மொச்சை பருப்பு சுண்டல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மொச்சை - ஒரு கப்
அரிசிமாவு - ஒரு கப்
பச்சைமிளகாய் - 4
சிகப்புமிளகாய் - 4
தேங்காய் துருவியது - கால் கப்
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மொச்சையை ஊற வைத்து தோலை உரித்துக் கொள்ளவும்.
அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கொண்டு தண்ணீரை கொதிக் வைத்து மாவில் ஊற்றி கொளுக்கட்டை மாவைப் போல் பிசறிக் கொள்ளவும்.
மாவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு கடுகு, கடலைபருப்பு, மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் மொச்சை பருப்பை போட்டு வேக விட்டு வெந்தவுடன் மாவு உருண்டைகள், உப்பு, மஞ்சள்தூள், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்