தன் கையே தனக்குதவி

மூக்கு :-

*மூக்கு ஒரே கொண கொண வாக இருந்தால் வெங்காயத்தை லேசாக வதக்கி கருப்பட்டி வெல்லத்துடன் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விடும்.

பல் ::-

பல் வலி :-

*வேப்ப இலையை காய வைத்து பொடிசெய்து வாரத்தில் இரு நாள் பல்தேய்க்கும் பொழுது தேய்த்து வர சரியாகும்.

*எலுமிச்சம் பழ தோலை காய வைத்து நன்றாக அரைத்து (ட்ரை பவுடர்) அதே அளவு உப்பு சேர்த்து தூங்கும் முன் தேய்க்கவும். பல்லின் மஞ்சள்நிறமும் மாறும்.பல் வலியும் சரியாகும்.

வயிறு ::-

வயிறு வலி:-

நிறைய சாப்பிட்டு வயிறு வலித்தால்,

வெற்றிலை-- 2, ஓமம் -- 2சிட்டிகை, சீரகம், கல் உப்பு எல்லாம் சேர்த்து மென்று விழுங்கினால் வயிற்றுவலி சரியாகி விடும்.

அஜிரணம்:-

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி , வெல்லத்தை பாகாக காய்ச்சி அதில் நெய்ய் வறுத்த இஞ்சியை போட்டு அடுத்த நாள் சாப்பிட்டால் அஜீரணம் இருக்காது.

வாயுத்தொந்தரவு:-

கோதுமை மாவு -- 1டீஸ்பூன், 1/2 டம்ளர் தண்ணீரில் போட்டு கலக்கி இரவே வைக்கவும். காலையில் குடித்தால் வாயுத்தொந்தரவு சரியாகி விடும்.

ரத்த கொதிப்பு:-

வெள்ளைப்பூண்டு, மிளகுப்பொடி சிறிது இரண்டையும் நன்றாக நசுக்கி கஷாயம் வைத்து குடிக்க குணமாகும்.

காலை சுறுசுறுப்புக்கு:-

தேன் மற்றும் ரோஸ்வாட்டரைக் கலந்து குளிப்பதற்கு முன்பாக முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்கவும். முகம் பள பளக்கும். புத்துணர்வும் கிடைக்கும்.

கால் வெடிப்பு:-

*சிறிய வெங்காயத்தை வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து தினமும் ((இரவில் )-- இரவில் தான் நடக்காமல் ஒரே இடத்தில் இருப்போம் ) தடவி வந்தால் வெடிப்புகள் மறையும்.

கால் மென்மையாக:-

*சிறிது லிக்விட் பாரபின் மெழுகும், கடுகு எண்ணையும் சேர்த்து குழைத்து தினமும் காலில் தடவி வந்தால் கால் பூப்போல் மென்மையாகி விடும்.

*கொஞ்சம் தயிர் அதனுடன் ஒரு மூடி எலுமிச்சை சாறு இரண்டும் நன்றாக கலந்து காலில் பரவலாக தேய்க்கவேண்டும்.விரல்களின் இடுக்கிலும் தேய்த்து 10 நிமிடம் ஊறிய பின் வெந்நீரில் கழுவினால் கால் மென்மையாகிவிடும்.

*சாதாரணமாகவே, கடுகு எண்ணையைக் காலில் தேய்த்தால் கால் மென்மையாகி விடும்.

*இதை செய்யமுடியவில்லை எனில் குளித்தபின் தினமும் தேங்காய் எண்ணைய் / பாரபின் எண்ணையை தேய்த்தபடி இருந்தால் கால் சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

உடல் துற்நாற்றம் போக:-

அரிசி மாவு, (குளிக்கும்) மஞ்சள்பொடி சிறிது இரண்டையும் கலந்து உடலில் கரகரவென்று தேய்த்து பின் எலுமிச்சை சாறு கலந்த் தண்ணீரில் குளித்தால் உடல் துற்நாற்றம் விலகும்.

மென்மையான உடலுக்கு:-

கமலா ஆரஞ்சு தோலை காயவைத்து பொடி செய்யவும்.மாதுளை விதையையும் காயவைத்து பொடி செய்யவும்.பால், ரோஸ் வாட்டர் ஆகியவற்றுடன் இந்த பொடிகளையும் கலந்து தனமும் உடலில் தேய்த்து குளித்து வர மென்மையாகும் உடல்.

நலமா? உங்கள் அழகு குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எல்லா குறிப்புகளும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்வது போல் உள்ளது. //*சிறிது மெழுகும், கடுகு எண்ணையும் சேர்த்து குழைத்து தினமும் காலில் தடவி வந்தால் கால் பூப்போல் மென்மையாகி விடும்.// இதில் மெழுகு என்பது என்ன? எதை குறிப்பிடுகிறீர்கள். நன்றி.

பாரபின் மெழுகு என்பதே சரி. இது லிக்விட் பாரபின் என்றும் கிடைக்கும். இது மிகவும் பயனுள்ள மருந்துப் பொருளாகவும் உள்ளது.
ஓவியா அவர்களே மிகவும் நன்றி

குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகினால்/சளி பிடித்தால் விக்ஸ்ஸை அப்படியே போடாமல் ஒரு ஸ்பூனில் எடுத்து 3 செகண்ட் அடுப்பில் வாட்டி அப்படியே சூடாக நம் கையால் தடவவும். நம் கைகள் சூட்டை பொறுக்கும் படியாக இருக்கும் பொழுது தடவினால் சீக்கிரம் சரியாகிவிடும். வெற்றிலையில் விக்ஸ்ஸை தடவி வெற்றிலையை வாட்டியும் தடவலாம். சீக்கிரம் குணமளிக்கும்.

பீரியட்ஸ் டைமில் வலிக்கும் வயிற்று வலிக்கு,

1. 1 கப் மோருடன் 1/2 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் பெருங்காயம் , 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட 2 நிமிடத்தில் வயிறு வலி சரியாகும்.

2. விளக்கெண்ணையை மிக லேசாக சூடு படுத்தி அடி வயிற்றில் தேய்த்தால் 5 நிமிடத்தில் வயிற்று வலி சரியாகும்.

பித்த நரை

இஞ்சியை தட்டி சாறு எடுத்து 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
அடியில் சுண்ணாம்பு தங்கும்.
சாறை மட்டும் வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து வாரம் ஒரு முறை குடித்து வந்தால் பித்த நரை மட்டுப் படும்
பித்தம் ,தலை சுற்றல், அடிக்கடி வாந்தி போன்றவையும் குறையும்.

பீரியட்ஸ் டைமில் வலிக்கும் வயிற்று வலிக்கு,இன்னொரு நிவாரணம்
முட்டையுடன் காய்ச்சிய சூடான பால் 1கப்,2மேசைக்கரண்டி தேன் கலந்து மத்தால் கடைந்து காலையில் பல் விளக்கியவுடன் குடித்து வந்தால் பீரியட்ஸ் சமயங்களில் வரும் வயிற்று வலி,இடுப்புவலி,முதுகு வலி போயே போச்சு.பீரியட்ஸும் ரெகுலர் ஆகும்.
எனது அனுபவத்தில் கண்டது.இப்போது எனக்கு எந்த வலியும் இல்லை.
தினமும் குடிக்க சங்கட படுபவர்கள் பீரியட்ஸ் சமயங்களில் மட்டும் எடுத்து கொள்ளலாம்.
தினமும் குடித்தால் ஒரு வருடத்திற்குள் எல்லமே சரியாகி விடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முட்டைய அப்படியே குடிக்கனுமா? இல்ல boiled egg-ஆ இல்ல ஆம்லெட்டா? சொல்லுங்க கவி.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

முட்டை தான் boil எல்லாம் பண்னகூடாது.முட்டையை கப்பில் ஊற்றி நல்லா அடிச்சுகிட்டு தேனையும் விட்டு கலந்து வச்சுகிட்டு கொதீகற பாலை கலந்து நல்ல மிக்ஸ் பண்ணிட்டு குடிச்சுட வேண்டியதுதான்.கொஞ்சம் ஸ்மெல் இருக்கும்தான்.ஆனா அனுபவுக்கற வலிக்கு இது எவ்வளவோ பரவாயில்லேல்ல.
பீரியட்ஸ் வருவதற்கு முன்பேயோ அல்லது வந்த உடனேயோ குடித்தால் வலி உடனே குறையும்.தொடர்ந்து குடித்து வந்தால் வலியே இருக்காது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கண்ணில் ஏதாவது விழுந்தோ அல்லது குத்தி சிவப்பாக கண் கலங்கி விட்டால் தாய் பாலை (ஒரு நாளைக்கு 4 முறை ) ஊற்றி சிறிது நேரம் கண்ணை மூடி படுத்தால் சீக்கிரமாக சரியாகும்.

அருமையான் வீட்டு வைத்திய முறைகள், இந்த இழை மேலே வருவதற்கு இந்த பதிவு

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்