அவல் உருளை உப்புமா

தேதி: September 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டி அவல் - அரை கப்
உருளை கிழங்கு - ஒன்று,
இஞ்சி பச்சை மிளகாய் பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
ஜீரகம் - அரை ஸ்பூன்,
பச்சை கொத்தமல்லி பொடியாக அரிந்தது - சிறிது
உப்பு - தேவையான அளவு
காரட் பொடியாக துருவியது - 2 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் - ஒன்று
எண்ணை - 4 ஸ்பூன்


 

முதலில் அவலை நன்றாக சுத்தம் செய்து, 90 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுறித்து, சிறிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி அதில் ஜீரகம் போட்டு, பிறகு இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுது போட்டு அரை நிமிடம் வதக்கவும்.
உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
சிறிது ரோஸ்ட் ஆனதும் அதில் அவலை போட்டு நன்றாக கிளறவும்.
அடுப்பை நிறுத்தவும். பிறகு ஒரு ஸ்பூன் நெய், துருவிய காரட், கொத்துமல்லி எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக கலந்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்