ஈ.சி கீரை கூட்டு

தேதி: September 12, 2007

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - 1/4 கப்
சிகப்பு மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
துருவிய தேங்காய் - 1/4 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுந்தபருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 தேக்கரண்டி


 

கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிதாக அரிந்து கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் சிறிதாக அரிந்து கொள்ளவும்.
பாசிப்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணை சூடாக்கி,கடுகு,சீரகம் மற்றும் உளுந்தபருப்பு போடவும்.
கடுகு வெடித்த உடன் சிகப்பு மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
வெங்காயம் வதங்கிய பின், தண்ணீரை வடித்து விட்டு பாசிப்பருப்பை போடவும்.
பின்,கீரை,தக்காளி,தேவையான அளவு உப்பு போட்டு 1/2 டம்லர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
கீரை வெந்த்த பின், துருவிய தேங்காய் போட்டு நன்கு கிளறவும்.
5 நிமிடத்திற்கு பின் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய்,
அனிதா,
இன்று எங்கள் வீட்டில் கூட்டு செய்தோம்.
ஆனால் பேர் தான் அட்லாண்டா கூட்டு என்று பெயர் மாற்றம் செய்துள்ளோம்.
ரொம்ப நல்லா இருந்திச்சி.தேங்க்ஸ்

ஹாய் சுபா
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.உங்க feedback உற்சாகமா இருக்கு.தேங்க்ஸ்

அனிதா

hi

ஹாய் சுபா இதுவரை நான் கீரைக்குதேங்காய் சேர்த்ததுஇல்லை நன்ராக இருந்தது
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்