்து தெரிவிக்கக்கூடிய விருந்தினர் பதிவேட்டை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியும். அதில் விழும் தேவையற்ற பதிவுகளை நீக்கவே தனியாக ஒரு ஆள் தேவைப்படுகிறது. சரி, உங்களது பிரச்சனைக்கு சில தீர்வுகள்.

1. பிரச்சனை உங்களது என்று சொல்லி கருத்து தெரிவிக்காதீர்கள். எனக்கு தெரிந்த தோழி ஒருவருக்கு.. என்று ஆரம்பிக்கலாம்.(இனி நீங்கள் உண்மையிலேயே உங்கள் தோழியின் பிரச்சனையை சொன்னாலும் யாரும் நம்பபோவதில்லை :-))

2. இந்த மாதிரி இடங்களில் பதிவுகள் கொடுப்பதெற்கென்றே தனியாக ஒரு பெயர் பதிவு செய்துகொள்ளுங்கள். (இப்படியும் சிலர் செய்கின்றனர். ஆனால் அட்மினை ஏமாற்றுவது மட்டும் கொஞ்சம் கஷ்டம்.)

3. இவை எல்லாவற்றையும் மீறி, நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்று சொல்லி, தைரியமாக வருவது வரட்டும் என்று உண்மையை உண்மையான பெயரில் எடுத்துரைக்கலாம். (உங்களுக்கு ஒரு பெரிய வசதி, வீட்டில வேற யாருக்கும் தமிழ் படிக்கத் தெரியாதுங்கிறது. அப்புறம் என்ன கவலை. சும்மா தூள் கெளப்புங்க.. அதுசரி, வோட்டிங்ல உங்க வாக்கு எதுக்கு? 1, 2, 3 or 4?)

Guess we got many more better things to do in this world than discussing abt such topics... Moreover, don't we have problems with our parents, siblings etc when we r with them?... but we still love them & many wouldn't like to talk such negative things abt them in a public forum... But somehow when it comes to our in-laws & family, attitude seems to be different... just my observation/view... This topic, to me, is in bad taste...

அட ஆளப்பாரு...எங்க பக்கத்து வீட்டு பாட்டி சொன்ன மாதிரி நான் எல்லாத்துக்கும் குத்துவேன்

இதில் மாமியாருக்குதான் அதிக ஓட்டுகள் விழப்போவது நிச்சயமாக தெரிந்த ஒண்று. எனக்குகூட கலியாணம் ஆகி வந்த புதுசில் மாமியாருடன் ஒத்து வரவேயில்லை. ஆனா, கடந்த பதினைந்து வருடமாக எங்களுக்குள் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அவர் இறந்து 15 வருடங்கள் ஓடிவிட்டது. புகுந்த வீடு என்றாலே மாமியார் பிரச்சனை தானாகவே வந்துவிடும் போல தெரிகிறது. இந்த மன்றத்தில்கூட சகோதரிகள் சிலர் வருத்தப்பட்டு சில விசயங்களை சொல்லி இருந்தார்கள். எனக்கு வாழ்க்கையில் நடந்தவற்றையும் மற்றவர்கள் அனுபங்களை கேள்விப்பட்டும் அந்த மாமியார் என்ற வார்த்தையை கேட்டாலே மனதில் ஒரு பெண் ஹிட்லரின் உருவம்தான் வருகிறது. இதில் கொடுமை என்ன என்றால், அடுத்த வருடத்தில் நானும் மாமியார் ஆகிவிடுவேன். மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே ங்கிறது சும்மா சொல்லப்பட்டது அல்ல. அதில யோசிக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு. இப்படி மருமகளா இருந்து மாமியாராகிற பெண்கள் தன்களுக்கு வந்த கஷ்டங்களை வச்சு தங்களுக்கு மருமகளா வர்ற போறவகிட்டே நாம் எப்படி நடந்துக்கணும்னு நினைக்க மாட்டாங்களா? இப்ப நான் அப்படிதான் நினைக்கிறேன். நாளைக்கு எனக்கு மருமகளா வர்றபோறவகிட்ட என்கிட்டே என் மாமியார் நடந்துகிட்ட மாதிரி நடந்துக்க கூடாதுன்னு நினைக்கிறேன். அவங்க எப்படியெல்லாம் இருக்கணும்னு நான் நெனைச்சேன்னோ அந்த மாதிரி எல்லாம் நான் இருக்கனும்னு நினைக்கிறேன். ஆனா, நிஜத்துல என்ன நடக்கும்கிறதை இப்பவே சொல்ல முடியாது. நான் நல்லமாதிரி நடந்துகிட்டாலும் எனக்கு கொடுமைக்கார மாமியார் பட்டம் கிடைக்கலாம். காலம்காலமா எதிரிகள் மாதிரி இருக்கிற ஒரே ஒரு உறவு இந்த மாமியார், மருமகள் உறவுதான் போல இருக்கு. இதை சரிசெய்வதற்கு வழியே இல்லையா?

இந்த விவாதம் (ஓட்டெடுப்பு) தேவையா என்பது என்னுடைய பனிவான கேள்வி. இதே கருத்தை Dsen-ம் கூறி இருக்கிறார். (சென் சீன நாட்டினரா?) இந்த ஓட்டெடுப்பினால் என்ன லாபம்? இது போன்ற தலைப்பிலான் விவாதங்களோ, ஓட்டெடுப்புகளோ, சமுதாய முன்னேற்றத்தை தடை செய்யும் என்பது என்னுடைய கருத்து.
என்ன சொல்கிறீர்கள்?

அன்புள்ள DSen அவர்களுக்கு,

கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அது எங்கும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்துகின்றவன். உங்கள் தனிப்பட்ட கருத்தினை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால், அதற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கின்றேன்.

"இது போன்ற தலைப்புகளை விவாதிப்பதைவிட நாம் செய்வதற்கு சிறந்த விசயங்கள் உலகில் எவ்வளவோ உள்ளன" என்ற தங்களின் வார்த்தைகள் ஒருவரின் கோபத்தை எளிதில் தூண்டிவிடும் என்றாலும் நான் கோபப்படாமல் இதற்கு விளக்கம் அளிக்கின்றேன்.

முதலாவதாக, காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் நேரம் வரை, பயனுள்ள விசயங்களையே செய்து கொண்டிருக்கும் ஒருவரை கட்டாயப்படுத்தி, அடித்து இழுத்து வந்து இந்த உரையாடலில் தாங்கள் கலந்து கொண்டே தீரவேண்டும் என்று இங்கே யாரும் துன்புறுத்தவில்லை. இங்கே மன்றத்தில் பதிவுகள் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று இருக்கையில், இந்த பயனில்லாத விவாதத்தில் இப்படி ஒரு பதிவினைப் போட்டு தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்திருப்பதை காட்டிலும், அனைவருக்கும் பயனுள்ள புதிய விவாதங்களை மன்றத்தில் நீங்கள் தொடங்கியிருக்கலாம்.

இரண்டாவதாக, உலகில் உள்ள அனைவருக்கும் பயனுள்ள, சிறந்த விசயம் எது என்பதை தீர்மானிப்பவர் Dsen ஒருவர் மட்டுமே என்று இருந்தால், நான் இது போன்ற பதிவுகள் கொடுப்பதற்கு முன்பு அவரிடம் ஒரு அனுமதி வாங்கிவிட்டு வெளியிட்டு இருப்பேன். ஆனால், மனித ருசிகள் மாறுகின்றதே.. என்ன செய்வது? உங்களுக்கு வீண் என்று தோன்றும் சில விசயங்கள் மற்றவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளாக இருக்கிறது.

சரி இப்போது வாக்கெடுப்பிற்கான விளக்கம். எனக்கு வாக்கெடுப்பிற்கு ஆலோசனைகள் வழங்கி சகோதரிகள் சிலர் நிறைய தலைப்புகள் கொடுத்து இருந்தனர். கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஒரு சகோதரி அவருக்கு இருந்த வித்தியாசமான பிரச்சனையை குறிப்பிட்டு தனக்கு மட்டும்தான் இப்படியா என்பது போல் கேள்வி எழுப்பியிருந்தார். எனக்கும் அவரது பிரச்சனை நடைமுறையில் அதிகம் கேள்விப்படாததாக இருந்ததால் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் அவர் கொடுத்திருந்த தலைப்பை அப்படியே கொடுக்காமல் சற்று மாற்றி இந்த தலைப்பை கொடுத்தேன்.

இந்த மன்ற விவாதத்தின் நோக்கம்:

மேலே ஒரு சகோதரி குறிப்பிட்டு இருந்ததுபோல், இதில் மாமியார் என்பதற்குதான் ஓட்டுகள் அதிகம் விழும் என்பது நானும் எதிர்பார்த்ததுதான். இந்த ஒரு பிரச்சனை முற்றுபெறாத பிரச்சனையாக இருக்கிறது. நிறைய இடங்களில் காரணங்களே இல்லாமல் வெறும் ஈகோ பிரச்சனையாக இருக்கின்றது. பெரும்பாலான பிரச்சனைகள் மனம் சம்பந்தப்பட்டது.

இங்கே மன்றத்தில் கலந்து கொள்பவர்களில் நிறைய மருமகள்கள் இருக்கின்றனர். நிறைய மாமியார்களும் இருக்கின்றனர். பிரச்சனையே இல்லாமல் குடும்பம் நடத்துபவர்கள் தங்களால் எப்படி முடிகின்றது என்பதையும், பிரச்சனையுள்ளவர்கள் எந்த மாதிரி பிரச்சனைகள் எழுகின்றன, அதை எவ்வாறு அவர்கள் சமாளித்தார்கள் என்பது பற்றியும் நிறைய எழுதலாம். பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அதிலிருந்து மீள்வதற்கு வழிகள் கொடுக்கலாம். மற்றவர்களின் பிரச்சனைகளை கேட்கும்போது பிரச்சனை தனக்கு மட்டுமல்ல என்பது போன்ற ஒரு அற்ப ஆறுதல் அடையலாம். (இதைத்தான் தலைப்பு கொடுத்திருந்த அந்த சகோதரியும் கேட்டிருந்தார்.) சிலருக்கு மற்றவர்கள் பிரச்சனையை கேட்கும்போது நாம் பரவாயில்லை என்பது போன்ற ஒரு ஆறுதல் உணர்வு தோன்றும்.

உங்களது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி நீங்கள் வெளியிட்டுவிட்டாலும், உங்களது கருத்து அடுத்து இங்கே பதிவுகள் கொடுக்க வருபவர்களை யோசிக்க வைக்குமே என்ற எண்ணத்தில் இதை பதிய வேண்டியது அவசியமாகிறது.

//சமுதாய முன்னேற்றத்தை தடை செய்யும் என்பது என்னுடைய கருத்து//

எப்படி என்பதை விளக்குவீர்களா?

மனிதர்களுக்கு பிரச்சினைகள் இல்லாத இடம் ஒன்று உண்டு என்று கூறுவது மிகவும் கடினமாகும். ஒவ்வொரு இடத்திலும், காலகட்டத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொன்டுதான் இருக்கிறது. இது இப்படி இருக்கும்போது, ஏன் மாமியார்-மருமகள் பிரச்சினை பல ஆன்டுகளாக பெரிது படுத்தப்படுவதோடு, ஒரு கேலிப்பொருளாகவும் மாறி விட்டது. இது போன்ற கேலி துனுக்குகளும் மறைந்த பாடில்லை. இதனால், இன்றைய தலைமுறையினர், மாமியார் என்றாலே, ஏதோ எதிரியைப் பார்ப்பது போலவும், ஆரம்பத்திலயே அடக்கி வைக்காவிட்டால், தனக்கு ஆபத்து என்று நினைக்கின்றனர். இதே போலவே, மாமியார்களும் நினப்பதால்தான், பிரச்சினை பெரிதாகிற்து. இதை தடுக்க நம்மல் முடிந்த சிறு உதவியாக, இது போன்ற தலைப்புகளை தவிற்கலாம்.

//ஏன் மாமியார்-மருமகள் பிரச்சினை பல ஆண்டுகளாக பெரிது படுத்தப்படுவதோடு, ஒரு கேலிப்பொருளாகவும் மாறி விட்டது. இது போன்ற கேலி துணுக்குகளும் மறைந்த பாடில்லை. இதனால், இன்றைய தலைமுறையினர், மாமியார் என்றாலே, ஏதோ எதிரியைப் பார்ப்பது போலவும், ஆரம்பத்திலயே அடக்கி வைக்காவிட்டால், தனக்கு ஆபத்து என்று நினைக்கின்றனர். இதே போலவே, மாமியார்களும் நினப்பதால்தான், பிரச்சினை பெரிதாகிற்து. //
நீங்களே சொல்லியிருக்கீங்களே இந்த காரணங்களுக்காகத்தான் இந்த விவாதம் அவசியமாகிறது. இதனால் நாம் பிரச்சனையை பெரிதாக்கவில்லை. ஒரு தீர்வு கிடைக்குமா என்றுதான் பார்க்கிறோம்.

மேலும் சில பதிவுகள்