ஷாஹி தூக்ரே

தேதி: September 29, 2007

பரிமாறும் அளவு: 5பேர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் - 8 ஸ்லைஸ்
கன்டென்ஸ்ட் மில்க்(மில்க் மெய்ட்) - 12 ஸ்பூன்
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா, சாரை பருப்பு இவை - 2 ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - ஒரு ஸ்பூன்


 

முதலில் ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு நான்காக வெட்டவும்.
இதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பருப்பு வகைகளை தனியாக பொரித்து எடுக்கவும்.
பால், கன்டென்ஸ்ட் மில்க், சீனி, ஏலம் சேர்த்து குறைந்த தீயில், காய்ச்சவும்.
இந்த கலவை கெட்டியாகி வரும் பொழுது, பொரித்த ப்ரெட் துண்டங்களை போடவும். அடுப்பை அணைத்து விடவும்.
ப்ரெட் துண்டுகள் கலவையை உறிஞ்சியதும் குளிர வைத்து பருப்புகளை தூவி பரிமாறவும்.


இது ஒரு வடநாட்டு ஸ்பெஷல். செய்வது சுலபம். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். ஹெல்தியும் கூட.
பருப்புகள், வீட்டில் என்ன இருக்கிறதோ அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்