சிக்கன் சூப்

தேதி: October 2, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுத்தம் செய்த கோழி(எலும்பு அதிகமுள்ள நெஞ்சுப் பகுதி
அல்லது கோழி Frame) - 250 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 3 (துண்டுகளாக்கவும்)
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகம்(சோம்பு) - 1/2 ஸ்பூன்
பட்டை - ஒரு சிறிய துண்டு
கிராம்பு - 3
தண்ணீர் - 3 கப்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 ஸ்பூன் அளவு


 

ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
ஒரு ஸ்பூன் அளவு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
சிக்கன், மீதமுள்ள வெங்காயம் மற்றும் அனைத்துப் பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். பிறகு குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழையை தூவவும். சூப் ரெடி.


இது குழந்தைகளுக்கு இருமல், சளி அதிகம் இருக்கும்போது தயாரித்துக் கொடுக்கலாம். செய்வதும் மிக எளிது.
இதனை சாதத்துடன் அல்லது இட்லியுடனும்கூட கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சுவையான சூப். இப்ப தான் சாப்பிட்டு வந்தேன்... கையோட பதிவு :) ஃபோட்டோ எடுக்கும் நேரம் கூட சூப்பை ஆற விட மனம் வரவில்லை. சுவையான குறிப்புக்கு நன்றி தேவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா