ஆர்கண்டி ரோஸ் செய்வது எப்படி?

தேதி: October 9, 2007

4
Average: 3.2 (9 votes)

கண்ணைக் கவரும் ஆர்கண்டி ரோஸ் செய்வது எப்படி என்பதற்கான செய்முறை விளக்கம் தெளிவானப் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஆர்கண்டி துணி - அரை மீட்டர்
நூல் கண்டு - ஒன்று
அலுமினிய கம்பி - 15 செ.மீ
மகரந்தம் - நான்கு
ரோஜா இலை - ஒன்று
கம் டேப் - 15 செ.மீ

 

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும். தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் ஆர்கண்டி துணியை வாங்கிக் கொள்ளலாம்.
ஆர்கண்டி துணியை சமமான 8 சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ளது ஒன்றரை அங்குல சதுரத் துண்டுகள். உங்களின் தேவைக்கேற்ப நீங்கள் கட் செய்துகொள்ளவும். சதுரத்துண்டுகளாக கட் செய்யவேண்டியது முக்கியம். ஒரு ரோஸ் செய்வதற்கு 8 இதழ்கள் போதுமானது.
ஒரு சதுரத் துண்டை எடுத்துக் கொண்டு படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு எதிர் எதிரான ஓரங்களை மடக்கவும்.
அடுத்த இரண்டு ஓரங்களையும் படத்தில் காட்டியபடி இரண்டாக மடிக்கவும்.
மடித்த ஓரத்தை கட்டை விரலை வைத்து நடுவில் அழுத்திக் கொண்டு மற்றொரு ஓரத்தை விரல்களால் முறுக்கி விடவும். கட்டை விரலை வைத்து அழுத்தினால் தான் நடுவில் குழியாக இதழ்ப் போல் இருக்கும்.
முறுக்கிய பகுதியின் எதிர்புறத்தில் உள்ள இரண்டு ஓரத்தையும், ஒரு பெரிய ஊசியை துணியின் பின்புறத்தில் வைத்து ஒரு முறை சுற்றவும். துணி இதழ் போல் மடங்கிக் கொள்ளும்.
இப்போது இதழ் தயார். இதேபோல் சதுரத்துண்டுகள் அனைத்தையும் இதழ்களாக மாற்றிக் கொள்ளவும். 8 இதழ்கள் செய்துக் கொள்ளவும்.
பிறகு அலுமினிய கம்பியின் நடுவில் மகரந்தத்தை வைத்து கம்பியை இரண்டாக மடக்கவும். முதலில் ஒரு இதழை எடுத்துக் கொண்டு இதழின் முருக்கிய பகுதியில் கம்பியுடன் இருக்கும் மகரந்தத்தை வைக்கவும்.
பிறகு நூலினால் இதழை இரண்டு முறை சுற்றி பூ தொடுப்பது போல் தொடுக்கவும்.
இரண்டாவது இதழை எடுத்து முதல் இதழின் ஓரம் இரண்டாவது இதழின் நடுவில் இருப்பது போல் வைத்து மீண்டும் பூ தொடுப்பது போல் தொடுத்துக் கொள்ளவும்.
இதே போல் 8 இதழ்களையும் வைத்து ரோஸ் தயார் செய்துக் கொள்ளவும்.
பிறகு ரோஜா இலையின் துளையின் வழியாக கம்பியை விட்டு ரோஜாவுடன் இணைக்கவும். ஒரு பூவிற்கு ஒரு இலைக்கொத்து போதுமானது. இங்கே விளக்குவதற்காக இரண்டு இலை கொத்துகள் காண்பிக்கப்பட்டுள்ளன.
இப்போது கம்பி தெரியாமல் இருக்க ரோஜா இலையின் அடியில் இருந்து கம் டேப்பை கம்பியில் வைத்து இழுத்து அழுத்தி சுற்றவும். டேப்பினால் சுற்றி, கம்பி தெரியாதவாறு மறைக்கவும்.
இப்போது அழகிய ஆர்கண்டி ரோஸ் தயார்.
இதனை விரும்பிய கலரில் ஆர்கண்டி துணி வாங்கி இதே போல் செய்துக் கொள்ளவும். பொக்கே, பாட், வேஸ் ஆகியவற்றில் வைத்து அலங்கரிக்கலாம். இது செய்வதற்கு மிகவும் எளிமையானது.
இந்த அழகிய ஆர்கண்டி ரோஸ் செய்முறையை விளக்கியவர் திருமதி. சரோஜினி பன்னீர்செல்வம் அவர்கள். நாகை நகரில் 20 வருடங்களுக்கு மேலாக கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகின்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ளார். இதனைத் தவிர தையல் வகுப்புகளும் நடத்தி வருகின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பார்கிறதுக்கு ஒரிஜினல் ரோஸ் மாதிரியே இருக்கு. ரொம்ப சூப்பரா இருக்கு ஆண்ட்டி, தேங்க்ஸ். படங்களும் ரொம்ப தெளிவா இருக்கு. அட்மின் அண்ணா, அலெக்சா ரேங்க்கிங்கில் அறுசுவை தொடர்ந்து முன்னேறிட்டு வருது. பார்த்தீங்களா? கங்கிராட்ஸ்!

இது இவ்ளோ ஈசியா?
கண்ணுல தண்ணியே வந்துவிட்டது.
சோம்பேறி,தூங்கும் நேரத்தை இந்த மாதிரி நல்ல விஷயத்திற்கு செலவிடலாம்.
ஊருக்கு போயிட்டு வந்து ஒரு(!!!ஒண்ணு மட்டும் தானா?) கலக்கு கலக்கி விட வேண்டியதுதான்.
எனக்கும் கை வேலைப்பாடு செய்ய ஆசை வந்து விட்டது.
தேங்க்ஸ் டூ அண்ணா அன்ட் அவர் டீம் !!

அட்மின் அண்ணா ,
என் சார்புல இந்த அழகான ரோஸ் செஞ்ச ஆன்ட்டிக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க :)
செய்யனும் ஆசையா இருக்கு.ஆனா இங்க இதெல்லாம் கிடைக்குமானு தெரில..முயற்சி செஞ்சு பாக்றேன்

அனிதா

hi

இந்த பகுதி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த மாதிரி கைவினை வேலைப்பாடுகளை நேரிலேயே பலர் புரியும்படி சொல்லித்தர மாட்டார்கள். நானும் இந்த க்ரோஷா பின்னறது, கூடை பின்னறது எப்படின்னு சிலர்கிட்ட கத்துக்க முயற்சி பண்ணி அவங்க சொல்லித்தரது புரியாம அந்த மாதிரி முயற்சியே செய்யறதில்லை. ஆனால் இப்படி புகைப்படங்கள் மூலமா இத்தனை தெளிவாக புரிய வைத்தது அதிசயமா இருக்கு. இன்னும் எத்தனை ஆச்சரியம் காத்துக்கிட்டு இருக்குன்னு தெரியல.

இத்தனை எளிதாக அனைவருக்கும் புரியும் வண்ணம் இதனை செய்து காட்டிய சரோஜினி அம்மா அவர்களுக்கும், அதனை அழகாக தொகுத்து வழங்கிய அறுசுவை டீமுக்கும் நன்றி. தங்கள் பணி மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.

தேவா சொன்னது போல இந்த பகுதி மிக சிற்ப்பாக இருக்கிறது. எங்களுக்காக செய்து காட்டிய சரோஜினி ஆன்ட்டி அவர்களுக்கு கோடான் கோடி நன்றி.

ஜானகி

இந்த பக்கதை ப்ரின்ட் செய்யுமாரு வடிவமைதால் நன்றாக இருக்குமே admin
saranyamohan

saranyamohan

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் எங்களை இன்னும் சிறப்பாக பணிபுரிய ஊக்கமளிக்கும்.

ப்ரிண்ட் செய்யும் வசதி கொடுப்பது குறித்து இன்னமும் ஒரு தெளிவான முடிவுக்கு என்னால் வர இயலவில்லை. அது பார்வையாளர்களுக்கு ஒருவகையில் நல்ல பயனளிக்கும் என்பது உண்மையே. ஆனால், எங்களுக்கு அதனால் சில பாதிப்புகள் உள்ளன.

ஒரு இணையத்தளத்தின் வெற்றியை பெரிதும் நிர்ணயிப்பது, அதற்கு வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கைதான். எனவேதான் எல்லாத் தளங்களும் வருகையாளர்களை மீண்டும் மீண்டும் தங்கள் தளத்திற்கு கொண்டு வருவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்துவருகின்றன.

அறுசுவை வளர்ந்து வரும் தளம். வருகையாளர்களின் எண்ணிக்கை இதற்கு முக்கியம். இப்படிப்பட்ட சில வசதிகள் கொடுப்பதன் மூலம், இதில் ஒரு சிறிய இழப்பு உண்டாகும். யாரும் சமைக்கலாம் பகுதிக்கும் இதே போன்ற கோரிக்கைகள் நிறைய வந்தன. உங்கள் தேவை புரிகின்றது. எங்கள் நிலையையும் நீங்கள் அறிந்துகொள்ளவே இந்த விளக்கம்.

"என்னால் இணையத்திற்கு எப்போதும் வரமுடியாது. அப்படியே டவுன்லோடு செய்துகொள்ள வசதி இருக்கின்றதா" என்ற கேள்விகளை படிக்கையில் எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியாது. அப்படியே எல்லாவற்றையும் கொடுப்பதாக இருந்தால், எதற்கு இணையத்தளம். ஒரு ஈ-புக் மாதிரி தயார் செய்து நான் அதனை எல்லோருக்கும் மெயிலில் அனுப்பிக் கொண்டு இருக்கலாமே. டி.வி சீரியலை என்னால் தினமும் பார்க்க முடியாது. மொத்த சீரியலையும் எனக்கு சிடியில் ரெக்கார்டு செய்து அனுப்பிவிடுங்கள் என்று எந்த தொடரையாவது கேட்க முடியுமா?

இப்போதும் நீங்கள் ப்ரிண்ட் அவுட் எடுக்கலாம். பக்கத்தை அப்படியே எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் எளிதாக குறிப்பை மட்டும் படங்களுடன் பிரிண்ட் அவுட் எடுக்கும் வசதி கொடுப்பதற்கு சற்று காலம் ஆகும். அறுசுவை பொருளாதார ரீதியில் வெற்றி காணவேண்டும். அதன்பின்பு அந்த வசதியை செய்து தருகின்றேன். அதுவரையில் என்னை மன்னித்துக் கொண்டே இருங்கள் :-)

பதிலுக்கு நன்றி அட்மின்
saranyamohan

saranyamohan

அழகாக, வெகு அருமையாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்