எனர்ஜி இல்லா rose

கடந்த 15 நாட்களாக எடையை குறைப்பதற்க்காக உணவை குறைத்து வருகிறேன்.காலையில் 1/2 கப் சீரியல்ஸ்,மதியம் 3/4கப் சாதம் மற்றும் காய் அல்லது நான்வெஜ் எதாவது இரவு சப்பாத்தி 2.இடையில் பசிக்கும்போது பழங்கள் சாப்பிடுகிறேன்.இது நல்ல சாப்பாடுதானே?ஆனா எனக்கு உடம்பில் எனர்ஜியே இல்லாதமாதிரி இருக்கு.இதற்குமுன் நன்றாகவே சாப்பிட்டேன்.அதிகமான குண்டு என நினைக்கவேண்டாம்.மொழியில் ஜோவைவிட கொஞ்சம் அதிகம்னு வச்சுக்குங்க.ஒரு உதாரணத்துக்கு சொல்றேப்பா யாருக்காவது இதுமாதிரி இருந்ததா?என்ன செய்யலாம்?

ஹலோ ரோஸ்,

மனசுல எப்பவும் "ஐயோ நான் டயட்ல இருக்கேன், டயர்டா இருக்குமா, அப்படின்னு நினச்சுட்டே இருந்தா டயர்டா தான் இருக்கும். அதனால நம்ம நல்ல தானே இருக்கோம். டயர்டே இல்லையேன்னு நினச்சு பாருங்க. உங்களுக்கு இப்பொ இருக்கற டயர்ட் தெரியாது. அப்புறம் டயட் இருக்கும் போது
1. தண்ணீர் நிறைய குடிக்கனும்
2. விருப்பப்பட்டால் லைம் பிழிஞ்சி சுடு தண்ணீரை குடிக்கலாம்.
3. சர்க்கரையை கொஞ்சம் கூட யூஸ் பண்ணக்க்கூடாது.
4. பசிப்போல தெரியும் போது க்ரீன் டீ சாப்பிடுங்க.

காலையில எழுந்தவுடன் ஒன்றரை லீட்டர் இதமான சூடுபடுத்திய தண்ணீரை அருந்துங்க.

உங்களுக்கு டயர்டான ஃபீலிங்கே தெரியாது.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

எனக்கும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது. அப்பொழுதெல்லாம் ஒரு டம்ளர் வெது வெதுப்பான் நீர் சாப்பிடுவேன். ஒரு கைப்பிடி அளவு கிசுமுசு சாப்பிடுகிறேன் சரியா தவறா என் தெரியவில்லை!!
Swimming போன பின் நன்றாக இளைத்து விட்டேன். பத்தாமல் போன ஜீன்ஸ் எல்லாம் போடுகிறேன். அதனால் தான் கூறுகிறேன் இளைத்து விட்டேன்.
"உலர்ந்த திராட்சை சாப்பிடுவதற்கு மட்டும் சரியான ஆலோசனை தேவை"

aan purinjchudhu

நன்றி ஹர்ஹினி. பாஸ்சிடிவ் எண்ணம் வேணும் என்பது மிகச்சரியானதுதான்.ஆனாலும் என்னிடம் பழைய வேகம் சுறுசுறுப்பு இல்லை அதுதான் கேட்டுபார்த்தேன்.உங்க பதிலுக்கு மீண்டும் நன்றி.

சுபா எடை குறைந்துவிட்டிங்களா?வாழ்த்துக்கள்.ட்ரை பீருட்ஸ் சாப்பிடுவது நல்லதுதானே?எனக்கு பட்டினி கிடந்து உடம்பை குறைப்பதில் விருப்பம் இல்லை.இனிப்பு கொழுப்பு தவிர மற்றவை அளவோடு சாப்பிட்டு எடையை குறைகபார்க்கிறேன்.

தளிகா புரிந்ததை புரியிரமாதிரி சொல்லுங்க?பட்டம் வாங்கினதுக்கு 'பாட்டி' இல்லையா?இதை ஆங்கிலத்தில் எழுதினால் அலட்டல் ராணி வந்துடுமே?நீங்க எந்த பாட்டிய நினைப்பீங்களோ தெரியலயே

பார்ட்டியா?

பார்ட்டியா உங்க அட்ரெஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா?நான் வேனா கெ எஃப் சி யோ இல்ல எஸ் எஃப் சி யோ சொல்லட்டா?

ஓஹ் மேல இருக்கரதா..அது கிசுமுசு ந்னு எழுதி இருந்தாங்களே..அது என்னதுன்னு புரீல..அத கேட்டேன்..நல்ல படிச்சு பாத்தப்ப புரிஞ்சுது அதனால அழிச்சுட்டேன்

உங்க எல்லார்ட்டேயும் கேட்டேனே ஏதாவது ஐடியா கொடுங்கப்பா?இல்லனா விடமாட்டேன்?எங்க போய்யிட்டீங்க தேவா,ஹேமா,வாணி,ஜெயந்தி&செல்வி அக்காஸ் நேரம் இருந்தா வந்து ஏதாவது சொல்லிட்டு போங்க.உடம்பும் போடாம எனர்ஜியும் கிடைக்றமாதிரி என்ன சாப்பிடலாம்???????தளிகா உங்களையும் சேர்த்துதான்.பாபு அண்ணாவை மட்டும் விட்டுவிடுகிறேன்.
பொழுதுதெரியாமல் கணினியே கதியென்றுகிடப்பதால்.

ஹாய் ரோஸ்மேரி, எப்படி இருக்கீங்க. நான் போன வாரம் ஒரு சைட்டுக்குப் போய் வந்ததில் உடம்பு சரியில்லாமல் இன்று வரை பேசக்கூட முடியாமல் தொண்டை காலியாகிவிட்டது. இதில் இங்கு இப்போது மழை,நடுங்க வைக்கும் குளிர். ஆனாலும் அறுசுவையை அவ்வப்போது விசிட் அடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நானும் இப்போது சாப்பாட்டில் மிகவும் கவனமாக, சொல்லப்போனால் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து, எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்டு ஒரு வழியாக சரியான சாப்பாட்டு பிளானை கண்டுப் பிடித்து, அதைப் பின்பற்ற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்.
காலையில் ஓட்ஸ் கஞ்சி அல்லது இட்லி(2) சாப்பிடலாம். ஓட்ஸ் கஞ்சியில் ஸ்கிம் மில்க் சேர்த்து சாப்பிடலாம். 3 வேளைக்கு பதில் அதை இரண்டிரண்டாக பிரித்து 6 வேளை சாப்பிடுங்கள். அப்போது எனர்ஜி இல்லாததுபோல் தோன்றாது.

உதாரணமாக,

காலையில் 7.30 மணிக்கு- 2 இட்லி
இடையிடையே ஒரு கிளாஸ் சூடான தண்ணீர் அருந்துங்கள்.
10.30 மணிக்கு- Baked Beans ஆலது Tuna Fish Can with crackers
1.00pm- 1.30pm - வாக்கிங் செல்லலாம்(உங்கள் ஊரில் வெய்யில் அதிகம் என்பதால் சாயங்காலம் போகலாம். எனக்கு கிடைக்கும் நேரத்தில் நான் வாக்கிங் சென்று விடுவேன்.
1.30pm - லஞ்ச்- Chicken Salad(சிக்கன் ப்ரெஸ்ட் பீஸ் மற்றும் சாலட்).
4.30pm - யோகர்ட் அல்லது ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடலாம்.
1 மணி நேரம் வாக்கிங் மற்றும் எக்சர்சைஸ்
இரவு- சப்பாத்தி,தால் அல்லது ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பழங்கள். இரவு தூங்குவதற்கு நெடுநேரம் முன்பே உணவை அருந்தி விடுங்கள். அரிசிச் சாப்பாடை தவிருங்கள். சிறிதளவு( 1 கப்) ஒரு நாளைக்கு அதிகம்.

வாழைப்பழம், கேரட் போன்றவற்றை தவிருங்கள். நல்ல கொழுப்பு உள்ள tuna fish போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். வேக வைத்த முட்டை தினமும் சாப்பிடலாம்(வெள்ளைக்கரு இரண்டுக் கூட சாப்பிடலாம்).

அதிகம் சாப்பிட்டாலும் எடை கூடாமல் குறைக்க உதவும் சிலவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் சாப்பிட்ட திருப்தியும் இருக்கும், சோர்வும் வராது.
Broccooli யை ஸ்டீம் செய்து முடியுமளவு சாப்பிடுங்கள். ஆப்பிள் 2-3 கூட சாப்பிடலாம். Brussels Sprouts வைத்து சாலட் அல்லது ஸ்டீம் செய்து சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியது - கூல் ட்ரிங்க்ஸ்(Soft Drinks), Sugar, Salty Foods, Preserved Foods,Fried and Oily Foods,Bad Fats அதிகமுள்ள உணவுப் பொருட்கள்.

க்ரீன் டீ குடிக்க விருப்பம் இல்லாவிட்டால், பிளாக் டீ குடியுங்கள் அல்லது ஸ்கிம் மில்க் சேர்த்து குடியுங்கள். சீனிக்குப் பதிலாக Equal உபயோகியுங்கள்.

வெள்ளரிக்காய், தர்பூஸ் போன்ற நீர்க்காய்கறிகள் வயிற்றை நிறைப்பதோடு, உடம்பில் கொழுப்பும் சேராமல் பார்த்துக் கொள்ளும். நீங்களும் சோர்வடையாமல் இருப்பீர்கள். இதைப் பற்றி இன்னும் எழுதலாம் நிறைய. இப்போதைக்கு அவசரமாக பதிலளித்ததால் இவற்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

why dont take carrot

மேலும் சில பதிவுகள்