ஸ்பெஷல் ரசம்

தேதி: October 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி களைந்த தண்ணீர் - ஒரு டம்ளர்
பருப்பு வேக வைத்த தண்ணீர் - ஒரு டம்ளர்
புளி - ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு
தக்காளி - ஒன்று
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் - ஒன்று
பூண்டு பல் - 4
வெல்லம் - கால் தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு


 

புளியை அரிசி களைந்த தண்ணீரில் ஊற விடவும். மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும். பூண்டு பல்லை தட்டி எடுக்கவும்.
ஒரு வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து ஊற்றவும். உப்பு, தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
5 நிமிடம் கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு கொதிக்க விடவும். 3 நிமிடம் கொதித்ததும் பருப்பு தண்ணீர் சேர்க்கவும்.
ரசம் நுரை கட்டியதும் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, வெல்லம் சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மேடம் நேற்று மதியம் இந்த ரசம் செய்தேன்.சுவை அருமை.என் பாட்டி அரிசி களைந்த தண்ணீரில்தான் புளி ஊற வைப்பார்கள்.மறந்துபோன ஒன்று உங்களால் மீண்டும் செய்யமுடிந்தது.நன்றி
சவுதி செல்வி

சவுதி செல்வி

இந்த ரசத்தில் அரிசி களைந்த தண்ணீர் சேர்ப்பது புது ருசியை கொடுக்கும். அரிசி களைந்த தண்ணீரில் பருப்பு வேகவைத்து சாம்பார் செய்தாலும் நன்றாக இருக்கும்.
இட்லிக்கு ஊறவைக்கும் அன்று நமக்கு அரிசிகளைந்த தண்ணீர் அதிக அளவிலும் திக்காகவும் கிடைக்கும். அன்றைக்கு வெண்டைக்காய் மண்டி செய்ய இந்த தண்ணீரை பயன்படுத்தலாம்.
சேனைக்கிழங்கை இந்த தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் கிழங்கில் அரிப்பு போய்விடும். நன்றிம்மா..!!

மாலதி அக்கா ஸ்பெஷல் ரசம் நல்லா இருந்தது. பூண்டு எப்போது சேர்ப்பது ? நான் புளித்தண்ணீருடன் சேர்த்து போட்டேன். பருப்பு தண்ணீர் சேர்க்க மறந்து விட்டேன். ஆனாலும் சுவையாக இருந்தது.

மாலி..! மிளகு சீரகம் அரைக்கும்போது கடைசியில் பூண்டு வைத்து தட்டி எடுக்கவெண்டும்.
நன்றி..!! பின்னூட்டம் அனுப்பியதற்கு..

இந்த ரசம் பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

நீங்கள் குறைந்த எண்ணிக்கையில் குறிப்புகள் குடுத்திருந்தாலும் உங்கள் ரெஸிப்பீஸ் எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது. மேன்மேலும் குறிப்புகள் குடுக்கவும்.

இன்று மதியம் உங்களுடைய ஸ்பெஷல் ரசம் மற்றும் இரால் எண்ணெய் குழம்பினை செய்தேன். மிகவும் அருமை. எல்லாமே காலியாகிவிட்டது..
இரண்டுமே மிகவும் சூப்பராக இருந்த்து.. என்னுடைய பொண்ணும் கொஞ்சமாக ரசம் சேர்த்து சாப்பிட்டாள்.
நானும் வடகம் இல்லத்தால் வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து தாளித்து செய்தேன்..ஆனால் வடகத்தின் சுவை தனி தான்…எங்கள் வீட்டில் எல்லாம் அம்மா செய்வாங்க…அல்லது பாட்டி வீட்டில் இருந்து வந்துவிடும்...அதிலும் மீன் குழம்பு, கீரை கடைசல் எல்லாம் தாளித்து கொட்டும் பொழுது மிகவும் வாசமாக இருக்கும்…
இந்த வருடம் தான் வெய்யில் நன்றாக காயும் பொழுது தாளிக்கும் வடகம் போட வேண்டும்..
குறிப்புக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மாலதி அக்கா இன்று இந்த ரசம்செய்தேன் நல்ல இருந்தது.
ஜலீலா

Jaleelakamal

வின்னி..!! எஸ்... நான் குறைவான எண்ணிக்கையில்தான் குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இன்னும் எங்க வீட்டில் செய்யும் ரெஸிப்பீஸ் எல்லாம் எழுதவேண்டும். ஸ்பெஷல் ரசம் செய்து பார்த்தமைக்கு நன்றி....!!

கீதா..!! இந்த இறால் எண்ணெய்குழம்பு எல்லொருக்குமே ரொம்ப பிடிக்கும். ஸ்பைசி அதிகம் இல்லாமல் மைல்ட் ஆக இருக்கும். செய்முறையும் ஈஸி.
ஸ்பெஷல் ரசத்தில் அரிசி களைந்த தண்ணீர் சேர்ப்பதால் சுவை நல்லா இருக்கும்.
நன்றி கீதா..!!

ஜலீலா..!! அரிசி களைந்த தண்ணீரை வீணாக்காமல் இந்த மாதிரி ரசம், சாம்பார் வைத்தால் நல்ல ருசியாக இருக்கும். இந்த ரசத்தில் மட்டன் அல்லது சிக்கன் வேக வைத்த தண்ணீரையும் சேர்த்தால் இன்னும் டேஸ்டாக இருக்கும்.
நன்றி ஜலீலா..!!

I prepared this rasam today... It was awesome... My husband didn't have curd rice... He had only rasam rice... I got very good appreciation from him... Thank you very much... :)

என் அம்மா எப்போதும் இப்படிதான் செய்வாங்க..நான் எப்போதாவது செய்வேன்.
ஆனால் புளிக்கரைசல், பொடி,எல்லாம் ஒன்றாய் கொதிக்க விடுவேன்.கடைசியில் பருப்புநீர் ஊற்றுவேன்.உங்கள் முறைப்படி கொஞ்சம் கொதிக்கவிட்டு பின் பொடி சேர்ப்பது கூடுதல் சுவையாய் உள்ளது.நன்றீ

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.