மீதமான ரொட்டி

நான் costco போனப்பொ ரெண்டு bag ப்ரெட் வாங்கி வந்தேன். இப்பத்தைக்கு ஒரு bag மட்டும் காலி ஆச்சு. இன்னும் ரெண்டு நாள்ல மீதமுள்ள ஒரு bagஐயும் முடிக்கனும்.
என்ன வெல்லாம் பண்ணலாம், சொல்லுங்க தோழிகளே, சகோதரிகளே!!!!

இந்த ப்ரெட்டை வாங்கிட்டு, அதை காலி பண்ணனுமேன்னு ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு bagஅ காலி பண்ணோம். சீக்கிரமா சொல்லுங்க. இன்னமும் ரெண்டே நாள் தான்:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹர்ஷ், நம்ம அறுசுவையில நிறைய ப்ரெட் குறிப்புகள் இருக்கு பாருங்க. ப்ரெட் மசால், பஜ்ஜி, (இது யாரும் சமைக்கலாம்-ல), உப்புமா, அப்புறம் செல்வி அக்கா கூட ப்ரெட்-ல பால் பாயசம்னு ஒரு குறிப்பு குடுத்து இருக்காங்க. இப்படி நிறைய இருக்கு. தேடுங்க..தேடுங்க..

எனக்கு எண்ணெய் அதிகம் இல்லாம, சர்க்கரை எதுவும் சேர்க்காம குறிப்பு வேணும். ஏன்னா அப்புறம் நான் மட்டும் தென் சாப்பிடனும். துனைக்கு யாரும் வரமாட்டாங்க எங்க வீட்டுல.

குறிப்புகள் பக்கத்துக்கு போய் தேடிட்டு அப்புறம் இங்க வாரேனுங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

எனக்கு பிரெட்டை ரஸ்க் ஆக்க வழி இருந்தா சொல்லுங்கப்பா. ரெண்டு நாள் கழிச்சும் சாப்பிடற மாதிரி அந்த பிரெட்டை பண்ணனும். இதுக்கு ஏதாவது வழி இருக்கா.:-(

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

யாரும் சமைக்கலாமில் ப்ரெட் மசால் இருக்கு பாத்தீங்களா? அதுல கால் கப் எண்ணெய் போட சொல்லியிருக்கு. நீங்க கொஞ்ஞம் கம்மி பண்ணி கூட போடலாம். இல்ல வேற யாராவது ஐடியா குடுக்கறாங்களான்னு பாப்போம்.

ப்ரெட் டோஸ்டரில் ஹை செட்டிங் -ல (நம்பர் இருந்தா 4 ) வெச்சு டோஸ்ட் பண்ணா ப்ரெட் ஹார்டாக ஆகும். முதல்ல ஒரு ப்ரெட்டை வச்சு பாருங்க. ரொம்ப தீய்ந்து போச்சுன்னா செட்டிங்க குறைச்சுக்கோங்க.

ஹர்ஷினி இல்லேனா, பிரட் வைச்சு நான் ஒரு டிப்ஸ் சொல்லறேன். ஆனா நீங்க sugar, oil வேண்டாம்னு சொல்லிட்டீங்க, ஆனா எனக்கு sugar வைச்சுதான் தெரியும், உங்க பொண்ணுக்கு செய்து தரலாம்.

(எதோ என்னாலயும் முடிஞ்ச ஒரு டிப்ஸ்)

2 பிரட் same time la ghee விட்டு toast பண்ணிக்குங்க, அப்புறம் spoon ல Milk எடுத்து ரெண்டு பிரட் மேலையும், சைடுலேயும் (தோசைக்கு ஆயில் ஊத்தறமாதிறி ) ஊத்துங்க. அப்புறம் பிரட் மேல ஒரு ஸ்பூன் sugar (or honey?)போடுங்க, இன்னொரு பிரட் எடுத்து மேல வைச்சு சாப்பிட கொடுங்க.

ரொம்ப நல்லா இருக்கும், ஆனா உங்க பொண்ணுக்குதான் இப்போ இருமல் ஆச்சே கொடுக்கலாமா?

பிரியமுடன்
பாப்பு

யாராவது wheat breadku ரெசிப்பி சொல்லுங்கல்லேன் please

அன்டபுடன்
சங்கீதா

வானதி, பாப்பு,

ரொம்ப தேங்க்ஸ். நான் யாரும் சமைக்கலாம்-ல இருக்கற ஸ்பைசி ப்ரெட் பண்ணிட்டு வந்தேன். எண்ணெய் கம்மியா போட்டேன். டேஸ்ட் எனக்கு ஓகே. ஹஸ்க்கு பிடிக்குமான்னு சந்தேகம். பார்கலாம். இல்ல ஏதாவது ஆல்டெரேஷன் பண்ணனும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஹர்ஷ்,
ரொட்டியை பிய்த்து மிக்ஸியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி, உதிர்த்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, உதிர்த்த ரொட்டியையும் சேர்த்து, சிறிது உப்புத் தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும். எண்ணெய் குறைவான பிரட் உப்புமா ரெடி. (என்னோட ஒரு ரெசிபி இப்படி அவுட் ஆயிருச்சே :-( )
அவ்வளவு கஷ்டப்படுவானேன், பிரட்டை ஓவனில் வைத்து மொறுமொறுப்பாக்கி எடுத்து, மிக்ஸியில் தூளாக்கி, டப்பாவில் வைத்துக் கொண்டால், கட்லெட், ரோல், உருளைக்கிழங்கு ஃபிரை, பக்கோடா எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாமே. நீண்ட நாட்களுக்கும் கெடாமலிருக்கும். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்