சோயா சுண்டல் 2

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோயா பயறு - 2 கப்
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1/2 கப்
தனியா - 4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து


 

சோயா பயறை இரவே ஊற வைக்கவும்.
ஊறிய சோயாவை மிதமான வெந்நீர் விட்டு கழுவவும். (அப்பொழுதுதான் சோயாவிலுள்ள வாடை போகும்).
உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு தனியா கடலைப் பருப்பு, கசகசா, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து பொடித்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பிறகு பொடித்து வைத்த பொடியைப்போட்டு வதக்கி வெந்த சோயாவைப் போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்