பச்சைப் பயிறு இனிப்பு சுண்டல்

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சைப்பயிறு - 2 கப்
வெல்லம் - 2 கப்
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்


 

பச்சைப்பயிறை வாணலியில் போட்டு லேசாக வறுத்து வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைக்கவும்.
5 நிமிடங்கள் கொதித்ததும் வேக வைத்து வடித்த பயிறைப் போடவும்.
பயிறு வெந்து வெல்லம் சுண்டியதும் இறக்கி ஆற வைக்கவும்.
தேங்காய் துருவல், சுக்குப் பொடி, நெய் சேர்த்துக் கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்