குழந்தையின் உணவு

குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கோ 6 மாதங்களுக்கோ பின்னரே திட உணவு கொடுப்பது ஆரோகியமானது.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கே எழுதுகிரேன்
6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது இனி ஒரு வேளை தாய்ப்பால் குழந்தைக்கு பற்றாமல் போகிறது என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை,ஆரோகியம் கொன்டு எப்பொழுது திட உணவு கொடுக்கலாம்னு சொல்வார்கள்....
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா தேவையில்லை பசும்பாலே போதும்..பசும்பாலை 1 வயதிற்கு மேல் தான் கொடுக்க வேன்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க அவசியம் இல்லை..முழு பாலாக மட்டும் குழந்தைக்கு குடிக்கக் கொடுக்க மட்டுமே ஃபார்முலா கொடுக்க வேன்டும் மற்ற படி திட உணவுக்கு சிறந்தது பசும்பால்
முதன்முதலாக உணவைக் குழந்தைக்கு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் ஆக்கி(ஆப்பம் மாவு பதத்திற்க்கு) கொடுக்கலாம்..பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ உடைத்து விட்டு கொடுக்க வேன்டும்..குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது.பிறகு ஒரு வருடம் முடிவதற்க்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு அப்படியே சிறிய சிறிய துண்டுகளாக சாப்பிட பழக்க வேன்டும்.

திட உணவாக கொடுக்கத் துவங்கும்பொழுது குழந்தைக்கு பழக்க ஏற்றது மசித்த பழ வகைகள்
பனானா - பழத்தை நன்கு கட்டியில்லாமல் ஃபோர்கால் உடைத்து பால் கலந்து கொடுக்கலாம்..1/4 பாக பழத்தை மட்டும் முதல் நாளில் கொடுத்து பின் மெல்ல தினமும் 1 பழமாக கொடுக்கலாம்
ஆப்பில் - ஆப்பிலை இட்லி தட்டில் வேகவைத்து உடைத்து பாலுடன் கலந்தோ இல்லை அப்படியே கொடுக்கலாம்..சில குழந்தைகளுக்கு ஆப்பில் உண்டு பன்னி விடும்...அந்த குழந்தைகளுக்கு ஆப்பிலை தவிர்த்து விட்டு பப்பாளிப் பழத்தை உடைத்துக் கொடுக்கலாம்
பின் சீசனுக்கு ஏற்றவாரு பியர்ஸ் பழத்தை ஆப்பில் போலவே வேகவைத்து கொடுக்கலாம்
சப்போட்டாவை குழந்தை விரும்பி சாப்பிடும்..நல்ல சத்துள்ள பழவகை அது..அதனையும் உடைத்துக் கொடுக்கலாம்...constipation க்கு பப்பாளிப் பழத்தை உடைத்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களை கொடுத்துப் பழகி 2 வாரத்திற்க்குப் பின் தான் காய்கறிகளைக் கொடுக்க வேன்டும்...
காய்கறிகளை நன்கு வேக வைத்து வடிகட்டிக் கொடுக்க வேன்டும். குழந்தைக்கு 7 மாதம் வடிகட்டித் தான் கொடுக்க வேன்டும்.7 மாதத்திற்க்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிரதென்றால் பிறகு மெல்ல அளவை அதிகரித்துக் கொள்ளலாம்
அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள்,கேரட்,pumpkin போன்றவை மிக நல்லது
காய்கறிகளை கொடுக்கும்பொழுது குழந்தைக்கு உப்பு சேர்க்க அவசியம் இல்லை..அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது..
கீரையில் ச்பினாஷ் கீரையில் அதிகளவு இரும்பு சத்து உள்ளது..ஆனால் அது உடலில் absorb செய்ய அவசியமானது vit c..
காய்கறிகளில் தக்காளியிலும்,காளிஃப்லவரிலும் vit c உள்ளது..அதனால் spinach சமைக்கும்பொழுது அதனுடன் tomato,cauliflower யும் சேர்த்து சமைத்தால் நல்லது
மல்டிவிடமின் ட்ராப்ஸை கொடுப்பதானால் உணவிற்குப் பின் தினமும் ஒரு முறை கொடுப்பது நல்லது

இதர உணவுகள்
காய்கறிகள் கொடுத்து ஒரு வாரத்திற்குப் பின் மற்ற கூழ் வகைகளைக் கொடுப்பது நல்லது.
ரெடிமேட் உணவுகளை விட வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே சிறந்தது

வேக வைத்த சாதத்தை உடைத்து கஞ்சி போல கொடுக்கலாம்.இட்லி,தோசை சாம்பார் கொடுக்கலாம்

ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம்,

சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம்

சூஜி கோதுமையை தன்னீரில் ஊறவைத்து கைய்யால் கசக்கி அதன் பாலெடுத்து பசும்பாலுடன் காய்ச்சி கொடுக்கலாம்

காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக் காய்ப் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்

குழந்தைக்கு 6 மாதத்திற்க்குப் பிறகு தயிர் கொடுக்கலாம்.
வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவை 6 மாததிற்குப் பிறகு கொடுக்கலாம்...11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம்
வேக வைத்த காய்கறி,பருப்புடன் சாதமும் நெய்யும் கலந்து உடைத்துக் கொடுக்கலாம்
மீன் ,ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்க்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம்.பின் மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம்
குழந்தையின் உணவில் இனிப்பு சேர்த்துவது நல்லதல்ல...அப்படி சேர்த்துவதானால் வெல்லத்தை சேர்ப்பது நல்லது அதில் இரும்புசத்து உள்ளதால்

உப்பும் முதல் 7 மாதங்களுக்கு தேவையே இல்லை..அப்படியே சேர்த்துவதானால் மிகக் குறைந்த அளவே சேர்க்க வேன்டும்
1 வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேன்டும்..1 வயது வரை மிளகாயை அறவே போடாமல் இருப்பது நல்லது..அதற்க்கு பதில் மிளகையோ(pepper) கேப்சிகத்தையோ சிறிது சேர்க்கலாம்
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும் 4 நாள் கழித்து தான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும்....அந்த நாலு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொன்டதா இல்லையா என்று தெரிய வரும்...
சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிப்ஷன் ஆகும் அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும்.

I HAVE A 7MONTHS OLD BABY I THINK THIS WILL HELP ME A LOT.saranyamohan

saranyamohan

Dear Saranya

குழந்தை புஸ்டியாக வளர ஒரு ஐடிய தினமுமொரு ஆப்பில் பழ்த்தை வேகவைத்து ஸ்கின் கொட்டைகளை எடுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து கொடுங்கள்

Jaleelakamal

சரண்யா குழந்தைக்கு ஒரு நாளைக்கு 4 ,5 முறை பால் குடிக்குமாறு பார்த்துக் கொள்ளவும்...அதாவது 4 அல்லது 5 மனிநேரத்துக்கு ஒரு முறை....திட உணவு கொடுக்கும்பொழுது தண்ணீரும் சிறிது கொடுக்கவும்

தளிகா:-)

THANKS BANU AND THALIKA . I HAVE A DOUBT REGARDING BREAST FEEDING. I USED TO FEED MY CHILD EVEN AT AN INTERVAL OF 6 OR 7 HRS WILL IT AFFECT BY BABY? SOME SAY IT WILL.THEY ASKED ME TO EXPRESS THE MILKK INBETWEEN IS IT TRUE? CAN ANYONE GIVE ME A CHART TO FEED MY CHILD?saranyamohan

saranyamohan

fish
பிஷ் மசாலா போட்டால் நல்ல அதில் பிடிக்கமாட்டுங்கிறது எதவது டிப்ஸ் கொடுங்கள் (கிழங்கா மீனிலும்,வவ்வா மீனிலும்)

Jaleelakamal

தளிகா, எனது ஆறு மாத குழந்தைக்கு தற்போதுதான் திட உணவுகொடுக்க ஆரம்பித்துள்ளோம். உங்களின் குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

hi thalika,

i saw ur reply for this topic, thanx u so much but idont know how to reply from there, no option to send reply.

Anyway but so far i breastfeed ,cereal only.
can i start veg and fruit and idly. should cook first then have to give right.

குழந்தைக்கு இன்னேரம் ஒடுக்க ஆரம்பிச்சிஉப்பீங்க..இப்ப தான் பாத்தேன்...பழங்களில் ஆப்பில்,பியர்ஸை மட்டும் வேகவைத்து கொடுங்க..மற்றவைகளை அப்படியே அரைத்து கொடுக்கலாம்..இட்லி கொடுக்கலாம்..

தளிகா:-)

அவங்க சொன்னது சரிதான்..பாலை கொடுக்கும் நேர இடைவெள் கூடுவதற்கேற்ப பால் சுரப்பது குறையும்...இடையே எக்ஸ்ப்ரெஸ் செய்து ஃப்ரீஸ் பன்னி வெப்பது நல்லது...7 மாதமெல்லாம் ஆனால் முன்னைப் போல் குடிக்காது...கம்மியாகும்...மற்ற உணவுகள் அதற்கேற்ப சாப்பிட்டால் ப்ரச்சனையில்லை

நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை திடீரென சாப்பிடாமல் அடம் பிடிக்கும்..அப்பொழுது பொறுமையாய் தினிக்காமல் 30 நிமிடத்திற்கொருமுறை சாப்பிடக் கொடுக்ல்கலாம்...8,9 மாதங்களில் பல் முளைக்கத் தொடங்கும் அப்பொழுதுண்டாகும் வலியால் சாப்பிடாதிருக்கலாம்..ஈறுகளைல் சிவப்பாய் வெள்ளையாய் மெல்லிய கோடு போல் இருந்தால் பல் முளைப்பதன் அறிகுறி...
அப்பொழுது ஜலதோஷம்,லேசான காய்ச்சல் வரலாம்..டீதிங் ரிங்கை ஃப்ரீசரில் வைத்து கடிக்க கொடுத்தால் சுகம் கிடைக்கும்...ஓரல் ஜெல் வாங்கி ஈறுகளில் தடவினாலும் சுகமாய் இருக்கும்..மெல்ல 1 ,2 வாரத்தில் பல் வந்ததும் சாப்பிடத் தொடங்கும்.
பால்பாட்டிலில் குடிக்க குழந்தை மறுத்தால் கவலைப் படாமல் ஸ்பூனில் கொடுத்து பழக்குங்கள்..அப்படியே மெல்ல 8 மாதம் ஆனதும் க்லாஸில் கொடுத்து பழக்கலாம்..பாட்டிலில் கொடுத்து பழக்கினால் விடுவது கஷ்டம்.
அரைத்துக் கொடுத்துக் டொண்டு குழந்தைக்கு மசித்த உணவுக்கு மாறும் போதும் அல்லது அப்படியே கொடுக்க பழக்கும்பொழுதும் அல்லது குழந்தைக்கு ஏதாவதொரு உணவை கைய்யில் கொடுத்து சாப்பிடும்பொழுதும் தனியா குழந்தையை விடவேண்டாம்..எப்பொழுதும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது.புறை ஏறிவிடக் கூடும்.
சின்ன குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால் அதை தொடக்கத்திலேயே மாத்துவது நல்லது..அப்படியே விட்டால் அது காது வலியில் முடியும் வாய்ப்பு அதிகம்.
காது வலி வந்தால் கண்டதையும் காதில் ஊற்றாமல் மருத்துவாஇ நோக்கு ஓடவும். காது வலி வந்து விடுமென்ற பயமிருந்தால் அவர்களின் தலை உயரும்படி தூங்க வைப்பதால் வரும் வாய்ப்பு கம்மி..அதாவது தலையணை வைக்காமல் பெட்டில் அடியில் தலைபாகத்தில் துணிகளையோ தலையணையோ வைத்து தலைபாகம் மேல் உயர்ந்தும் கால்பாகம் கீழும் வந்தது போல் செய்து படுக்க வைத்தல் காது வலி எளிதில் வராது.

மேலும் சில பதிவுகள்