அடுப்படியில் அழகு

ஹையோ எத்தன நாளாச்சு?
அனைத்து சகோதரிகளும் என்னை மன்னிக்கவும். இவ்வளவு நாளாக உங்கள் அனைவரையும் சந்திக்காததிற்கு 2 காரணங்கள்.முதலாவது எனது வேலை பளு அடுத்தது உங்களுக்காக அழகு குறிப்பு சம்மந்தமாக ஒரு தனி புத்தகம் போல் ஒன்று தயாரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் வெளியிடுவோம் என்று பாபு அண்ணா கூறியதற்கு இனங்கி அது தயாரிக்கும் பணியில் இருந்ததால் என்னால் இங்கு வர இயலவில்லை. சரி நாம் குறிப்புக்கு போவோமா?

எண்ணை பசையை குறைக்க:
திரட்சை (தோலை மென்மையாக்க), எலுமிச்சை (இயற்கையான க்லென்சர்), முட்டையின் வெள்ளைக்கரு (தோல் தொய்யாமல் பாதுகாக்கும்) மூன்றையும் சேர்த்து அரைத்து 20 நிமிடங்கள் முகத்தில் போட்டுவர முகத்தில் எண்ணை வடிதல் குறையும்.

ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி முகத்தில் தேய்த்து வந்தால் எண்ணை வடிதல் குறையும்

வீட்டிலேயே மாஸ்சரைசர் தயாரிக்க:
தேன், எலுமிச்சை சாறு, வெஜிடபுல் ஆயில் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் வறண்ட சருமத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.

பளபளக்கும் சறுமத்திற்கு:
பூசணிகாய் துண்டுகள் சில, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மூன்றும் அரைத்து 30 நிமிடங்கள் முகத்தில் போட முகம் நல்ல பொளிவாக இருக்கும்

மென்மையான சறுமத்திற்க்கு:
குளிக்கும் தண்ணீரில் 1/2 கப் தேன் கலந்து குளித்தால் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

வெயிலால் ஏற்படும் கருமைக்கு:
ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து அரைத்து அந்த பொடியை பாலில் கலந்து முகத்தில் 20 நிமிடம் போட்டு வந்தால் எனப்படும் கருமை மறையும்

ஹை நான் அருசுவை.காம் -கு புது முகம் ,தினமும் கடலை மாவு 1 spoon பாசிப்யிறு மாவு(பச்ச கடலை பருப்பு கலன்தது)1 spoon, ஒரு சிட்டிகை விட சிறிதலவு கஸ்துரி மஞ்சல் முகம் கழுவ எண்ணை பசை குறையும். எனக்கும் எண்ணை பசை சருமம் இது பன்ன பிறகு பலன் உள்ளது

mk

தக்காளி ஒரு அருமருந்து தக்காளியை வட்டவடிவில் வெட்டி முகத்தில் தெய்தால் கூட முகம் பொலிவு பெறும்.
தயிரில் ஒரு டிராப் தேன்,ஆரஞ்சு சாறு கலந்து தேய்த்தால் கூட முகம் பொலிவு பெறும்.
தோசைமாவில் ஆலிவ் ஆயில் (அ) தேங்காய் எண்ணை கல்ந்து கூட தேய்க்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்