தேதி: October 6, 2007
உலகிலேயே மிக எளிதாக செய்யக்கூடிய உருவம் எதுவென்றால், யோசிக்காமல் பிள்ளையார் என்று கூறலாம். வெறும் மஞ்சள் தூளை குவித்து வைப்பதில் இருந்து, அழுத்தமான களிமண்ணில் செய்வது வரை விதவிதமான விநாயகர் உருவத்தை விதவிதமான பொருட்கள் கொண்டு செய்கின்றனர். இங்கே ஒரு வகையான விநாயகர் உருவம் செய்வது எப்படி என்பதை விளக்குகின்றோம். பிள்ளையார் உருவம் களிமண், மாவு, செயற்கை களிமண், எம்சீல் போன்ற கொஞ்சம் மிருது தன்மையும், வடிவங்கள் செய்வதற்கேற்றார்போல் நெகிழ்வு தன்மையும் உடையப் பொருளைக் கொண்டு இந்த வகை பிள்ளையாரை செய்யலாம். இது செய்வதற்கு மிகவும் எளிமையானது. சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம்.
களிமண்/செயற்கை களிமண்/எம்சீல்
கடுகு - இரண்டு
வெள்ளை, சிவப்பு வண்ணங்கள்
இதனைச் செய்வதற்கு களிமண், செயற்கை களிமண், மாவு, எம்சீல் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே அதனை கலவை என்று பொதுப்பெயரில் குறிப்பிடுகின்றோம். முதலில் கலவையை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்கு உருண்டையாக செய்துக் கொள்ளவும். அதில் நடுப்பகுதியில் ஒரு ஊசியை வைத்து சிறிய துளைப் போல செய்யவும். இப்போது விநாயகர் தொப்பை தயார்.

கால்கள் செய்ய சுண்டைக்காய் அளவு கலவையை எடுத்து நன்கு உருட்டிக் கொண்டு உள்ளங்கையில் வைத்து, உருண்டையை நீளவாக்கில் தேய்த்துக் கொண்டே வரவும். அதை படத்தில் காண்பித்திருப்பது போல் லேசாக வளைத்துக் கொள்ளவும்(முந்திரி பருப்பு போல). இதே போல் மற்றொன்றும் செய்துக் கொள்ளவும்.

செய்த வைத்திருக்கும் இரண்டு கால்களையும் தொப்பையின் இருபுறத்திலும் ஒட்டவும்.

வயிற்று பகுதிக்கு எடுத்த கலவையின் பாதி அளவு எடுத்துக் கொண்டு வலது விரலால் பிடித்துக் கொண்டு மேலே உள்ள பகுதி பருமனாகவும் அதற்கு சற்று கீழே உள்ள பகுதியை படத்தில் உள்ளபடி ஒரு இஞ்ச் நீளத்திற்கு உருட்டி தும்பிக்கை போல் செய்துக் கொள்ளவும்.

செய்த தலையை வயிற்றின் மேல் பகுதியில் வைத்து பொருத்தவும். தலைப் பகுதியில் 2 கடுகை வைத்து கண் வைக்கவும். வெள்ளை மற்றும் சிவப்பு நிற பெயிண்டை வைத்து விபூதி பட்டை இடவும். கால் பகுதிக்கு எடுத்த அளவில் பாதி அளவு கலவையை எடுத்து உள்ளங்கையில் வைத்து கால் செய்தது போலவே கைகளும் செய்து கொள்ளவும்.

இரண்டு கைகளையும் கால் பகுதிக்கும் சற்று மேல் வைத்து லேசாக அழுத்தி ஒட்டவும். குண்டு மணி அளவு கலவையை எடுத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும். அதை விநாயகரின் தலை பாகத்தின் மீது வைக்கவும்.

அதே அளவு கலவையை எடுத்து கூம்பு போல் செய்துக் கொள்ளவும். மிளகு அளவு வேக்ஸை எடுத்து கயிறுப் போல் செய்துக் கொள்ளவும். கூம்பு போல் செய்த கலவையை, தலைப்பகுதி மேல் உள்ள தட்டில் வைத்து, அதன் அடிப்பாகத்தில் கயிறு போன்று உருட்டி வைத்துள்ள கலவையை சுற்றவும்.

படத்தில் காட்டியபடி கயிறு சுற்றியது போன்று உள்ள பாகத்தில் ரீஃபில் பின்பாகத்தை வைத்து சுற்றிலும் வட்ட வட்டமாக அச்சு வைக்கவும்.

பட்டாணி அளவு கலவையை எடுத்து அதன் ஒருப்புறத்தை மட்டும் தேய்த்துக் கொண்டு படத்தில் இருப்பது போல் காது வடிவம் செய்துக் கொள்ளவும். இதே போல் மற்றொன்றும் செய்து கொள்ளவும். இரண்டு காதுகளையும் தலைபகுதியில் காது இருக்கவேண்டிய இடத்தில் வைத்து ஒட்டவும்.

இப்போது விநாயகர் தயார். இதனை உங்கள் விருப்பம் போல் அலங்கரித்துக் கொள்ளலாம். விரும்பிய வண்ணங்களையும் தீற்றிக் கொள்ளலாம்.

திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த விநாயகரை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

Comments
தொந்தி கணபதி
இந்த தொந்தி கணபதி யாருடைய கை வண்ணம் என்று சொல்ல வேண்டாமா?
அன்புடன்
ஜெயந்தி
கொள்ளை அழகுப் பிள்ளையார்!
இவ்வளவு அழகா பிள்ளையார் செய்த கைக்கு ரெண்டு மோதகம் கொடுக்கலாம்...செய்து வைத்த கை யாருடைய கை?
அசத்துங்க செண்பகவல்லி...
எளிமையாய் அழகாய் செய்யக்கூடிய விநாயகர்...என் பிள்ளைகள் உடனேயே சப்பாத்தி மாவில் செய்து பார்த்துவிட்டார்கள்...இன்னமும் நிறைய படைப்புகளைச் செய்து அசத்துங்க...
கைவினைப் பொருட்கள்
அன்பு தங்கை செண்பகவல்லி எப்படி இருக்கீங்க? மிகவும் அழகாக தங்கள் கைத்திறனை காட்டியிருக்கின்றீர்கள் அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இதைப் போல் மென் மேலும் தங்களின் கைவண்ணம் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
அன்பு தம்பி அட்மின் அவர்களுக்கு, இந்த அருமையான விசயத்தை துவக்கி எங்களை மேலும் மகிழ்வுற செய்த்தற்கு மிக்க நன்றி. அறுசுவையில் தங்களின் இந்த புதிய பணி மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
hi valli
super .கலக்கிட்டீங்க போங்க.இன்னும் அனுபுங்க.take care byebye
ஆனைமுகன்...
அன்பு தம்பி பாபு அவர்களுக்கு,
வாழ்த்துக்கள். மிகவும் அருமையாகவும், எளிமையாகவும், புதுமையாகவுமுள்ளது இந்த புதிய பகுதி.
அன்பு தங்கை செல்வி. செண்பகவல்லிக்கு என் பாராட்டுக்கள். கண்டிப்பாக மோதகமென்ன மோதிரமே போடலாம்.
(ஐ! கடவுள் நம்பிக்கை இல்ல இல்லன்னே சொல்லிட்டு புது பகுதிய விநாயகரோட ஆரம்பிக்கறீங்களா, ம்.. நடக்கட்டும், நடக்கட்டும். சும்மா தான் சொன்னேன், ஒண்ணும் மனசுல வெச்சுக்காதீங்க!)
தொடரட்டும் இன்னுமிது போன்ற புதிய பல பகுதிகள். உங்கள் முயற்சிக்கும், உழைப்புக்கும் பாராட்டுக்கள்.
நன்றி.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
கடமை தானேது கரிமுகனே
அக்கா, இந்த மாதிரி யாராவது கேள்வி கேட்பீங்கன்னு எதிர்பார்த்ததுதான்:-)
பிள்ளையார் சதுர்த்திக்கு முதல்நாள் இந்த செய்முறையை கொடுத்து இந்த பகுதிய ஆரம்பிக்கலாம்னு சொல்லி படங்கள் எல்லாம் ரெடி பண்ணுனோம். ஆனா, ஆரம்பிக்க முடியலை. இப்ப அது ஒண்ணுதான் ரெடியா இருந்துச்சு. ஒருவழியா அதைப் போட்டு இந்த பகுதியை தொடங்கியாச்சு.
நம்பிக்கை இல்லேங்கிறதுக்காக நான் இதை போடாம விட்டிருந்தா அது நடிப்பா இருக்கும். அந்த மாதிரி ஒரு விசயம் பிரபஞ்சத்தில் இல்லேங்கிறது எனக்கு ரொம்பவே தெளிவு. அதனால நான் இந்த மாதிரி சின்ன விசயங்கள்ல என் தெளிவை வெளிக்காட்டிக்கணும்னு நினைக்கிறது இல்ல :-) (என்னடா இது, நாம சும்மா ஒரு வார்த்தை விளையாட்டுக்கு சொன்னோம். இவன் பெரிய விளக்கமே கொடுக்கிறானேன்னு நினைக்காதீங்க. இது சும்மா.. டமாசு..)
என்னங்க
என்னங்க தம்பீ எங்களையும் கொஞ்சம் கண்டுக்கிறது, நாங்களும் வாழ்த்து சொல்லிருக்கோம்மில்ல....கவனிக்கலையா?
அடடா, நன்றி மறந்தேனே..
ஸாரி மேடம், நான் கவனிச்சேன். வாழ்த்து மட்டும் இருந்ததால இப்ப பதில் எதுவும் சொல்லலை. ஏன்னா இன்னும் கொஞ்சம் பேரு நாளைக்கும் சொல்வாங்க. கடைசியா எல்லாருக்கும் சேர்த்து ஒரு நன்றி சொல்லிக்கலாம்னு இருந்தேன். நேரம், ஸ்பேஸ் எல்லாம் மிச்சப்படுத்தலாம் பாருங்க.. (இது எப்போதும் நான் செய்யிற விசயம். பார்ஷியாலிட்டியா நினைச்சிடாதீங்க.)
செல்வி அக்கா கொஞ்சம் கிண்டல் பண்ணியிருந்தாங்க. அதுக்கு பதில் கொடுக்க வேண்டியது அவசியமாச்சு.:-)
இன்னும் யாருக்குமே நான் நன்றி சொல்லல. நன்றியுரையை கடைசியா வச்சிக்கிறேன்.
வாழ்த்துக்களும் நன்றியும்!!
அறுசுவையில் புதிதாக தொடங்கியுள்ள இப் பகுதிபோல பல பகுதிகளை தொடங்கிட வாழ்துகிறேன்.
செண்பகவல்லி அவர்களுக்கு நன்றிகள் பல. இப் பிள்ளையாரை செய்ய நிச்சயம் முயற்சி செய்வேன்.
(நன்றியுரை வாசிக்கறதுக்குள்ள ஓடியாந்து எடத்த புடிச்சிட்டோம்ல!!)
நான் செஞ்சு பார்த்துட்டேனே:-)
வள்ளி, ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க. உங்க செய்முறை பாத்து, நானும் செஞ்சு பாத்துட்டேன்:-) நன்றி, வள்ளி:-)
ஹப்பா, ரொம்ப நாளா என் பொண்ணு, வினய் மாமாவ பண்ணி கொடுன்னு கேட்டு, நானூம் ட்ரை பண்ணிட்டு இருந்தேன்:-). இன்னைக்கு இங்க பாத்த உடனே, பண்ணனும்னு நினச்சு, இப்ப தான் நேரம் கிடச்சது. செஞ்சு பாத்துட்டேன்:-)
அண்ணா, உங்களுக்கு மெயில் அனுப்பிடறேன், அதனோட படத்தை. ஓகேவா:-)(நீங்க நம்பனுமே அதுக்காக:-))
வானதி, நானும் இங்க பதிவு போட்டு இடத்த புடிச்சிட்டேனே:-)
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
கலர் கலரா பிள்ளையார்
சகோதரி ஹர்ஷினி அவர்கள் தான் செய்திருந்த பிள்ளையாரை படம் எடுத்து அனுப்பியிருந்தார். அதை இங்கே இணைத்துள்ளேன்.
<img src="/contrib/pillaiyar.jpg" alt="Pillaiyar" />
வரப்பிரசாதம்!!!
ரொம்பெ நன்றி செண்பகா,
இது என்னைப்போல் சோம்பேறிகளுக்கு (தனியாக கைவினைக்கு க்ளாஸ் போக) ஒரு வரப்பிரசாதம்.
தெர்யவில்லை என்றால் போய்த்தானே ஆகனும்.
ரொம்ப ஈஸியா புரியும் படியாகவும் படத்துடன் விளக்கியமைக்கு முதலில் நன்றி.
கண்டிப்பாக ஊருக்கு செல்லும் முன் நான் வினாயகரை செய்வேன்.
நான் நீங்க கேட்ட கேள்வி தான் கேட்கலாம்னு இருந்தேன்!!!!.
செல்வியம்மா,
அதெப்படி நான் நீங்க கேட்ட கேள்வி தான் கேட்கலாம்னு இருந்தேன்.
நீங்க கேட்டு அதற்கு அண்ணணின் பதிலையும் படித்தயுற்று.
ஹாய் ஹர்ஸ், வினாயகர் சூப்பர்.
புதுசு கண்ணா புதுசு அசத்தல் கண்ணா அசத்தல்
ம். புதிய பகுதி எல்லாம் சூபர்
கலக்கறீங்க கண்ணுங்களா
அட்மின், செண்பகவல்லி, ஹர்ஷினி - வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி
நானும் நீயும் 1...
சுபா கண்ணு,
Great (wo)men think alike-னு சொல்லி கேள்விப்பட்டதில்ல.
செல்வி.
அன்புடன்,
செல்வி.
இந்த களிமண்ணுக்கும் புரியுது
மிகவும் அழகான முறையில், தெளிவாக விளக்கம் கொடுத்து என்னைப் போல் ஆர்ட் விஷயத்தில் ஜீரோவாக இருப்பவருக்கும் புரியும்படி சொல்லிக் கொடுக்கும் இந்தப் பகுதி மிகவும் அருமை. நானும் என் பையனுக்கு இப்படி எதாவது க்ரியேட்டிவிட்டியா சொல்லித் தரணும்னு நினைப்பேன். ஆனால் எனக்கு அதுக்கு என்றைக்கும் ஒரு ஐடியாவோ, பொறுமையோ இருந்ததில்லை. இனி இதைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும். இதை அழகாக செய்து காட்டிய செண்பகவல்லிக்கு என் பாராட்டுக்கள் மற்றும் நன்றி.
ஹர்ஷினி, உங்க பிள்ளையார் U.S . ல இருக்கறதால ரொம்ப மாடர்னா, கலர்புல்லா இருக்கார் போலிருக்கு. அழகா செஞ்சிருக்கீங்க.
ஹர்ஷூ
ஹர்ஷூ அட்மினுக்கு ப்ரூஃப் வேற தந்துட்டீங்க....வினய் மாமா சூப்பெரா இருக்கார்:-D....செய்து கான்பித்த ஷென்பகவள்ளிக்கு ரொம்ம்ம்ப நன்றி....நல்ல போஸ் கொடுத்து அழகா இருக்கீங்க:-)..இன்னும் நிறைய எதிர்பார்க்கிரோம்
தளிகா:-)
நன்றியுரை
இந்த புதிய பகுதியை வாழ்த்தி வரவேற்றுள்ள நல்ல உள்ளங்கள் அனைத்திற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். இது நீண்ட நாட்களாகவே கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டிருந்த பகுதி. "கடவுள் இன்றுதான் கண் திறந்திருக்கின்றார்".
நாம் முன்பே பேசிய பல பகுதிகளை விரைவில் கொண்டு வரவேண்டியுள்ளது. நான் பலமுறை இங்கே புலம்பியிருப்பதால், உங்கள் அனைவருக்கும் எனது நிலை நன்கு புரியும் என்று நினைக்கின்றேன். புதிய புதிய பகுதிகள் கொண்டுவருவதன் மூலம் எனது வேலைப்பளு நிறைய அதிகரிக்கின்றது. இதனால் நான் கொண்டு வர நினைக்கும் புதிய பகுதிகளை உடனடியாக கொண்டுவர முடியவில்லை. ஆங்கிலத்தளம் இன்னமும் கானல் நீராகவே இருக்கின்றது.
எனவே அடுத்த சில மாதங்களுக்கு மன்றம் போன்றவற்றில் எனது பங்களிப்பை குறைத்துக் கொண்டு மற்ற வேலைகளில் முழுக்கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். அப்போதுதான் அறுசுவையை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்ல முடியும். என்னிடம் இருந்து பதில் எதிர்பார்ப்பவர்கள் தயவுசெய்து கேள்விகளை மன்றத்தில் பதியாமல், எனக்கு மின்னஞ்சலாக அனுப்பிவிடவும். சற்று தாமதமானாலும் கண்டிப்பாக பதில் கொடுத்துவிடுவேன். மன்றத்து குறிப்புகள் அனைத்தையும் பார்வையிடுதல் எனக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. அதில் அதிக நேரம் செலவாகின்றது.
சகோதரிகள் கேட்டிருந்த கவிதைப் பகுதி நாளை எப்படியும் கொண்டு வந்துவிடுகின்றேன். மேலும் பெண்களுக்கான பல சிறப்பு பகுதிகளையும் அதில் கொண்டுவருகின்றேன். யாரும் சமைக்கலாம் பகுதி அறுசுவையின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாய் இருந்தது. அதேபோல் இந்த "நீங்களும் செய்யலாம்" பகுதியும் இருக்கும் என்று நம்புகின்றோம். இதிலும் தொடர்ச்சியாக குறிப்புகள் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்கின்றோம்.
அறுசுவையை எங்களால் இயன்ற அளவிற்கு சிறப்புடன் கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். வெற்றி, தோல்வி நீங்கள் தரும் ஆதரவில்.
வினோத்தின் வரிகள்
செல்வி.ஜென்பகவள்ளியாரே தஙகளின் திறன் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. எதையும் எளிதாக கற்றுக் கொள்ளும் திறன் உஙகளுக்கு எப்படி அமைந்தது. எனக்கு சிறு குறிப்பு தரவும். நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர். இந்த கலை பொருளை வடிவமைத்த உஙகள் கைகளால் இரண்டு அடி வாங்கிக் கொள்ளலாம்.
எப்படி இருக்கீங்க?
அண்ணன் பெரிய ஆர்டிஸ்ட் ஆக இருக்கையில் தங்கைக்கு அதில் சிறு திறன்கூடவா இல்லாது போய்விடும்? ;-)
வினோத், எப்படி இருக்கீங்க? ஆபிஸ் ஒர்க் எப்படி இருக்கு? ஹிந்துவுல அறுசுவை பத்தி எப்ப எழுதப் போறீங்க? :-) ஊர்ப்பக்கம் வரும்போது ஆபிஸ் பக்கமும் கொஞ்சம் எட்டிப் பாருங்க.
அழகான பிள்ளையார்
மிகவும் அழகான பிள்ளையார். :) செய்யுறதும் ஈசி போல இருக்கு. வாழ்த்துக்கள்:)
-நர்மதா :)
வினோத்திடம் இருந்து
ஹலொ சார், எப்படி இருக்கீங்க தஙகள் பதிலுக்கு மிக்க நன்றி. நான் ஹிந்துவில் ஒரு பொறியாளர், நான் EDITORIAL லில் இருந்திருந்தால் கண்டிப்பாக அறுசுவை.COM பற்றி எழுதியிருக்க முடியும். அதனால் என்ன, அதற்க்கான வழிமுறை எதுவும் இருந்தால் கண்டிப்பாக தெரிவிக்கிறேன். உஙகள் அறுசுவை.com புதுப்பொழிவுடன் காணப்படுகிறது. மிக்க மகிழ்ச்சி. உஙகளை நான் கண்டிப்பாக ஆபீஸில் வந்து பார்க்கிறேன், உஙகளிடம் நிறைய பேச வேண்டும்.
வினோத்தின் சந்தேகம்
உஙகளுக்கு ஒரு சில புகைப்படங்கள் அனுப்ப நான் என்ன செய்ய வேண்டும்
செண்பகமே செண்பகமே
அட நம்ம பாப்பிக்கு கைவேலைப்பாடெல்லாம் தெரியுமா? சொல்லவே இல்லையே!உங்கள் கைவேலைப்பாடு அருமையாக இருக்கிறது யாவரும் சுலபமாக செய்யும்படி எளிமையாக விளக்கியுள்ளீற்கள்,பாராட்டுக்கள்.அட்மின் அண்ணா புதிய பகுதிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்!
ஹர்ஷினி
ஹர்ஷினி உங்க பிள்ளையார் (கை வினைப் பொருட்கள் ) பார்த்தேன் ..ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ... அதுல பயன்படுத்தியுள்ள கலர்ஸ் என்ன வகைன்னு சொல்லுகளேன் ..
பிள்ளையார்
பாலம்மு, ஹர்ஷினி உங்க கேள்வியை பார்ப்பார்களான்னு தெரியவில்லை, அதனால் நான் பதிலளிக்கிறேன்.
இங்கு கடைகளில் பல வண்ணங்களில் விற்குமே ப்ளே-டோ(play dough) அதில்தான் செய்து இருக்கிறார்கள்.
வின்னி..
வின்னி.. ரொம்ப நன்றி ..அப்ப அவங்க பிள்ளையார் செய்து கலர் பண்ணலையா ???
உங்க கிட்டயே இதும் கேட்கிறேன் .. விதுபா என்பவர் அவர்கள் பிள்ளைகள் சப்பாத்தி மாவில் செய்ததாக சொளிர்கங்க ... அது கொஞ்ச நேரம் சென்றதும் காயுமா ???? இல்ல ஈரமவே இருக்குமா ??
பாலம்மு
பாலம்மு, ப்ளே டோ வெளியில் வைத்தால் காய்ந்து விடும். சப்பாத்தி மாவும் காய்ந்து விடும் என்றே நினைக்கிறேன்
அழகான வினாயகைர்
உங்கள் படைப்பு மிகவும் அருமை
with regards
miruna
with regards
miruna
விநாயகர் உருவம்
மிக மிக அழகாக இருக்கிறது செண்பகவல்லி. தெளிவாக விபரித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
அட்மின் அண்ணா
அட்மின் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்,கிட்ஸ் பிளே டொப் ல் நான் உருவங்கள் செய்தேன்,அது ஏன் காயவில்லை,அவற்றை தொட்டால் வடிவம் மாருது,அதனால் அவை காய என்ன செய்ய வேண்டும்,யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ரேணுகா...
ரேணுகா கிட்ஸ் ப்லே டவ் கொஞ்சம் நேரம் வெளியே வைத்தால் காய்ந்துவிடும் ஆனா அதுலே பாகங்கல் எல்லாம் ஒட்டாது வேனும்ன கம் போட்டு பாருங்க...ஆனா கொஞ்சம் நேரம் வெளியே வைச்சா காய்துடும்.
அன்புடன்
ஹாஷினி
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
அண்ணி(செண்பா)
எப்படி இருக்கீங்க? எப்போவோ செய்தாச்சு உங்க பிள்ளையார்,ஆனால் இவ்வளவு தாமதமாக பின்னூட்டம் கொடுக்கிறேன்,சாரி அண்ணி..நான் இந்தியாவில இருந்து வரும் போது எந்த சாமி சிலையும் எடுத்துவரல,எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கும்.உங்களோடத பார்த்ததும் செய்து வச்சுட்டேன்,நானே பிள்ளையார் பண்ணி நானே பூஜையும் பண்ணும் போது சந்தோசமா இருக்கு..அதுக்கு அப்புறமும் வேற வேற சைஸ்ல, வேற வேற கலர்ல செய்து அங்கங்க(டிவி மேல, டைனிங் டேபிள்ல இப்படி) வச்சுட்டேன்,வீட்டுக்கு வந்தவங்க எல்லோரும் கேட்குறாங்க எங்க வாங்குனீங்கனு?என் ஹஸ் பெருமையா சொல்றார் என் வொய்ஃப் பண்ணினதுனு,அப்போல்லாம் ரொம்ப சந்தோச படுவேன்,,எல்லா பாராட்டும் உங்களுக்குதான்,தேங்ஸ் அண்ணி..திரும்ப எப்போ அருசுவை வரபோறீங்க? கோயமுத்தூர் போய்ட்டு இன்னும் வரலயா?
விநாயகர்
விநாயகர் சிலை வெகு அழகு. நீஙகளும் தான். வாழ்த்துக்கள்.
செபா.
சந்தோ
சந்தோ நீங்க செஞ்ச பிள்ளையாரை பற்றி கேட்டவர்களின் முகத்தை நல்லா கவனிச்சீங்களா?
இப்படி கூட பிள்ளையார் இருப்பாரான்னு ஆச்சரியப்பட்டு கேட்டாங்களோ என்னவோ!!?? உங்க Hus-ம் இது தான் Chance-னு சேர்ந்து கலாய்ச்சிட்டார் போல :-))
Just kidding.Good Work santho.
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
பாப்பி
பாப்பி கலக்கீட்டீங்கப்பா! பிள்ளையார் பார்க்கவே அழகா இருக்காருப்பா. எவ்வளவு சிம்பிளான முறையில சொல்லிக் கொடுத்திருக்கீங்கப்பா. பார்த்தவுடனே செய்து பார்க்கணும்னு தோணுது. பிள்ளையார் மாதிரியே, சின்னப் பொண்ணு பாப்பியும் ரொம்ப அழகா, க்யூட்டாயிருக்கு. கெட் டு கெதர் ஃபோட்டோல மெஜஸ்டிக்கா அட்மினிஸ்ட்ரேட்டரம்மானு சொல்லுறதுக்கு பொருத்தமாயிருந்துச்சு. வெஜிடபிள்- ஃப்ரூட் கார்விங் எப்ப செய்து காட்டப் போறீங்க. தாமரை, அண்ணினு எழுதியிருக்கிறதை பார்த்துட்டு உங்களின் அரட்டை பாகம் என்று நிணைத்து பதில் பதிவு போட க்ளிக் பண்ணினேன். அதனால் தான் இந்த அழகான பிள்ளையாரையும் & உங்களையும் பார்க்க முடிந்தது. ரொம்ப.........ரொம்ப அழகா....யிருக்குப்பா.
அன்புடன்:-)......
உத்தமி:-)
ரேணுகா, ப்ளே டோ
ஹாய் ரேணுகா,
நான் வைத்திருக்கும் ப்ளே டோவும் காய்வதில்லை. ப்ரான்ட்டுக்கு ப்ரான்ட் வித்தியாசம் என்று நினைக்கிறேன். நீங்கள் மொடலிங் பேஸ்ட் / மொடலிங் க்ளேயில் செய்து பார்த்தீர்களா? அவை காயும்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
Romba Nalla
Romba Nalla Irukku.
Regards,
Selvi
Vinayagar
supper.............. u r very creative person .....
Regards
Tamilarasi
Easy and simple instructions.
Easy and simple instructions. i did it. It came out very nice. Thanks for sharing.
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta
valuthukal
this is simply superb. i like it very much i try my level best u r my inspiration.
Nadpathellam nalluthuke
கணபதியை கொள்ளை அடித்தல்
பிரபு என்ன அழகா இருக்காரு.இதை செய்ய கற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
இதை அப்படியே திருடி நான் என்னோட கணேஷ் பக்கத்துல
போட்டுக்க போறேன்
அப்படியே விநாயகர் வடிவில் இனிப்பு ,பலகாரம் செய்றது போட்டிங்கன்னா செஞ்சி சாப்டுட்டு பிள்ளையர வெளியில விடாம
அப்படியே உள்ளே பிடிச்சு வெச்சிக்கலாம்.
thanks senbaga medam
அன்பாயிருப்போம் அனபையே விதைப்போம்
- அன்புடன்R.P.OM