திடீர் பாயசம் - 2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - 50 கிராம்
திக்கான பசும்பால் - ஒரு கப்
சீனி - 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப
கிஸ்மிஸ் பழம் - தேவைக்கேற்ப
ஏலப்பொடி - ஒரு சிட்டிகை


 

அவலை தண்ணீரில் ஊற வைத்து விடவும்.
ஒரு பத்திரத்தில் பாலை ஊற்றி அதனுடன் ஊற வைத்த அவல், சீனி, ஏலப்பொடி கலந்து கொதிக்க வைக்கவும்.
பிறகு நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை பாலில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்