குறுக்குத் தையல் (Cross Stitch) கற்றுக்கொள்ள வாருங்கள்

தேதி: October 22, 2007

5
Average: 4.7 (6 votes)

குறுக்குத் தையலின் வகைகளையும், எப்படி செய்வது என்பதையும் திருமதி. நர்மதா அவர்கள் தெளிவான படங்களுடன் மிகச் சிறப்பாக விளக்குகின்றார்.

 

அய்டா ஃபேப்ரிக்(aida fabric) - 3" X 3" அளவானது
சிறிய ஃபிரேம் - 1
ஊசி
எம்பிராய்டரி நூல்கள் - டார்க் பிங்க், லைட் பிங்க், டார்க் பச்சை, லைட் பச்சை, இலை பச்சை

 

இதற்கு தனி குறுக்குத் தையல் (Single Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும்.
இதற்கு வரி குறுக்குத் தையல் (A row of cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் அடுத்த கட்டத்தில் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும். இப்படியே தேவையான வரை தொடர்ந்து பின்னர் அதே முறையில் பின்னோக்கி வரவும். படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை வரிசைப்படி தொடரவும்
இதற்கு அரை குறுக்குத் தையல் (Half Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். அவ்வளவுதான். இதையே மேலிருந்து ஆரம்பித்து கீழ்நோக்கி கொண்டு வரலாம்.
இதற்கு கால் குறுக்குத் தையல் (Quarter Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி சதுரத்தின் மையம் (C) வரை செல்லவேண்டும். அதாவது பாதி தூரம் (எண் 2) வரை சென்றால் போதும்.
இதற்கு முக்கால் குறுக்குத் தையல் (Three-quarters Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் ஏதேனும் ஒரு கீழ் பக்கத்தில் (எண் 1) இருந்து தொடங்கி, குறுக்கே மேல்நோக்கி எண் 2 வரை செல்லவும். அதன்பின்னர் பின்புறமாக, நேரே கீழாக எடுத்து வந்து, எண் 3 வழியே வெளிக்கொணரவும். அதில் இருந்து குறுக்கே சதுரத்தின் மையம் வரை செல்லவும்.
தையலுக்கு BASEஆக பிளாஸ்டிக் பாட் (Palstic Pad), அய்டா ஃபேப்ரிக்(Aida Fabric), லினன் ஃபேப்ரிக் (Linan Fabric) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பெரிய படங்கள் செய்து ஃபிரேம் செய்வதாயின் அய்டா ஃபேப்ரிக்தான் மிகவும் வசதியானது. இதில் தைப்பதும் மிக இலகு. முதன் முதலில் தைக்கத் தொடங்குபவர்கள் இதில் ஆரம்பிப்பது நல்லது. இந்த பேப்ரிக்கிலும் 11Count, 14 Count, 16 Count, 18 Count, 22 Count என வகைகள் உண்டு. Count என்பது ஒரு அங்குலத்தில் எத்தனை குறுக்கு நூல்கள் ஓடுகின்றன என்பதைக் குறிக்கும்.
தைப்பதற்கு எம்பிரொய்டரி நூல்(Embroidery floss), வூல் நூல்(Wool thread), யார்ன் (yarn) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தையலை தைப்பதற்கென்றே முனை மழுங்கிய, நீண்ட கண்(துளை) உள்ள ஊசிகள் (tapestry needle) இருக்கின்றன.
முதலில் மாதிரிக்கு தையல் (கார்னேஷன் பூ) விளக்கப் படம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியவாறு துணியில் மார்க் செய்துவிட்டு அதன் மீதும் தைக்கலாம் அல்லது தையலை எண்ணி அதற்கேற்றவாறு தைக்கலாம்.
முதலில் பூ இதழ்களை குறுக்குத் தையலால் தைக்கவும். தைப்பதற்கு இரட்டை நூலைப் பயன்படுத்தவும்.
தைத்துக்கொண்டிருக்கும் போது இடையில் நூல் முடிந்துவிட்டால் முடிச்சு போட வேண்டாம். பதிலாக பின்னால் திருப்பி, ஏற்கனவே தைத்த தையலினூடாக கோர்த்து எடுத்து விடவும்.
பூவை முழுவதும் தைத்து சிறிய ஃபிரேமில் போட்டு பிளைன்ட் (Blind)கயிறில் கட்டிவிட்டால் பார்ப்பதற்கு கைப்பிடி போல மிகவும் அழகாக இருக்கும். இதே பூவை லேடீஸ் பான்ட் பாக்கட்டில், தலைகாணி உறையில் அல்லது சிறுவர்களின் ஆடைகளிலும் போடலாம். மிகவும் அழகாக இருக்கும்
குறுக்குத் தையலின் வகைகளையும், எப்படி செய்வது என்பதையும் திருமதி. நர்மதா அவர்கள் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கின்றார். அறுசுவை நேயர்களுக்கு மிகவும் அறிமுகமான திருமதி. நர்மதா அவர்கள் சமையல் மட்டுமன்றி, கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகுந்த திறன் வாய்ந்தவர்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

எப்படி நர்மதா இப்படி சமையல், தையல்னு கலக்கறீங்க. உங்க க்ராஸ் ஸ்டிட்சிங் செய்முறை விளக்கம் தெளிவா இருக்கு. உங்க சமையல் குறிப்பு மாதிரியே இதுவும் சூப்பரா இருக்கு.

சபாஷ் நர்மதா. அருமையாகவும், எளிதாகவும் விளக்கியுள்ளீர்கள். புதிதாக கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவிருக்கும்.
நான் துணியில் தான் இந்த வேலைப்பாடுகளை செய்வேன். நீங்கள் சொல்லியுள்ள சீட்டில் மணிபர்ஸ் போட்டுள்ளேன். இன்னும் இதுபோன்ற நிறைய படைப்புகளை கொடுங்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உங்கள் கைவேலைப்பாடுகள் ஒவ்வொன்றும் அழகோஅழகு...எளிமையாகவும், பொறுமையாகவும் நீங்கள் சொல்லியிருக்கும் விதம் அதைவிட அழகு!

கலக்கிட்டீங்க நர்மதா!!!!

அன்புடன்

ஷாந்தா :-D

நர்மதா, இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாத என்னைப் போன்றோருக்கும் புரியும்படி மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். அதற்கு உங்களுக்கு மிக்க நன்றி. இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் Arts and Crafts store-ல் கிடைக்குமா?

பாராட்டிய தேவா, செல்வி (மேடம்), விதுபா, ஷாந்தா, வானதி அனைவருக்கும் நன்றி.

மேலுள்ள தையல் விளக்கப்படங்கள் ஐந்தும் வெறும் படங்கள் மட்டுமே (titles உடன்) நான் அனுப்பினேன். அதற்கான விளக்கம் கொடுத்தது அட்மின் தான். மிகவும் நன்றி அட்மின்.

ஐடா (aida) பேப்ரிக்கில் ப்ராக்டீஸ் பண்ணிவிட்டு துணிகளில் போடுவது இலகுவாக இருக்கும்.

வானதி, எல்லா craft storeகளிலும் இதற்கான பொருட்களை வாங்கலாம். எனக்கு தெரிந்து யு.எஸ்ல மைக்கல்ஸ் (Michaels), ஜோ-ஆன் (Jo-Ann), பென் -பிராங்லின் (Ben-Franklin) போன்ற கடைகளில் கிடைக்கிறது.
நன்றி.
-நர்மதா :)

நன்றி.

ஹாய் நர்மதா!
எப்டிருக்கீங்க? அட்மினிடமிருந்து எந்தத்தகவலும் இல்லை(இ-முகவரி).
இ-மெய்ல் முகவரியை புதுப்பித்துள்ளேன்.அட்மினுக்குத்தெரியும்.

மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,

ஷாந்தா :-)))

அறுசுவை நிர்வாகமோ, அட்மினோ இ-முகவரி பரிமாற்றம் செய்வது இல்லை. இது எனக்கு தெரியாததால் உங்களிடம் கூறிவிட்டேன். பரவாயில்லை. நாங்கள் இதிலேயே கதைக்கலாம் :)
-நர்மதா:)

நர்மதா
இதற்க்கு ,மெய்ல் பண்ணுங்கள்,(விருப்பமிருந்தால்)

அன்புடன்
ஷாந்தா

சட்டையில் தைப்பது என்றால் நீங்கள் படத்தில்காட்டியதுபோல் கோடுபோட்டுசெய்யவேண்டுமா எனக்கு உதவுங்கள்

ஹலோ ஜோதி,
சட்டையில் தைப்பது என்றால் படத்தில் காட்டியது போல கோடு போட்டும் தைக்கலாம். அல்லது சட்டையின் எந்த பாகத்தில் தைக்க வேண்டுமோ அந்த இடத்தில் ஐடா பேப்ரிக்கை (துவைத்து காயவிட்டு - stiffness போவதற்கு) வைத்து நூலோடிவிட்டு அதன் மேல் தைத்துவிட்டு பின்னர் ஐடா பேப்ரிக்கை கழற்றி விடலாம். ஐடா பேப்ரிக் ஐதாக இருப்பதால் நூல் நூலாக இழுக்க தன்பாட்டில் கழன்று வரும்.
முயற்சித்து பாருங்கள். முடியவில்லையாயின் கூறுங்கள் படங்களுடன் விளக்க முயற்சிக்கிறேன் :)
-நர்மதா :)

நர்மதா தங்கள் விளக்கத்திற்க்கு நன்றி நான் செய்துபார்துவிட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

Please share me Blouse cutting PDF book

Please share me Blouse Cutting PDF Book
Mail ID soundarya1819@gmail.com