கணவருக்காக....

எல்லோருக்கும் வணக்கம்

என் கணவருக்கு வயிற்றில் நிறைய பிரச்சனை.இந்தியாவில் எல்லா பெரிய டாக்டர்ஸிடம் ட்ரீட்மெண்ட் எடுத்தோம்.எல்லா டெஸ்ட் ரிசல்ட்ஸ்யும் நார்மல் தான்.ஆனால் இன்னமும் என் கணவர் கூறுவது "வயிறு எரிகிறது".ஹோமியோபதி மாத்திரை எடுத்தப்போ ஓரளவு நிவாரனம் கிடைத்தது."irritable bowel syndrome "ஆக இருக்கலாம்னு சொன்னாங்க.அவர்கள் food habits மாற்ற சொன்னார்கள்.இவர் கல்யாணத்திற்கு முன் தனியாக இருந்த போது தினமும் காலையில் breakfast skip செய்து விடுவாராம்.அதனால் தான் இப்படி பிரச்சனை.நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் ,fibre foods சாப்பிட வேண்டும் , diary products avoid செய்ய வேண்டும் மற்றும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எதாவது கொஞ்சமாக சாப்பிட வேண்டும் என்று நெட்டில் படித்தேன்.இங்கு யாருக்காவது இது போல் பிரச்சனை இருந்தால் இல்லை என்ன diet follow செய்ய வேண்டும் என்று தெரிந்தால் சொல்லுங்கள் ...Please.....

உங்கள் பதிலுக்காக....
அனிதா

திருமணத்திற்கு முன் என் கணவரும் காலையில் சாப்பிட மாட்டார்.அதனால் அவருக்கும் இதே பிரச்சனை இருந்தது. பிறகு கொஞ்சம் ,கொஞ்சமாக காலையில் உணவு கொடுத்தேன். இப்பொழுது நன்றாக பசிக்கிறது.நிறைய காய்கறிகள்,மற்றும் பழங்கள் சாப்பிடுகிறார்.பாலில் டீ போடுவதில்லை, ப்ளாக் டீ தான் குடிப்பார்(நானும் தான்). உணவில் , காரத்தை சிறிது குறைத்து கொள்ளுங்கள்.சரியான நேரத்தில் சாப்பாடு கொடுத்து விடுவேன்.. அதனால் இப்பொழுது பரவாயில்லை..அதையும் கலர்,கலரா இருந்தாதான் சாப்பிறாங்க.என்ன பண்றது எல்லாம் நேரம்.உடனே சரியாகாது,கொஞ்ச நாள் ஆகும். கவலை படாதீர்கள்... முக்கியமா நமக்கு அந்த வியாதி இருக்கா,இந்த வியாதி இருக்கான்னு ரொம்ப யோசிப்பாங்க,அவங்கள அத பத்தி யோசிக்க விடாம பண்ணிட்டாலே எல்லாம் சரியாயிடும்.நான் இத தான் செய்தேன்..ஒரு வழி பண்ணிடுங்க.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

ஹாய் அனிதா,
நலமா? எனக்கும் இதே பிரச்னைதான்.ஹோமியோ மெடிசன்
தான் எடுத்துக் கொண்டுள்ளேன். இதற்கு நிரந்தர தீர்வு என்று கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிட வேண்டும். மசாலாவை தவிர்க்க பலன் கிடைக்கும்(பட்டை, கிராம்பு முதலியன). தனியான பால் சாப்பட மாட்டேன். ஒத்துக்கொள்ளாது.பாலில் செய்த ஸ்வீட் குறைப்படு நலம். கீரை கூட அதிகம் சாப்பிடக்கூடாது. நானும் என்னுடைய சின்ன வயதில் காலை ஆகாரம் சாப்பிட மாட்டேன். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக பிறகு சொல்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் அம்பிகா
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.நீங்க சொல்றது கரெக்ட் தான்.வயிறு எரியுதா எரியுதா னு யோசிச்சுகிட்டே இருக்காங்க ....அத முதல நிறுத்தனும்.நீங்க சொன்னத கொஞ்ச நாள் செய்து பார்க்கிறேன்.
ஹாய் செல்வி மேடம்,
மிக்க நன்றி.இந்த பிரச்சனை நிறைய பேருக்கு இருக்கு போல...கீரை ஏன் சாப்பிட கூடாது? கீரை fibre food தானே...நான் டெய்லி கீரை செய்ரேன்.அதான் கேட்டேன்.நீங்க சொன்னது போல மசாலா இல்லாமா சமைக்கிறேன்.மிக்க நன்றி

உங்க ரெண்டு பேர் பதிவ பார்த்ததுமே எனக்கு தெம்பு வந்துருக்கு...தாங்க்ஸ்...

அனிதா

hi

வணக்கம் அனிதா எனக்கும் இதே பிரச்சனைதான் இதற்காக நான் ஒரு வாரம்hospital தங்கி இருந்தேன் endoscopy, colonocopy,bonemarrow,catsscan எல்லா விதமான test பார்த்தோம் அவங்களால் எதுவும் கண்டு பிடிக்கவில்லை 2 வருடம் கழித்து இதுH phylorise (i,m sorry exact spelling) என்று கண்டு பிடித்தார்கள்Now துவரம் பருப்பு ,whole milk lime items சாப்பிடமாட்டேன் இதற்கு நல்ல ரெமடி cranberry ஜுஸ், டைம்முக்கு சாப்பிடவும் மனதில் எந்த stress
இல்லாமல் இருந்தால் படி படியாக குறையும் good luck

ஹாய் அனிதா,
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. என் கணவருக்கும் இதே போல் காலை சாப்பிடாததால் Gastritis இருந்தது. உடனடியாக சாப்பாட்டின் அளவை அதிகரிக்காமல் மெல்ல மெல்ல சாப்பிடும் அளவை அதிகப்படுத்துங்கள். காரத்தை குறைப்பதோடு டீ, காபியை அறவே தவிருங்கள். தயிரை விட மோர் நல்லது. வாழைத்தண்டு இதற்கு மிகவும் நல்ல மருந்து. அது கிடைக்காவிட்டாலும் முள்ளங்கி, செள செள போன்ற நீர் காய்கறிகளை சேர்ப்பது மிகவும் நல்லது. மசாலாக்களைத் தவிர்த்து அதிகம் கூட்டு, பொரியல் செய்யுங்கள். பாசிப்பயிறு மிகவும் நல்லது. தேங்காய்ப்பாலும் புண்ணை ஆற்றும். பாசிப்பயிறு பாயாசம் செய்யும்போது தேங்காய்ப் பால் உபயோகித்து செய்யுங்கள். வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். காபி, டீக்கு பதில் பழங்கள் அதிகம் சேர்த்த மில்க் ஷேக் எடுத்துக் கொள்ளலாம். பால் கொஞ்சம் சேர்த்தால் போதும். தினமும் மோர் சாதம் சாப்பிடலாம். நேரம் கிடைக்கும்போது இன்னும் எழுதுகிறேன்.

டியர் தேவா மற்றும் சுவேதா
உங்க பதிலுக்கு மிக்க நன்றி.cranberry ஜூஸ் இதுவரை அவர் குடித்ததில்லை.சேர்த்துப் பார்க்கிறேன்.
தேவா, நீங்க சொன்னது போல் பால் (டீ,காபி) சேர்ப்பதே இல்லை.தினமும் ஆப்பிள் ஜூஸ்,வாழைப்பழம் சாப்பிடுகிறார்.இன்னும் என்ன என்ன காய்கறிகளை சேர்க்கலாம்?தக்காளி சேர்க்கலாமா?பருப்பு வகைகளை சேர்க்கலாமா?பாசிப்யிறும் மோரும் இன்றிலிருந்து சேர்க்கிறேன்.கட்டாயமாக நேரம் கிடைக்கும் போது எழுதுங்க ....

மிக்க நன்றி...
அனிதா

hi

சகோதரி அவர்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஒர்இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

உங்கள் கணவரின் வயிற்றுப்பிரச்சனைக்கு.. காலை சிற்றுன்டியில் ரொட்டித்துண்டுடன் தேனை சேர்த்து தொடர்ந்து கொடுத்துவாருங்கள். பழங்களில் கொய்யா, மாதுளை போன்ற பழங்களை தொடர்ந்து கொடுத்து வாருங்கள் இறையருளால் விரைவில் குணம் கிடைக்கும்

பிரார்த்தனைகளுடன் உங்கள் சகோதரன்.

பிரார்த்தனைகளுடன் உங்கள் சகோதரன்.

வணக்கம்...
என் கணவருக்காக நீங்கள் பிராத்தனை செய்தற்கு மிக்க நன்றி.உங்கள் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.

நன்றிகளுடன்
அனிதா

hi

அனிதா கவலை படாதீர்கள்.
தேங்காயை மென்று அந்த ஜீஸை மட்டும் முழுங்க சொல்லுங்க.ஜவ்வரிசி கஞ்சி பெஸ்ட் ( பஞ்சி தோசையும், ஜவ்வரிசி கஞ்சியும் கொடுங்கள்) பிறகு லைட்டான காரம் இல்லாமல் வயறு நிறைய சாப்பிட சொல்லுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

அனிதா கவலை படாதீர்கள்.
கேரட் கஞ்சி கொடுங்கள் கேரட் கூட வயிற்று புண்ணு ஆற்றும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்