குறுக்குத்தையல் (Cross stich )

குறுக்குத்தையலில் (cross stich)என்ன செய்வீர்கள் என்று செல்வி மேடம் கேட்டிருந்தார்கள். நான் அங்கு அதைப்பற்றி குறிப்பிடவில்லை. ஏனெனில் அது அவரின் சமையல் குறிப்பு பின்னூட்டப்பக்கம் என்பதால். மேடம் நான் இதில் நிறைய செய்கிறனான். உடுப்புகளில் (babu frocks, nighty, T-shirt) போடுறனான். பெரிதாக எதாவது கீறி cross stichபண்ணி வைத்திருக்கிறேன். குறுக்கு தையல் மட்டுமல்லாது அதனுடன் ஏனைய அலங்கார தையல்களும் சேர்த்து செய்கிறனான். படம் அட்மினுக்கு அனுப்புகிறேன். அவர் இதில் பிரசுரித்தால் பாருங்கள். நீங்கள் என்ன வகையாக தைப்பீர்கள் என்பதையும் இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா?

அறுசுவை தோழிகளில் வேறு யாருக்காவது இதில் ஆர்வம் உணடா?

மாதிரிக்கு சில

<div><img src="/craft_images/nar_01.jpg" alt="craft" />
<div><img src="/craft_images/nar_02.jpg" alt="craft" />
<div><img src="/craft_images/nar_03.jpg" alt="craft" />

நர்மதா எனக்கு தையல், கைவேலைப்பாடு இதல்லாம் ஒன்னும் தெரியாது.(வேற என்னதான் தெரியும்னு கேட்டுடாதீங்க:-D) யாராவது செய்வதை பார்த்து ரசிக்க மட்டும் தெரியும். நீங்க அட்மினுக்கு படங்களை அனுப்புங்க. எனக்கு பார்க்க ரொம்பவே ஆசையா இருக்கு.
அப்புறம் இந்த cross stich இதெல்லாம் கையால பண்ணனுமா இல்ல தையல் மெஷினால பண்ணனுமா? என்ன நாளைக்கே செய்யற மாதிரி கேக்கரனேன்னு பாக்கறீங்களா, சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னுதான்.

கைத்திறன்கள் பகுதி தயாராகி வருகின்றது. எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் கொண்டு வந்துவிடுகின்றேன். படங்களை அனுப்பி வையுங்கள். பொருத்தமான பிரிவுகளில் சேர்த்துவிடலாம்.

அன்பு சகோதரி நர்மதா,
நான் கேட்டவுடனேயே படங்களும், பதிவும் போட்டமைக்காக நன்றி. வேலைப்பாடுகள் அற்புதமாக உள்ளது. நானும் கிராஸ் ஸ்டிச்சில் இது போன்ற படங்களைத்தான் போட்டுக் கொண்டுள்ளேன். ஓரளவுக்கு எல்லாவகையான தையல்களும் தெரிந்தாலும் எனக்கு நேரமே இருப்பதில்லை. அதைவிட புடவையில் ஃபேப்ரிக் பெயிண்ட் கொண்டு டிசைன் போட்டு, கைவேலைப்பாடு (சம்கி,ஜர்தோசி) செய்வதுதான் எனக்கு பிடிக்கும். தைக்கும் வேலை நிறைய டைம் எடுக்கும், இல்லையா? ஆனால், எனக்கு மிஷின் எம்பிராய்டரி தெரியாது. கத்துக்க ரொம்ப ஆசை. நேரமும் கிடைக்கல, உடம்பும் முடியல. நீங்கள் இன்னும் என்னவெல்லாம் செய்வீர்கள்?
நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள். மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நர்மதா உங்க கைவேலைப்பாடுகள் அழகு!அழகு!! அப்ப உங்க வீட்டை உங்க கைவண்ணத்திலேயே அலங்கரிச்சுடுவீங்க இல்ல!! நான் கடையிலதான் வாங்கனும்:-((

நர்மதா நான் வர்றேன் உங்க வீட்டுபக்கம்.வெளியே வாங்க வேண்டாம் பாருங்க.அழகா இருக்கு.நல்லா பண்ணியிருக்கீங்க

ஹை அழகா இருக்கே??எப்படி மெஷின்லயா??நல்லா இருக்கு..அப்ப இன்னும் நிறைய படங்களை இங்க எதிர்பார்க்கலாம்ல??

தளிகா:-)

கைவேலைப் பாடுகள்னா என்ன அர்த்தம்??அதில் வரைவதும் அடங்குமா???நான் ஓரளவு வரைவேன்....அதை கூட அனுப்பலாமான்னு அட்மின் விளக்கரீங்களா??அதிகம்லாம் இல்ல ஒரு 5 படம் வெச்சிருக்கேன்.....

தளிகா:-)

வரைதலுக்கு தனி செக்ஷன் கொடுக்கிற ஐடியா இல்ல. இந்த கைத்திறன்கள் பகுதியில கற்றுக்கொடுக்கின்ற மாதிரியான விசயங்களை மட்டும் கொண்டு வரலாம்னு இருக்கோம். அதாவது, தையல், அலங்காரப் பொருட்கள் செய்தல், பொம்மைகள் செய்தல் இப்படி.. பெயிண்டிங்னு ஒரு செக்ஷன் இருக்கு. அதுல க்ளாஸ் பெயிண்டிங், பாட் பெயிண்டிங் இந்த மாதிரி பெயிண்டிங் செய்வது எப்படின்னு கொடுக்கப் போறோம்.. இது எல்லாமே ஸ்டெப் பை ஸ்டெப் படங்களோட வரும்.

நீங்க வரைந்த படங்களை இங்கே மன்றத்துல சேர்க்கலாம். இல்லே, படம் வரைவது எப்படின்னு ஸ்டெப் பை ஸ்டெப் படங்களோட உங்களால விளக்க முடியும்னு நீங்க நினைச்சா அதுக்கு ஒரு பகுதி கொண்டு வரலாம். அப்படி இல்லேன்னா, அறுசுவைக்கு நிறைய படங்கள் தேவைப்படுது. வரைஞ்சு கொடுக்கலாம். முன்னாடிகூட ஒரு லோகோ ட்ரை பண்ணுனீங்க..

5 படங்கள்தான்னா இங்கே மன்றத்தில் வெளியிட்டுவிடலாம். அனுப்பி வைங்க.

பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி.

வானதி, இது கையாலதான் தைக்கிறது. பெரிய படங்கள் என்றால் நிறைய நேரம் எடுக்கும். இதுக்கு பெரிய திறமை எல்லாம் தேவைப்படாது:) நீங்க உங்கட குழந்தைகளின் உடுப்பில் கூட சின்ன சின்னதாக போடலாம். அவர்களுக்கும் அம்மா செய்தது என்று பிடிக்கும். வீட்டை அலங்கரிப்பதும் எனக்கு பிடிக்கும்.

செல்வி மேடம், எனக்கும் ஃபேப்ரிக் பெயின்ட்டிங் பிடிக்கும். நீங்கள் செய்த Projects படங்கள் அனுப்புகிறீர்களா? எனக்கு Arts & Crafts ரொம்பவே பிடிக்கும். இதுதான் எண்டில்லை. எல்லாமே பிடிக்கும். 'கண் பார்த்தால் கை செய்யும்' எண்டு எனது அம்மம்மா சொல்வார்கள். அதுபோல எதையாவது பார்த்தால் அதை செய்து பார்க்க ஆர்வம் வந்திரும் :) தையலில் றிபன் ஸ்டிச்(Silk Ribbon stich), ஆடைகள் தைத்தல், knitting, crochet பிடிக்கும்.

தாராளமா வாங்க ரோஸ்மேரி :)

தளிகா, நீங்களும் வரைவீங்களா? நானும் வரைவேன். நான் இயற்கை காட்சிகள்தான் வரையிறது... நீங்க என்னமாதிரி வரைவீங்க? அட்மினுக்கு கெதில நீங்க வரைஞ்சத அனுப்புங்க. நாங்களும் பார்க்கிறோம்.:)

அட்மின் கைத்திறன் பகுதி தொடங்கிய பிறகு இதெல்லாம் அனுப்பலாம் என்று நினைத்தேன். செல்வி மேடம் கேட்டதால் இங்கேயே அனுப்பிட்டேன். :)

மீண்டும் நன்றிகள்.
-நர்மதா :)

வேற தைய்யல் தெரியும் ஆன இப்படி அலங்காரம்லாம் தெரியாது..வரையவும் அப்படி பயங்கர திறமையில்ல...அனுப்பரேன்..ஆனா பெரிய இவ மாதிரி கேட்டுட்டு இத போய் அனுப்பிட்டேன்னு நெனச்சிடுவீங்களோன்னு பயமா இருக்கு:-D...நல்ல இருந்தா வெளியிட்டா போதும்..
எப்படி வரையன்னி கத்துக் கொடுக்கரது எப்படின்னு எனக்கு ஐடியாஅ இல்ல...யோசிச்சுட்டு முடியும்னா உங்களுக்கு நான் சொல்ரேன்...அப்ரம் எனக்கு இன்னொரு ட்ராபேக் எதுவும் பாக்காம வரையத் தெரியாது(இது தான் வரையர திறமையான்னு தான கேள்வி)..எல்லாம் ஈ அடிச்சாங் காப்பி தான்.
இல்லாட்டி ஒரு வேலை செய்ரேன்..உங்கள்ட அனுப்பி நீங்க கஷ்டப்பட்டு வெளியிடர அளவுக்கெல்லாம் எனக்கு திறமை இல்லன்னு எனக்கே நல்ல தெரியும் :-Dஅதனால எங்கயாவது அப்லோட் பன்னிட்டு நானே இங்க லின்க் போட்டுர்ரேன்

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்