எந்த மாதத்தில் குழந்தை நடக்க ஆரம்பிக்கும்

Dear Friends,

எந்த மாதத்தில் இருந்து குழந்தைகள் நடக்க ஆரம்பிப்பார்கள்.....At which month they will start to sit and at which month they will start to walk....thanks in advance.

மீனா,

கோவிச்சுகாதீங்க? நிச்சயமா சொல்ல முடியாது. ஏன்னா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நேரத்தூல நடப்பாங்க. ஒன்பது மாதங்கள் முடிந்ததிலிருந்து, ஒரு வருடம் மூன்று மாதங்கள் கூட ஆகலாம்.

ஒரு சில குழந்தைங்க தவழாமலேயே எழுந்து நடக்க ஆரம்பிச்சுடும். இரண்டு வயசாகுற வரை எதையும் நாம் தீர்மானிக்கவே முடியாது. எல்லாமே வேறுபடும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

குழந்தைகள் தவழ ஆரம்பித்த (நாலு கால் போட்டுன்னு சொல்வாங்க) பிறகு கொஞ்ச நாட்களில் உட்காரும் .
பெண் குழந்தையாக இருந்தால் 8 மாதத்தில் நடக்கும் என்பார்கள் . ஆண்குழந்தையாக இருந்தால் கொஞ்சம் லேட்டாகும் . என் மகன்கள் இருவரும் ஒரு வயதில்தான் நடந்தார்கள் . (correct -ஆ birthday அன்னிக்கு).

ஏங்க இந்த குழந்தை எப்ப நடக்கும் நடக்கும்னு காத்திருப்போமே அது தத்தி தத்தி நடக்கரது பாக்க அதுல ஒரு சுகம் இருக்கு தெரியுமா...ஹர்ஷினி சொன்னது ரொம்ப சரி...மெல்ல கைய்யை புடிச்சு நடக்க என்கரேஜ் பன்னுங்க..14 மாசத்துகுள்ள நடந்துடும்

அது வரை கவல படாம யார் பேச்சும் கேக்காம இப்ப என்ன பன்னுதோ குழந்தை அதை ரசிச்சுட்டே இருங்க..take caree:-)

ஹாய் தோழீகளே அனைவரும் நலமா என் மகனை பற்றி முன்பே கூறி இருக்கிறேன் அவனுக்கு ஒரு வயது ஒரு மாதம் ஆகிறது அவன் தவழவில்லை அப்படியே எழுந்து நடந்து விடுவான் என்று நினைத்தேன் ஆனால் இன்னும் எதையும் பிடித்துக்கொண்டும் எழுந்து நிற்க்க மாட்டேன்குறான் walker போட்டால் வேகமாக நடக்கிறான் மற்றப்படி கீழே உட்க்கார வைத்தால் உட்க்கார்ந்து கொண்டே சுற்றுகிறான் தவிர எழும்ப மாட்டேன்குறான் எனக்கு கவலையாக இருக்கு ஏதேனும் வழி சொல்லுங்களேன்

alaudeen

சிலர் 8 மாதங்களில் நடபர்,என் பையன் 1 வயது கு பிறகு தன் நடந்தன்

சிலர் 8 மாதங்களில் நடபர்,என் பையன் 1 வயது கு பிறகு தன் நடந்தன்

முதலில் டாக்டரிடம் காட்டவும். வேறு ஏதும் பிரெச்சனை இருக்கா என்று பார்ப்பார்கள். மற்றபடி வீட்டில் வீட்டின் எதாவது ஒரு கார்னரில் சுவரில் முட்டு கொடுத்தாப்போல நிக்க வெச்சு பழகுங்க. கையை பிடித்து நடக்க வைங்க. காலுக்கு பேலன்ஸ் கிடைக்குதான்னு கவனிங்க. பார்த்துட்டு சொல்லுங்க, அதுக்கு ஏற்ற மாதிரி பயிற்சி கொடுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அவன் சோபா பிடிச்சுகிட்டு நிக்க வச்சா நிக்குறான் சோபாவில் உட்க்கார வைத்தால் கைப்பிடியை பிடிச்சுக்கிட்டு எழும்புறான் ஆனா கீழ உட்க்கார வைத்தால் எழும்ப மாட்டேன்குறான் கை பிடிச்சு நடக்க வைத்தால் நடக்குறான் நிக்க வச்சுட்டு வான்னு கூப்பிட்டால் அடி எடுத்து வைக்க பயப்படுறான் அப்படியே சாய்றான் நானும் டெய்லி சாதம் வடிச்ச கஞ்சி அரிசி கழுவின தண்ணி ரெண்டும் கால்ல ஊத்தி பிசைந்து விடுறேன் olive oil குளிக்கும் முன்பு தேய்த்து விடுறேன் றிடம் கேட்டேன் நடப்பான்னு சொல்லுறாங்க நடை வண்டி வாங்கி கொடுத்தால் நடப்பான் என்கிறார்கள் எனக்கு ஒன்னும் புரியவில்லை என்ன செய்வது யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன்please

alaudeen

அப்படின்னா சப்போர்ட் இருந்தா நடக்கறான். நீங்க கஞ்சி தண்ணீர், அரிசி கழுவின நீர் எல்லாம் ஊற்றுங்க, ஆனா பிசையலாம் வேண்டாம்... லேசா பிடிச்சு விடுங்க போதும். ஆயில் மசாஜ் கொடுங்க. நம்ம ஊர் ஸ்டைல் நடைவண்டி கொடுங்க, வாக்கர்லாம் சரி வராது. தேவை இல்லாம இடுப்புக்கு பிரெச்சனை தான் தரும். அனுபவத்தில் சொல்றேன், சாதாரண நடைவண்டி வாங்கி கொடுங்க. நடக்க வைக்கும்போது குழந்தை கூன் போடாமா, வளையாம பாருங்க. நேர நிக்க வைக்க தான் கார்னரில் நிக்க வைக்க சொன்னேன். சோஃபா பிடிச்சுலாம் நிக்க வைக்க வேண்டாம். உட்காரும்போதும் சோஃபா வேண்டாம், ஹார்ட் சர்பேஸ் சேர் தான் பெஸ்ட். அப்பதான் முதுகு வளையாம நேரா இருக்கும். இதை செய்யுங்க. தினம் கையை பிடிச்சு நடக்க வைங்க. அப்படி நடக்க வைக்கும்போது குழந்தை காலை க்ராஸ் பண்ணாம நேர வைக்க செய்யுங்க. இதெல்லாம் குழந்தையின் இடுப்பு, கால் தசை எல்லாம் பலம் பெற செய்யும். முடிஞ்சா ஒரு பிசியோதெரபி உதவியை நாடுங்க. சரியான எக்சர்சைஸ் கொடுத்தா 2, 3 மாசத்தில் நடந்துடுவான். கவலை வேண்டாம் தோழி. நான் சொன்னதை முயற்சி செய்யுங்க.... பலன் எப்படி இருக்குன்னு 2 வாரம் கழித்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களின் குழந்தை வாக்கர் பிடித்து நடக்குது என்று தானே சொல்றீங்க? அப்புறம் என்னங்க ஒன்னும் இல்லை. அவர் சீக்கிரமே நடந்து விடுவார். எப்பொழுதுமே குழந்தைகளுக்கு முதலில் வாக்கர் பயன்படுத்தவே கூடாது. இப்பொழுது குழந்தை சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. நீங்கள் அவர்களின் கையை பிடித்து நடக்க வைங்க....சீக்கிரமே நடந்துவிடுவார். சில குழந்தைகள் ரொம்பவே நேரம் எடுத்துக் கொள்வார்கள். சிலர் சீக்கிரமே செய்து விடுவார்கள். நாம் எப்பொழுதுமே மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. உங்களின் மருத்துவரும் குழந்தைக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார் அல்லவா? பின்பு கவலை விடுங்க......

குழந்தை சோபாவை பிடித்து எழுந்து நிற்கும் போது மறு முனைக்கு சென்று அவரை கூப்பிடுங்கள். அவர் அப்படியே பிடித்து கொண்டு நடக்க உற்சாகப் படுத்துங்கள். அவர் எழுந்து நிற்க முற்படும் போது கைதட்டி உற்சாக படுத்துங்கள். அவரின் விருப்பமான பொம்மையை அவர் எழுந்து நின்ன பின்னர் தூரமாக வைத்துவிட்டு வந்து எடு என்று சொல்லி பாருங்கள். மற்ற சிறு குழந்தைகள் இருக்கும் இடத்திற்கு விளையாட கூட்டி செல்லுங்கள். அவர்கள் எழுந்து ஓடுவது நடப்பதை பார்த்தே ஆரம்பித்து விடுவார்கள். எனக்கு தெரிந்த ஒரு நம்பரின் குழந்தை கூட நடக்க சில காலம் ஆனாது. கிட்டத்தட்ட பதினாலாவது மாதத்தில் தான் நடக்கவே ஆரம்பித்தார்கள். அதற்க்கு பின் என்ன ஓட்டம் தான். பின்பு வந்து சொல்வீர்கள் ஏன்டா எவன் நடக்க ஆரம்பித்தான்.....எப்படி சேட்டை செய்றானே என்று :)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்