காராமணி சுண்டல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காராமணி - அரை கப்
வெல்லத்தூள் - 2 தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 2
பெருங்காயம் - சிறு துண்டு
துருவிய தேங்காய் - ஒரு தேக்கரண்டி


 

முதல் நாளே தண்ணீரில் காராமணியை ஊற வைத்து விடவும்.
மறுநாள் எடுத்து அதில் உப்பு போட்டு வேகவைத்து விட்டு தண்ணீரை வடிக்கட்டவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் காராமணி, வெல்லத் தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும்.
தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல், பெருங்காயம், தேங்காய்த் துருவல் முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
இதனை மிக்ஸியில் கொரக்கொரப்பாக அரைத்து சுண்டலில் சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்