ராஜ்மா கிரேவி

தேதி: October 10, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

ராஜ்மா - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பால் - 1 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பட்டை,கிராம்பு - 1/2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க


 

ராஜ்மாவை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த ராஜ்மாவை குக்கரில் 1 விசில் விட்டு வேக வைக்கவும்.
ஒரு கடாயில் நறுக்கின வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும். வதங்கிய பின் தனியே எடுத்து சூடு ஆரிய பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணை சூடாக்கி பட்டை , கிராம்பு,பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு போடவும்.
பிறகு அடுப்பை சிம்மில் வைத்து இஞ்சி பூண்டு விழுது மற்றும் அனைத்து தூளையும் போடவும்.
பின் வேக வைத்த ராஜ்மா மற்றும் அரைத்த விழுதை போடவும். நன்றாக கிளறவும்.
பால் சேர்க்கவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து சமைக்கவும்.
கொத்தமல்லி இலையை தூவி அலங்கரிக்கவும்.சுவையான ராஜ்மா கிரேவி தயார்.சப்பாத்தி மற்றும் பூரிக்கான சத்தான சைட் டிஷ்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் அனிதா எப்படி இருக்கிங்க? வியாழன் அன்ரு உங்கள் ராஜ்மாகிரேவி செய்தேன் நன்றாக இருந்தது பால் சேர்த்தது வித்தியாசமாக இருந்தது
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்