குழந்தைக்கு மசாஜ்

குழந்தைக்கு மசாஜ் செய்யவும்சிலவிதிமுறைகள் இருக்கு...நம்ம ஊரில் பிரசவத்துக்கு வர்ர பாட்டிகளை விட்டு மசாஜ் பன்ர ஒரு பழக்கம் இன்னக்கும் இருக்கு..இதில் நிறைய பாட்டிகள் இருக்கர ஷக்தியெல்லாம் குழந்தை மேல காமிச்சு குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஆயிடுது..என் டாக்டர் என்னிடம்சொன்ன ஒரு விஷயம் என்னை ஷாக் ஆக்கி விட்டது..நிறைய குழந்தைகளைக் கொன்டு வர்ரது எலும்பு முறிவுன்னு வர்ரது முறையற்ற மசாஜ்னாலயாம்....என் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பிரசவம் முடிஞ்சு குழந்தையை கவனிக்க வேலைக்கு ஆளைக் கிடைக்கலைன்னு வருத்தமா சொன்னாங்க...நானும் அசால்டா அப்படியான்னேன்....ஆமா என் முதல் குழந்தைக்கு எப்படியெல்லாம் முன்ன வேலைக்கு இருந்தவங்க மசாஜ் பன்னாங்க தெரியுமா....அது மாதிரி என் இரன்டாவது குழந்தைக்கு முடியலயேன்னு வருத்தம்னாங்க..நான் எப்படின்னு கேட்டேன்...குதந்தையில் ஒரு மூக்கு துவாரத்தில் நூலை விட்டு இன்னொரு துவாரம் வழியா எடுப்பாங்களாம்....வாய்குள் விரலை விட்டு அழுக்கை எடுப்பார்களாம்.தலை கீழாஇ தொங்க விட்டு ஆட்டினால் குழந்தை நல்ல வளருமாம்...காதில் ஊதி காதை சுத்தப் படுத்துவார்களாம்..நான் திகைச்சுப் போயிட்டேன்..என்ன முட்டாள்தனம்..பிஞ்சு குழந்தையை கொடுமைப் படுத்துரதை அம்மவே ரொம்ப பெருமையா சொல்ரதை கேட்டப்ப எனக்கு அத்திரம் தான் வந்தது....
வேறு தளங்கள்ள படிச்சு தான் நானும் என் பொண்ணுக்கு செய்தேன்...அந்த லின்கை இங்கே கொடுக்கிரேன்
http://iaia.essortment.com/massagebabies_rjna.htm

http://www.babycenter.com/0_a-guide-to-infant-massage_3835.bc?Ad=com.bc.common.AdInfo%4015572504

இதில் இரண்டாவது லின்கில் உள்ள மசாஜை மட்டுமாவது தினம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்...தயவு செய்து அழுக அழுக குழந்தைக்கு எண்ணை தேய்க்கவோ மசாஜ் செய்யவோ வேன்டாம்..சுத்தமான தேங்காய் என்னையோ,ஆலிவ் என்னையோ,ஆல்மன்ட் என்னையோ உபயோகிப்பது நல்லது

இந்த பயனுள்ள குறிப்பிற்கு மிகவும் நன்றி தளிகா. நான் முதலில் Johnson's Baby Oil பயன்படுத்தினேன். பின்னர் அதில் இருப்பது மினெரல் ஆயில் (மண்ணெண்ணெய்) என்பதை அறிந்தவுடன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள தேங்காய், ஆலிவ், மற்றும் ஆல்மன்ட் எண்ணெய் எல்லா குழந்தைகளுக்கும் ஒத்துக்கொள்ளுமா? அலர்ஜியெனில் எப்படி கண்டறிவது?

ஆறுமாத குழந்தைக்கு தலைக்கு எண்ணெய் தேவையா? தேவையெனில் என்ன எண்ணெய் பயன்படுத்துவது?

நீங்கள் குழந்தை ஆரோக்கியம் பற்றி நிறைய எழுதுகிறீர்கள். உங்கள் தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி. உங்கள் குழந்தை நலமா?

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

டியர் இஸ்ஹானி
குழந்தைக்கு மசாஜ்ஜுக்கு ஆலிவ் ஆயில் பயன் படுத்துங்கள்
குழந்தைக்கு நல்ல கலரும் வரும்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலீலா பானு.

தலைக்கும் ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாமா?

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

ஒவ்வொருவரின் அனுபவத்தைப் பொருத்து ஒவ்வொன்னை பரிந்துரைப்பார்கள்....அதிகமா முடிக்கு போடர என்னைக்கு அலர்ஜியா இல்லயான்னு அவ்வளவு சீக்ரம் கன்டு பிடிக்க முடியாது..உடம்புக்குன்னா வித்யாசம் தெரியும்....சின்ன குரு குரு மாதிரி இருக்கா..இல்ல போக போக குழந்தையின் நிறம் மங்கிட்டே இருக்கா..இல்ல தோல் வறந்டு போர மாதிரி இருக்கான்னு பாத்தா தெரியும்..முடிக்கு நல்லது தேங்காய் எண்ணை தான்..உடம்புக்கு என்னைக் கேட்டால் ஆல்மன்ட் ஆயிலை சொல்வேன்....பிறந்து முதல் 6 மாதத்துக்கு ஸோபை லேசாக நம்ம கைய்யில் தடவிட்டு சும்ம கொஞ்சமா லேசா தேச்சா போதும்...6 மாதத்திற்குப் பிறகு கடலை மாவு ,மஞ்சள் பால் கலந்து தேய்க்கலாம்....முடிக்கு போடும் எண்னையோ ஷாம்புவாலோ முடி அதிகமாக உதிர்வது போல் தோன்றினால் அதை கொஞ்ச நாள் நிருத்திட்டு வித்த்யாசம் இருந்தா அப்ப என்ன காரனம்னு கன்டுபுடிச்சுடலாம்...பிறந்த குழந்தைகு க்ரேடில் கேப் எனப்படும் ஒரு வகை கறுப்பு நிறத்தில் தலையின் மேல் கானப்படும் ....அது இருந்தா ஆலிவ் ஏன்னை தேச்சுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு சாஃப்ட் ப்ரஷ் வெச்சு சீவிட்டா அது உதிர்ந்து விழும்..பிறகு குளிக்க வெக்கலாம்....அய்யோ அவசர அவசரமா எழுதரேன் இஷானி..அதான் தப்பு தப்பா இருக்கும்...நாளைகு முடிஞ்சா வரேன்...ஒக்யா?

தளிகா:-)

அதிக நேரம் ஊறப் போட வேன்டாம்...குளிப்பதற்கு 10 நிமிடம் முன்னே தலைக்கு தேச்சுட்டு குளிக்கும்போது ஷாம்புவால் கழுவி விடவேன்டும்..தினமும் அவசியமில்லை....3 நாளுக்கு ஒரு முறை போதும்...மற்ற நாள் வெறும் தண்ணீரில் தலையை அலசினாலே போதும்...ஷாம்பூவில் உள்ள பி ஹெச் லெவெல் சில குழந்தைகளின் முடிக்கு அலர்ஜி பன்னி விடும்....அதனால் தினம் ஷாம்பூ போதுவதை தவிர்க்கவும்...தேங்காய் எண்ணையும் ,ஆல்மன்ட் ஆயிலும் தலைக்கு தேய்ப்பேன் என் பொண்ணுக்கு..

தளிகா:-)

Johnson's Baby Oil மண்ணெண்ணெய் aaa r மினெரல் ஆயில் aa?

எனக்கும் முதலில் சந்தேகமாகத்தான் இருந்தது. Johnson Baby Oil-ல் இருப்பது Scented மினரல் ஆயில். மினரல் ஆயில் பற்றிய விளக்கத்திற்கு இந்த லிங்க்-கை பார்க்கவும். மண்ணெண்ணெய் என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Mineral_oil

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

தெளிவான விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி தளிகா. உங்களிடம் உள்ள சிறப்பம்சமே பல வேலைகளுக்கிடையிலும் அலுக்காமல் தெளிவான பதில் தருவதுதான். வெகு நாட்களாக இருந்த சந்தேகம். தீர்த்தமைக்கு நன்றி. ஆலிவ் அல்லது ஆல்மன்ட் ஆயில் பயன்படுத்திப் பார்க்கிறேன்.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

இஷானி, குழந்தைகளுடைய பொருளிலா மண்ணெண்ணெயை சேர்ப்பார்கள்? மண்ணெண்ணெயையும், மினரல் ஆயிலையும் சேர்த்து குழம்பி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ம.எண்ணெய் பற்றி அறிய இந்த லின்கை பார்க்கவும்:

http://en.wikipedia.org/wiki/Kerosene

எனக்கும் இதில் சிறிது சந்தேகமே. ஆனால் ஒருமுறை குமுதத்தில் படித்த ஞாபகம். குமுதம்.காம் சென்று, குமுதம் ஹெல்த்-ல் 01-06-07 ல் குழந்தை வளர்ப்பில் தவறுகளும் மூட நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் Dr.ஜெகதீசன் எழுதிய கருத்துக்களை பார்க்கவும். இதை படித்த பின்பே எனக்கு இந்த குழப்பம். உங்கள் கருத்தே சரியெனப்படுகிறது. சந்தேகத்தின் பேரில்தான் மண்ணெண்ணெய் என சொல்லலாம் என குறிப்பிட்டிருந்தேன்.

உங்கள் கருத்திற்கு நன்றி.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்