தேதி: October 12, 2007
மண் சாடியை அலங்கரித்து அழகிய பூச்சாடியாக மாற்றுவது எப்படி என்பதை திருமதி. நர்மதா அவர்கள் விளக்குகின்றார்.
மண் சாடி & தட்டு - 1 (4" or 6 ") (Clay pot and lid )
வெள்ளை கிளே (clay or playing dough)
ஹாட் க்ளூ (hot glue - glue gun)
பூக்கள்
கறுப்பு மெட்டாலிக் பெயின்ட் (Black metalic paint)
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் தயாராய் எடுத்து கொள்ளவும்.

கிளேயினை நன்கு பிசைந்து மிருதுவாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

அதில் ஒரு உருண்டையை எடுத்து மெல்லிய கோல் போல உருட்டவும்.

மேலும் ஒரு உருண்டையை எடுத்து தட்டையாக்கி கோலின் முனையை சுற்றி மூடவும்.

ஏனைய உருண்டைகளை பெரிதும் சிறிதுமான தட்டையான இதழ்களாக செய்யவும்.

பின்னர் அவ்விதழ்களை கோலில் சுற்றி சுற்றி வைத்து ரோஜாப்பூப் போல ஒழுங்கு படுத்தவும். இவ்வாறு 3 பூக்கள் செய்யவும்.

மேலும் சிறிது கிளே எடுத்து பிசைந்து சப்பாத்திக்கு தட்டுவது போல தட்டையாக்கவும்.

பின்னர் இலை வடிவ அச்சினால் இலைகளை வெட்டவும். இலை அச்சு இல்லாவிட்டால் இலையின் உருவத்தை வரைந்து கூரான கத்தியால் வெட்டலாம்.

ஒரு கூரான பென்சிலால் சிறிது அழுத்தம் கொடுத்து இலையின் நரம்புகளை வரையவும்.

மேலும் சிறிது கிளே எடுத்து இரண்டாக பிரித்து மெல்லிய நீண்ட பாம்பு போல உருட்டவும். (பூக்கொடி - vines)

எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் போட்டு காய விடவும்.

பின்னர் மண் சாடியின் மேற்பக்கத்தில் vinesஐ ஹாட் க்ளூவை கொண்டு ஒட்டவும். gluegun இல்லாவிட்டால் uhu, super glue என்பவற்றாலும் ஒட்டலாம்.

அடுத்து இந்த vinesஇன் மேல் பூக்களையும் இலைகளையும் வைத்து ஒட்டவும்.

பின்னர் சாடியை அதன் அடித்தட்டுடன் க்ளூவால் ஒட்டி கறுப்பு மெட்டாலிக் பெயின்டால் வர்ணம் தீட்டி நன்கு காய விடவும்.

வர்ணம் நன்கு காய்ந்ததும் பிடித்த பூக்களை பிடித்தமான முறையில் வைத்து அலங்கரிக்கவும்.

Comments
ஆஅஹாஆஆ
ஆஅஹாஆஆஆஆ..நர்மதா.....அருமையா இருக்கு....எல்லா குறிப்பும் போலவே இதுவும் பளிச் பளிச்னு அழகா ப்ரெசென்ட் பன்னி இருக்கீங்க....இன்னும் இன்னும் இன்னும் நிறைய எங்களுக்கு அதை காபி அடிக்க உதவவும்:-)
to thalika & admin....
நன்றி தளிகா...உங்கட பென்சில் ஸ்கெட்சிங்கிற்குதான் நான் வெயிட்டிங்.....:)
அட்மின், சமையல் குறிப்பு போல நாங்களே கைவினைபொருட்கள் குறிப்பையும் சேர்த்துவிட்டு உங்களுக்கு படங்கள் அனுப்ப முடியாதா?
-நர்மதா :)
கைவினைப் பொருட்கள்
சகோதரி அவர்களுக்கு,
கைவினைப் பொருட்களுக்கு குறிப்புகள் மட்டும் கொடுக்கிறது நன்றாக இருக்காது. யாருக்கும் புரியாது. அதைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்குதான் கொஞ்சம் புரியும். படங்கள்தான் எல்லாருக்குமே என்ன சொல்றோம், என்ன செய்யறோம்ங்கிறதை விளக்கும்.
அடுத்து இந்த கைவினைப்பொருட்கள் பகுதி சேர்க்கிற குறிப்புகள் எல்லாம் HTMLize பண்ணி சேர்க்க வேண்டியிருக்கு. அதை ஓரளவிற்கு மேலே எளிதாக்க முடியல. படங்கள் என்று வர்றப்ப அதை உறுப்பினர்களை சேர்க்கவிடுதல் கஷ்டம். அது முழுக்க முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
இந்த காரணங்களால கைவினைப்பொருட்கள் பகுதியில் இடம்பெறும் அனைத்தையும் நாங்கள்தான் வெளியிடவேண்டியிருக்கு. நீங்கள் படத்தையும் குறிப்பையும் சேர்த்து அனுப்பிவிடுங்கள்.
(படங்கள் எடுக்கும்போது, vertical positionல் எந்த படமும் எடுக்காதீர்கள். நாம் இங்கே horizontal position ல் உள்ள படங்களை மட்டும்தான் சரியாக கட் செய்து வெளியிட முடியும். அந்த கடைசி படம், பூவுடன் கூடிய பூச்சாடி அப்படி வெர்ட்டிக்கலாக எடுக்கப்பட்டிருந்தது. அதனால்தான் மேலே உள்ள பூக்கள் கட் ஆகிவிட்டன. )
ஆளாளுக்கு கலக்கறாங்கப்பா
நர்மதா, உங்கள் கை வேலை சிம்பிள் & எலிகண்ட். இதெல்லாம் பாக்கும்போது பொறாமையா இருக்கு. நேரமும் இல்ல. பொறுமையும் இல்ல.
பாபுத்தம்பி, நாளுக்கு நாள் அறுசுவை மெருகேறி வருகிறது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு ஒவ்வொன்றிலும் தெரிகிறது. அறுசுவை மிளிர்கிறது.
அன்புடன்
ஜெயந்தி
ரொம்ப
ரொம்ப நல்லா இருக்கு நானும் try பன்ரேன் saranyamohan
saranyamohan
அழகிய பூக்கள்...
ஹாய் நர்மதா,
ரொம்ப அருமையா இருக்கு. நீங்க இவ்வளவு அருமையான ஃபினிஷிங்க்-ல ஜாடி செஞ்சுட்டு என் ஜாடிய போய் சூப்பர் சொல்லியிருக்கீங்க. உண்மையிலேயே 'நீங்க ரொம்ப நல்லவங்களா' இருக்கீங்க. வாழ்த்துக்கள், நர்மதா. இன்னும் இதுபோன்ற எளிமையான செய்முறைக் குறிப்புகள் நிறைய கொடுங்க. நன்றி.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
anbudanஹாய்
anbudanஹாய் நர்மதா,
பூ சாடி மிக அருமை.
உங்கள் கைவன்னம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
வித்யாவாசுதேவன்.
anbudan
நன்றி
வாழ்த்திய ஜெயந்தி மேடம், செல்வி மேடம்(?! - I've just seen ur photo), சரண்யா, வித்யா அனைவருக்கும் மிக்க நன்றி.
-நர்மதா :)
சும்மா நச்சுன்னு இருக்கு பூ ஜாடி!!!
ரொம்ப அழகா பண்ணியிருக்கீங்க நர்மதா...இவ்வளவு அழகா செய்ய எவ்வளவு பொறுமை வேணும்??!!...உங்ககிட்டே கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய்ய்ய இருக்குது:-)
நன்றி விதுபா
நன்றி விதுபா. இதைப்போல நீங்களும் செய்து வீட்டை வையுங்க இன்னும் அழகா இருக்கும் :)
-நர்மதா :)
HAI
HI NARAMDA HOW R U . POT PAINTING IS SUPER . I LIKE MUCH
ITS VERY SIMPLY AND NICE .
dont angry
ஹலோ செல்லம்
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta