பூண்டு முறுக்கு

தேதி: September 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி புழுங்கல் அரிசி -- 2 கப் (ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்)
பொட்டுக்கடலை மாவு -- 1 கப்
கடலைமாவு -- 1 கப்
மிளகாய் -- காரத்திற்கு தே.அ
பூண்டு -- 5 பல்
உப்பு -- தே.அ
டால்டா -- 100 கிராம்


 

முதலில் பூண்டு,மிளகாயை அரைத்த ஜூசை மட்டும் வடிகட்டவும்.
பொட்டுக்கடலை மாவு,கடலைமாவுடன் டால்டாவை லேசாக உருக்கி சேர்க்கவும்.
பிறகு அரைத்த அரிசிமாவுடன் பொட்டுக்கடலை மாவு , கடலைமாவு மற்றும் பூண்டு,மிளகாய் ஜூஸ் , உப்பு சேர்த்து பிசையவும்.
இதை முருக்கு பிழியும் உழக்கில் போட்டு பிழிந்து எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்