பஜ்ஜி

தேதி: September 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 1/4 கிலோ,
பச்சரிசி - 1 கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 10,
சீரகம் - 1 தேக்கரண்டி,
பூண்டு - 2 பல்,
பெருங்காயம் - சிறிது,
இட்லி சோடா - 1 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

பச்சரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சரிசி, மிளகாய், சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
சலித்த கடலை மாவு, இட்லி சோடாவுடன் அரைத்ததை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாழைக்காய், பெரிய வெங்காயம், ப்ரட், வெள்ளரிக்காய், பழுக்காத ஆப்பிள், பீர்க்கங்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு இவற்றில் எது விருப்பமோ அதை வட்டமாக, மெலிதாக நறுக்கி, கரைத்த மாவில் பஜ்ஜி போடவும்.


தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கேட்டவுடன் பதில் கொடுத்து அசத்திவிட்டீர்கள் அக்கா.மிகவும் நன்றி.

ஏதோ புதிர் போட்டு இருக்கீங்க.பஜ்ஜிக்கும் உங்க வாழ்க்கைக்கும் நெருங்கின சம்பந்தம் இருக்கும் போல அக்கா.என்ன நியாபகம் அந்த நாள் நியாபகமா.சீக்கிரம் சொல்லுங்கள்.

உங்க பஜ்ஜி செய்முறை குறிப்பை இன்றே செய்து பார்தேன்.முதலில் போட்டவுடன் பஞ்சு போல் வந்தது.அப்பரம் மீன்டும் நீங்கல் சொன்னது போல மாவு ரொம்ப திக்காக இல்லாமல் செய்தேன்.நான் எதிர்பார்த்த மொறுமொறுப்பு எனக்கு கிடைத்துவிட்டது
சூப்பர் அக்கா.உன்மை தான் அக்கா.இன்று

விருந்தினர் வந்து இருந்தாங்க அக்கா.ஒரு 40 பஜ்ஜி சுட்டேன் அத்தனையும் காலி.எனக்கு கிடைத்த பாராட்டெல்லாம் உங்கலுக்குத்தான் அக்கா.

அன்புடன் பர்வீன்

டியர் பர்வீன்.
பாராட்டுக்கு நன்றிமா.
என்னோட பஜ்ஜி அனுபவத்த கீழ்க்கண்ட த்ரெட்டில் போட்டிருக்கேன், படிச்சுட்டு சிரிங்க. அதுமாதிரி கூட பஜ்ஜி செய்யலாம்.
http://www.arusuvai.com/tamil/forum/no/5204?from=60&comments_per_page=30
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி
இன்று உங்கள் பஜ்ஜி செய்தேன். பிரமாதம். நான் வழக்கமாக அரிசி மாவு, தனி மிளகாய் தூள் சேர்த்து தான் செய்வேன். ஆனால் இது மிகவும் நன்றாக இருந்தது. இனி எஙகள் வீட்டில் உஙகள் பஜ்ஜி தான்.நன்றி.

டியர் கோதை,
எப்படியிருக்கீங்க? நீங்க அறுசுவைக்குப் புதிசு மாதிரி இருக்கே. வாழ்த்துக்கள்.
உங்கள் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா!
உங்க பஜ்ஜி குறிப்பினை பார்த்திட்டு பஜ்ஜி பண்ணினேன். இதற்கு முன்பு, பச்சரிசி மாவும்,மிளக்காய்த்தூள் போட்டுதான் பண்ணுவேன்.
இந்த அரைத்து சேர்க்கும் முறை ரொம்ப நல்லா இருக்கு. டேஸ்ட் வித்தியாசமா, பஜ்ஜி வாசனையாவும் இருந்தது. நன்றி!