நீர் உருண்டை [ காரம்]

தேதி: October 1, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி- 2 கப்
பாசிப்பருப்பு-அரை கப்
வற்றல் மிளகாய்-3
கடுகு-அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
தேங்காய் துருவல்- அரை சுப்
தேவையான உப்பு
நல்லெண்ணெய்-4 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்


 

பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் போதுமான தண்ணீரில் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
போதுமான நீர் சேர்த்து தோசை மாவு போல கரைத்துக் கொள்ளவும்.
வாணலியை சூடாக்கிஎண்ணெயை ஊற்றவும்.
கடுகைப்போட்டு அது வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கி பாதியளவு மாவை ஊற்றி தகுந்த உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து மிகக் குறைந்த தீயில் கிளறவும்.
கெட்டியானதும் சிறிது நேரம் ஆறவிட்டு சிறு சிறு உருண்டைகள் செய்து ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்