பச்சை சுண்டக்காய்

பச்சை சுண்டக்காய் எப்படி குழம்பு வைப்பது?யாராவது தெரிந்தால் சொல்லுங்க.ரொம்ப நேரமா தேடிபார்த்துவிட்டேன்.கிடைக்கவில்லை.

ஹாய் ரோஸ்,
பச்சை சுண்டைக்காய் நம்ம ஊர்ல எங்க கிடைக்குது?
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இடம் சொல்லவும்,நானும் வாங்கிக்கிறேன்
ஆனா குறிப்பு என்கிட்டே இல்லை.

ரோஸ், சாதாரணமாக புளிக்குழம்பு வைப்பது போல காய் போடாமல் வெங்காயம் தக்காளி மட்டும் சேர்த்து செய்யலாம்.
முதலில் எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி அதனுடன் சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் , புளிக்கரைசலை சேர்த்து அதனுடன் மஞ்சள்,வத்தல்,மல்லிப்பொடிகளை சேர்த்து குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும். விருப்பமிருந்தால் தேங்காய்,சீரகம் அரைத்து சேர்க்கலாம்.

சுபா spinneysல் வாங்கினேன்.சிரிலக்கா வெஜிடப்ள் பகுதியில் இருந்தது.உங்களுக்கு அருகில் இருக்கும் எந்த spinneysலும் கிடைக்கும்.

புளிகுழம்பு போல்தானா???இதுக்குபோய் எவ்வளவோ நேரம் தேடினேன்.சரியான மக்குனு நினைச்சிட்டீங்களா???இதுக்குமுன்னால் இதை சமைத்ததில்லை.உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

ஹாய் ரோஸ்,

சுண்டக்காயை முதலில் பாதி கட் பண்ணி, நசுக்கி விடனும். அடுத்தது அதை தண்ணீரில் போட்டு, பிழிந்து எடுத்துவிட்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் சுண்Dஅக்காய் போட்டு நன்கு பச்சை வாசனை போகறவரைக்கும் வதக்கிவிடனும். அவ்ளவு தான். இதுக்கு அப்புறம் காரக்குழம்பு பண்றது மாதிரி தான் பண்ணனும். ரொம்ப டேஸ்டி குழம்பு. எனக்கு ரொம்ப பிடிக்கும். புளியை கெட்டியாக கரைத்து, குழம்பு ரொம்ப நீராக இல்லாம பண்ணனும். பண்ணிட்டு சொல்லுங்க. எனக்கு நாக்குல தண்ணி ஊருது. இங்க பச்ச சுண்டக்காயா, பாக்கவே முடியல.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்