இந்த நாள் இனிய நாள் - சமையல் பக்கம் :-)

ஹாய்,

எல்லாம் இங்க வந்து இன்னைக்கு என்ன சமையல் பண்ணீங்கன்னு போடுங்க. யார் யாரெல்லாம் சமைக்காம ஓபி அடிக்கறோம்னு தெரிஞ்சிப்போம்.
அருசுவையை பாத்து யாரெல்லாம் சமச்சாங்கன்னும் தெரியும். எந்த குறிப்பு,

இந்த வார பெஸ்ட் குறிப்புன்னு நாமலே தேர்ந்தெடுக்கலாம். அதாவது அட்லீஸ்ட் வாரம் ஒரு குறிப்பாவது நாம அருசுவை.காமில் இருந்து எடுத்து சமைத்து அதற்கு பின்னூட்டம் அளிக்கலாம். முடிஞ்சா எல்லோரும் ஏதாவது ஒரு நாள் முடிவு பண்ணி ஒரே டிஷ் பண்ணலாம். எங்கெங்கோ இருந்தாலும் நாமலும் ஒண்ணா சமச்சு கூட்டாஞ்சோறு சாப்பிடலாம். வாங்க மக்களே! வாங்க!!

நான் சொல்ல வரர்த ஒழுங்கா சொன்னேனான்னு தெரியல. ஆனாலும் ஓரளவுக்கு எல்லார்க்கும் புரிஞ்சிருக்கும்னு தான் நினக்கறேன்.

முதல்ல நான் பதிவு பண்றேன்:-).

இன்னைக்கு நான் மிளகு பூண்டு குழம்பு பண்ணேன்(எனக்கு ஜலதோஷம் அத சாப்பிட்டாலாவது குறையும்னு).

வாங்க உங்க வீட்டு சமையலையும் சொல்லுங்க. அப்புறம் ரமலான் நோம்பு உள்ளவர்கள் தினமும் ஏதாவது சூப்பர் டிஷ் பண்ணூவீங்க இல்லையா அதை இங்க பதிவு பண்ணுங்க. முடிஞ்சா குறிப்பும் கொடுத்துருங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹர்ஷ் நான் வாரம் ஒரு பதிவு மட்டும் அருசுவைலிருந்து சமைக்கறது இல்ல,என் ஹஸ் OFFICI LAPTOP எப்பவும் இருக்கற இடம் KITCHEN தான்.

நான் சமையல் செய்ய START பண்ணிண முதல் நாள் ல இருந்து அருசுவை(arusuvai.com)ITEMS தான்.

இங்க US ல என் ஹஸ் OFFICE ல யும் அருசுவை என்னால ரொம்ப FAMOUSஆயிடுச்சு.

என் ஹஸ் நான் arusuvai.com member ஆ இருக்கறத அவர் friends கிட்ட எல்லாம் ரொம்ப பெருமையா சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஹர்ஷ்

இன்னைக்கு நான் அருசுவை ல இருந்து காப்பியடிச்ச ITEM பருப்பு சாதம்.

பிரியமுடன்
பாப்பு

பாடாய்படுத்தும் இன்பெக்ஷனை என் பையன் ஸ்கூலிலிருந்து கொண்டு வந்து எனக்கு ஒட்டி விட்டுவிட்டதால் இருவரும் கடந்த 3 வாரமாக மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஜுரம், தொண்டைவலி, கண்வலி வேறு. எந்த ஆண்டி பயாட்டிக்சுக்கும் சரியாகாமல் படுத்துது. இன்னைக்கு ஆபிசும் போகல.

பையன் உடம்பையாவது தேத்தணும்னு சிக்கன் சூப், மிளகு சீரக சிக்கன் குழம்புன்னு இதுதான் இன்னைக்கு என் வீட்டு சமையல். எனக்கு அறுசுவையில் மிகவும் பிடித்த சமையல் குறிப்புகள் பைரோஜோ அவர்களின் சமையல் குறிப்புகள். அவர் யாரும் சமைக்கலாமில் சொல்லியிருக்கும் அத்தனை குறிப்புகளும் செய்து பார்த்திருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கும். அறுசுவையை ஒரு வாரம் கழித்து நேற்றுதான் படித்து முடித்தேன்.

ஹர்ஷினி, ஒவ்வொரு பதிவா புதுசு புதுசா போட்டு அசத்துறீங்க. வாழ்த்துக்கள்.

ஹாய் ஜானகி,
அறுசுவையால எந்த வேலைப் பளுவும் இல்லை. நாந்தான் எதுவும் எழுதவே இல்லையே. உங்களுக்கு மெயில் அனுப்பக்கூட முடியல. சாரி. முடிஞ்சா பேசறேன் இன்னைக்கு. என் வாய்ஸ் இன்னைக்கு ரொம்ப கொடுமையா இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.

நான் நேத்து தான் பூண்டு ரசம், பீட்ரூட் கூட்டு, பாகற்காய் ஃப்ரை பண்ணேன். 4 பீட்ரூட் தான் வாங்கினேன் ஆனாலும் ரொம்ப இருந்துது அதனால ஒரு பீட்ரூட் அல்வா வேற. இன்னிக்கு ஒண்ணும் சமைக்கல, இதை தீர்க்கவே இன்னும் 2 நாள் ஆகிடும்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

இன்னைக்கு நான் கோதுமை புட்டு செஞ்சு, இப்ப சாப்டுகிட்டு இருக்கேன். ரொம்ப சூப்பரா வந்தது.

தேவா,
எப்படி இருக்கீங்க? குழந்தை எப்படி இருக்காங்க? எனக்கும் உங்கள போலவே தான் இருக்கு. இத்தன நாள் கண்வலி மட்டும் இல்லாம இருந்தது. இப்ப அதுவும் வந்தாயிச்சு. உடம்ப பாத்துக்கோங்க. வந்து மெகா டூர் ட்ரிப் ஏற்பாடு பண்ணீ, எங்க எல்லரையும் கூட்டிட்டு போங்க!!!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இன்னக்கி எங்க வீட்ல பாயாசம்,கேரட் ஹல்வா,ஃபிஷ் ரோல்,ப்ரெட் டோச்ட்,உன்னக்காய்,சமோசா ,நோன்பு திறக்கும்போது இருந்தது...அப்ரம் ராத்திரிக்கு நண்டு மசாலா,தோசை,சாம்பார்,ரெட் சட்னி..
இதில சமோசா மட்டும் 3 நாளைக்கு தேவையானதை ஃப்ரீசெர்ல வெச்சுக்குவேன்..அப்ரம் தேவைகு எடுத்து பொரிப்பேன்...மத்ததெல்லாம் செஞ்சது...ரெட் சட்னின்னா பயந்துட வேன்டாம்..பேர் தெரீல..அம்மா செய்வாங்க.....தேங்காய் என்னையில் சின்ன வெங்காயம்,பூன்டு,வரமிளகாஇ வழற்றிட்டு,,தக்காளி வழற்றிட்டு அரக்கரது தான் ரெட் சட்னி...விடியற்காலை சஹர்க்கு ஓட்ஸ்,சப்பாதி ந் எக் சேன்ட்விச்,அப்ரம் ஒரு நேன்தரன் பழம் சாப்புடுவோம்...தேவா எப்படி இருக்கீங்கன்னு இப்ப கேக்க முடியாது...சொல்ரதக் கேட்டாவே பயங்கரமா இருக்கு....எல்லாம் சரியாஇட்டு சீக்ரம் வாங்க இங்க

தளிகா:-)

எங்க வீட்ல இன்னைக்கு
முள்ளங்கி சாம்பார் , நேத்து வச்ச ரசம், steamed brocoli,கீரை கூட்டு.
அம்புட்டு தான்:)

அனிதா

hi

ஹாய் ஹர்ஸினி , நானும் இன்னிக்கு கோதுமை புட்டுதான் செய்தேன். நமக்குல்ல என்ன ஒற்றுமை பாருங்க.
அன்புடன்
சுதா

இப்போதான் சுலப முறை தோசை சாம்பார் செய்தேன்.எங்கள் இரவு உணவு தோசை ,தேங்காய் சட்னி மற்றும் சாம்பார்.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

எங்கள் வீட்டில் இன்று இரவு இட்லி மற்றும் தக்காளி சட்னி

அன்புடன்
காஞ்சனா

மேலும் சில பதிவுகள்