living in london

hello all,
mam, this is kavya in london. joined newly in arusuvai.
kavya

வணக்கம் காவியா,
உங்கள் வரவு நல்வரவாகுக.

***********************************

மன்ற மக்களுக்கு,
எனது அன்பான முதற்கண் வணக்கங்கள்.

நானும் மன்றதில் என் வரவை எங்கே சொல்வது என்றும், அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எப்படி வணக்கங்களை அள்ளி தெளிப்பது என்று தெரியாமல், அறியாமல் இங்கே பதிகிறேன்.
தவறுக்கு அட்மீன் அடியேனை மன்னிக்கவும்.

பணிவுடன்
ஓவியா.
வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்....நீரூற்றினேன்

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்....நீரூற்றினேன்

ஓவியா அறுசுவை மன்றத்திற்கு உங்களை மன்றத்து உறுப்பினர்கள் சார்பில் வருக, வருக என வரவேற்கிறேன்.
நீங்க இப்படி அழகு தமிழில் எழுதினால் அட்மின் உங்களை ஒன்றும் சொல்ல மாட்டார். இங்கிலீபீஸில் எழுதினால்தான் அவருக்கு பிடிக்காது.

சகோதரி வானதி சொன்னது சரிதான். (அதுசரி, இது சமையல் தளம்ங்கிறதுனால அட்'மின்'ஐ அட்'மீன்' ஆக்குறது நல்லா இல்ல :-))

அப்புறம், எங்க கிராமத்துல 10, 15 ஏக்கர்ல பயிரெல்லாம் வாடி போய் இருக்காம். எப்ப எங்க கிராமத்து பக்கம் விசிட்? :-)

பேரெல்லாம் அழகாத்தான் இருக்கு - காவியா, ஓவியா.
வாங்க கண்ணுங்களா. சும்மா கலாய்ப்போம். அவ்வளவுதான். தமிழைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கலாம். ஓவியா வள்ளலார் பரம்பரையோ?
அட்மின் அவர்களே - கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். 'அட்மீன்' வெச்சு ஏதாவது புது ரெசிபி செஞ்சுடப் போறாங்க.
அன்புடன்
ஜெயந்தி

மிக்க நன்றி வின்னி.
உங்களின் வரவேற்ப்பில் என் மனம், கதையில் வரும் கற்க்களை ஜாடியில் போட்டு நீர் அருந்திய காக்கைப் போல் குளிர்ந்தது.....

ஒரு விசயம், எனக்கு தமிழ் மொழி அவ்வளவாக தெரியாது, 7 வயதில் கொஞ்சம் கற்றேன். தமிழ் நாட்டு வாசமே கிடையாது. நான் வளர்ந்தது, கல்வி கற்றது அனைத்தும் மலாய் மொழியில், முதல் பல்கலைகலகம் ஆங்கிலத்தில், இங்கும் பல்கலைகலகம் ஆங்கிலத்தில்....சோ எனக்கு தமிழ் தெரியாதுங்கோ.

ஓவியா.
வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்....நீரூற்றினேன்

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்....நீரூற்றினேன்

மன்னிக்கவும் அட்மின் சார்/மேம்...
மீய கொஞ்சம் இழுத்துட்டேன்.

வாடிய பயிறை கண்ணால் கண்டப்பின், பத்மஸ்ரீ பீடி உஷாபோல் ஓடிபோய் அருகில் இருக்கும் பம்பு செட்டில் நீர் அடித்து ஊற்றுவேன் என்றுதான் இதன் அர்த்தம். சொல்லுங்கோ, கிராமத்தில் தண்ணி இருந்தா வந்து பாய்ச்சறேன்...நானே நீரை லண்டனில் இருந்து எடுத்து வர இயலாது...

இந்தியாவில் வாடிய பயிரை கண்டு ஓடி ஒளியும்
ஓவியா.

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்....நீரூற்றினேன்

வணக்கம் ஜயந்தி,

வரவேற்ப்பிற்க்கு நன்றிகள்.

ஆமாம் எனக்கு தமிழை வளர்க்க ரொம்பப்பிடிக்கும். நான் பேசிய மொழிகளிலே தமிழ் தான் எனக்கு பிடித்த மொழி.

(தண்ணீர் பஞ்சத்தில் பிறந்த ஹி ஹி)
அனைத்து தமிழ் குழந்தைகளும் வள்ளலார் பரம்பரையோ!!!

ஓவியா.
வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்....நீரூற்றினேன்

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்....நீரூற்றினேன்

ஓவியா, 7 வயதில் கொஞ்ஞ்ஞ்சம் கற்ற தமிழே இந்த விளையாட்டு விளையாடினா 7 வருடம் தமிழ் படித்திருந்தால் தமிழே உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்கும்.
வாழ்த்துக்கள்!

வாடிய பயிர், தோட்டத்தில், பால்கனியில் இருந்தால் மட்டும் தான் தண்ணீர் ஊற்றுவீர்களா???

வந்தனம் விதுபா,

ஆமாம் தோழி, முறையாக தமிழை கற்றிருந்தால், இன்னும் நிரையவே தமிழ்ச் சுவையை அறிந்திருக்கலாம்.

குழல் புட்டில் திட்டு திட்டாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எட்டிப்பார்க்கும் தேங்காய்பூ போல் தமிழ் சுவையை கொஞ்சமாய் காட்டாமல், சட்டினியில் உள்ள ஜமீந்தார் தேங்காய்பூ போல் ஆதிக்கம் செய்திருக்கலாம்.

விது,
ஒரு ரகசியம் இந்த வாடிய பயிரை ஏன் நீர்ப்பாய்ச்சி வளர்க்கிறோம் தெரியுமா?? பின்னொரு நாளில் அவை அனைத்தும் நம் வயிறு வாடாமல் காப்பாற்றும்...எல்லாம் கொஞ்சம் சுயநலம்தான்.

நாணலுக்கு யாரும் நீர் பாய்ச்சுவதில்லையே??? (பசு வளர்ப்பவர்களை தவிர்த்து) ஆனால் தக்காளி செடிக்கும், நெல்லுக்கும், அவரைக்கும், கோதுமைக்கும், வள்ளாரைக்கும் என்று வரிந்து கட்டிகொண்டு நீரை அள்ளி அள்ளி ஊற்றுகிறோமே....ஏன் ஏன் ஏன்??
தக்காளி ரசம், அரிசிப்புட்டு, அவரக்குழம்பு, கோதுமை ரொட்டி, வள்ளாரை துவயல் என அனைத்தும் நமக்கு வேண்டும் என்பதற்க்காக.....

ஆனால் சுவாமி சொன்னது எதற்க்காக என்றால், இப்படி நீர் இல்லாமல் பூமி காய்ந்தால் இங்கு வாழும் எம் மனிதர்களும் மற்ற உரினங்களும் துன்பத்தில் வாடுமே என்று தான் தன் கண்ணீர் ஃபீலீங்ஸை (உணர்வை) காட்டினார். 'அய்யா, ராசா, என் கண்ணு' வாடிட்டியா என்று ஒரு பயிருக்கு மட்டும் சொல்லவில்லை மாறாக அனைத்து ஜீவராசிக்கும சேர்த்தே ஒரு வரியில் சொல்லியுல்லார் நம் மகான்.

ஓவியா.
வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்......நீரூற்றினேன்..ஏன்?
(பின்னாலில் அவை தன் பிறந்தப்பயனை நமக்குத்தரும் என்ற சுயநலத்தோடு)

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்....நீரூற்றினேன்

ஹாய் ஓவியா,

எப்படி இருக்கீங்க? உங்க பேரும் அழகு, தமிழும் அழகு:-) தமிழை தமிழாய் படிக்கும் பாக்கியம் கிடைத்தது போல இருக்கு:-)வாங்க, அறுசுவைக்கு, புது பொலிவை தாங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்