3 வயது குழந்தையின் சாப்பாடு

என் குழந்தைக்கு 3 வயது ஆகிறது. அவள் தயிர் சாதம், பருப்பு சாதத்தை மட்டுமே சாப்பிடுகிராள்,அதையும் கையால் பிசைந்து 1 வயது குழந்தைக்கு குடுப்பதுபோல் கொடுத்தால்தான் சப்பிடுகிறாள்,காய்,பழங்களையும் சாப்பிடமாட்டங்கிறாள் . எப்படி செய்து கொடுப்பது? நாம் சாப்பிடும் உணவுகளை சாப்பிடவைப்பது எப்படி என்று சொல்லுங்கள் please
அன்புடன்
சுதா

பழம் பத்தி எனக்கு தெரியாது. ஏன்னா என் பொண்ணும் வாழப்பழத்தை, சப்போட்டா தவிர வேற எந்த பழத்தையும் சாப்பிடமாட்டா.

காய்: சமைக்கும் போது தனியே குக்கர்ல, அரிசி, பருப்பு, துறுவிய அல்லது சின்னதாய் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி, முள்ளங்கி, பீட்ரூட், சொரக்காய், பீர்க்கங்காய், முறுங்கைக்காய், இதுல எதுவேனும் ரெண்டு காயை போட்டு அதோடு தக்காளி, வெங்காயம், பூண்டு (அ) ஓமம் (அ) சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு சமச்சு குடுங்க. காரம் வேணும்னா, மிளகுத்தூள் சேர்க்கலாம். அப்பப்ப சாம்பார் தூளும் சேர்த்து சமைக்கலாம். எதுவானாலும் கொஞ்சமா.

முறுங்கக்காய்-னா அதுல நடுவுல இருக்கறத மட்டும் எடுத்து ஊட்டுங்க. மத்த அனைத்தையும் லேசா மசிச்சு சாத்ததோட அப்படியே குடுங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்