தேதி: October 22, 2007
எளிமையான முறையில் பேப்ரிக் பெயிண்டிங் மூலம் அழகிய பூக்கள் வரைவது எப்படி என்பதை திருமதி. நர்மதா அவர்கள் விளக்குகின்றார்.
துணி
ஃபேப்ரிக் பெயிண்ட் - வெள்ளை, டார்க் நீலம், லைட் நீலம்
தூரிகை (பெயின்டிங் பிரஷ்)
கலர் சாக் (Chalk)
ஒரு துணியில் சாக்கினால் பூக்கள், இலைகளின் படத்தை வரையவும்.

சாக்கினால் வரைந்த படத்தின் மீது தூரிகை கொண்டு பூவிதழ்களின் வெளிப்புறத்தை (out line) வெள்ளை நிறத்தால் வரையவும். பின்னர் லைட் நீல நிறத்தால் இதழின் உள்பகுதியை நிரப்பவும்.

பின்னர் பிரஷால் இதழின் வெளி ஓரத்திலிருந்து நடுப்பக்கமாக உள்நோக்கி மெதுவாக இழுத்துவிடவும் (soft long strokes). இப்படி இதழைச் சுற்றி செய்யவும். (இரு நிறங்களும் தனித்தனியே தெரியாமல் ஒன்றுடன் ஒன்று கலந்தமாதிரி இருக்கும்).

இதேபோல் அனைத்து இதழ்களுக்கும் செய்து, பூக்கள் அனைத்துக்கும் வர்ணம் தீட்டவும்.

பின்னர் இதே போன்று இலைகளிற்கு டார்க் நீல நிறத்தால் வர்ணம் தீட்டவும். பின்னர் லைட் நீல நிறத்தால் இலைகளின் நரம்புகளை வரையவும். பின்னர் பிரஷின் அடிப்பாகத்தை வெள்ளை வர்ணத்தில் தோய்த்து பூக்களின் நடுவே புள்ளிகளை வைக்கவும்.

இதேபோல பிரஷின் அடிப்பாகத்தால் நீல வர்ணத்தில் பெரிய பூக்களைச் சூழ சிறிய பூக்களை வரையவும். நடுவில் ஒரு புள்ளி வைத்து சுற்றி 6 புள்ளிகள் வைக்கவும்.

பின்னர் பெயிண்டின் தன்மைக்கேற்ப துணியை நிழலில் உலர்த்தவும்.(பொதுவாக 24 மணி நேரங்கள் - சிறிய பூக்களாயின் குறைந்த நேரத்திலேயே உலர்ந்து விடும்). இவை மிகவும் இலகுவாக போடக்கூடிய பூக்களாகும்.

இப்படி விரும்பிய பூக்களை விரும்பிய நிறங்களில் போடலாம். இந்த பூக்களை தலைகாணி உறை, கதிரை குஷன் உறை, திரைச்சீலை, ஆடைகள் ஆகியவற்றிற்கு போட அழகாக இருக்கும்.

Comments
ஃபேபரிக் பெயின்டிங்
டியர் தங்கை நர்மதா எப்படி இருக்கீங்க? தங்களின் இந்த ஃபேபரிக் பெயின்டிங்கை காண மிகவும் அழகாக இருக்கின்றது பாரட்டுக்கள்.இதுப்போல் மென் மேலும் தங்களின் கைவண்ணத்தை காண ஆவலாய் உள்ளேன்.நன்றி.
மிகவும் நன்றி
வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி மனோஹரி மேடம்.
-நர்மதா :)
பேப்ரிக் பெயிண்டிங்
ரொம்ப அழகா இருக்கு நர்மதா, வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)
அன்புடன்
ரீஹா :-)
கலக்கிறீங்க நர்மதா
நர்மதா பேப்ரிக் பெயிண்டிங் ரொம்ப அழகாக இருக்கு நர்மதா. இன்னும் உங்கள் கை வண்ணங்கள் கலக்க வாழ்த்துக்கள்.
ஜானகி
கண்ணை பறிக்குது
உண்மைதான் நர்மதா கண்ணை பறிக்குது.அழகா இருக்கு.
அழுக்கான துவைக்கலாமா?
நர்மதா
ரொம்ப அழகான பெயிண்டிங்...
அதைவிட அந்த தலைகாணியின் உறைக்கு போட்டது ரொம்ப நல்லா இருக்கு
அழுக்கான துவைக்கலாமா?
பெயிண்ட் போயிடுமா???
துவைத்தாலும் போகாது
சுபா பேப்ரிக் பெயின்ட் துவைத்தாலும் போகாது. நர்மதா என்னை 30 வருடங்கள் பின் நோக்கி அழைத்துச் சென்று விட்டாள். என் தங்கை ஸ்கூல் பைனல் முடித்ததும் அவளுடைய வெள்ளை யூனிபார்ம் பாவாடையில் பேப்ரிக் பெயின்டால் பூங்கொத்துக்கள் போட்டேன்.
ம். இப்ப ஆபீஸ், வீடு, சாம்பார். ரசம், அறுசுவை அரட்டை, ட்ரெயினில் அரட்டை, இப்படியே போகுது வாழ்க்கை. தூண்டுகோலாக இத்தனை தங்கைகள் இருக்கும்போது சீக்கிரம் செகன்ட் இன்னிங்ஸ் ஆட ஆரம்பிக்கணும்.
நர்மதாவுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி
பேப்ரிக் பெயின்டிங் ரொம்ப அருமை
பேப்ரிக் பெயின்டிங் ரொம்ப அருமை நர்மதா.முயர்ச்சி செய்து பர்க்கிரேன் என்னால் முடியுமா என்ட்ரு.கைவினை பொருட்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.பர்ப்பதர்க்கு எளிதக தெரிகிரது.மிகவும் அழகாகவும் இருக்கிரது.
Today is a new day.
மிக எளிமையாக
மிக எளிமையாக விளக்கியிருக்கிறிர்கள். ஆனால் பார்க்க அட்டகாசமா இருக்குது....எனக்கும் அதை குஷனாய் செய்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு....தினம் இனி நர்மதாவின் வேலைபாடுகளை எதிர்பார்த்தே அருசுவைக்கு வருவேன்
தளிகா:-)
நீங்க ஒரு கலைக்களஞ்சியம்!!!
இது வெறும் பாராட்டுக்கு மட்டும் சொல்லவில்லை நர்மதா. நிஜமாகவே கண்ணையும் கருத்தையும் கவரும் அழகான கைவேலைப்பாடுகள்!!!மேலும் மேலும் உங்கள் திறமைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள் நர்மதா!!!
மிக அழகு!
நர்மதா இந்த பெயிண்டிங் சூப்பராக இருக்கிரது!! எனக்கும் இந்த போன்ற நல்ல திறமையான விஷயஙகளுக்கும் ரொம்ப தூரம் :) இவற்றையெல்லாம் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது!!! உஙகளுக்கு எவ்வளவு திறமை இருக்க வேண்டும் இவ்வளுவு அழகான வேலைப்பாடு செய்வதற்கு!! என்ன சொல்லி வாழ்த்துவதென்று தெரியவில்லை :) தொடர்ந்து நிறைய செய்து காட்டுங்கள். என் மாதிரி ஆட்கள் அட் லீஸ்ட் எப்படி செய்தீர்கள் என்றாவது பார்த்து கொள்ள ஒரு வாய்ப்பு :)
உமா :)
பெயின்டிங் மிகவும் சுலபம்
பாராட்டிய ரீஹா, ஜானகி, ரோஸ்மேரி, சுபா, ஜெயந்தி மேடம், சொலை, தளிகா, விதுபா, உமா அனவருக்கும் மிகவும் நன்றி. என்னை பாராட்டுவதுடன் நிற்காமல் நீங்களும் செய்து பார்த்து படங்கள் அனுப்பினால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் :)
சோலை, உமா, இந்த பெயின்டிங் செய்வது அதிலும் பூக்களிற்கு பெயின்ட் செய்வது மிகவும் சுலபம். முயற்சித்து பாருங்கள் நன்றாக வரும்.
சுபா, தளிகா அந்த உறை quiltingஇல் செய்தது. விரைவில் அந்த செய்முறை அனுப்புகிறேன். மிகவும் சுலபமான quilting.
ஜெயந்தி மேடம், நீங்களும் பெயின்டிங் செய்து படங்கள் அனுப்புங்கள். உங்கட techniqueஎப்படி என்று நானும் கற்றுக் கொள்கிறேன்.:)
-நர்மதா:)
ஹாய் நர்மதா:-)
ஹாய் நர்மதா:-)
இந்த குறுக்குத்தையல்,வண்ணம் தீட்டல் எல்லாம் எங்க படிச்சீங்க? ரொம்ப நல்லா இருக்கு :-))
அன்புடன்,
ஷாந்தா. :-D
செய்து பார்க்க ஆர்வம் வரும்
ஹலோ ஷாந்தா,
எப்பிடி இருக்கிறீங்க? பாராட்டுக்கு நன்றி. இதெல்லம் எங்கேயும் நான் கற்றுக் கொள்ளவில்லை. பாடசாலையிலும் நான் கற்கவில்லை. (தெரிவு செய்தது சங்கீதம்:) எனது அம்மா நன்றாக தைப்பார்கள். அப்பா நன்றாக வரைவார்கள். அதனால் எனக்கும் வந்திருக்கும் :) புதிதாக ஒன்றைப்பார்த்தால் செய்து பார்க்க ஆர்வம் வரும். அவ்வளவுதான். இங்கு வந்த பின்னர் எனது கை வேலைப்பாடுகளுக்கு முதல் ரசிகர் எனது கணவர்தான். இப்ப ரசிப்பதற்கு இவ்வளவு பேர் இருக்கும் போது எனக்கும் மிகவும் உற்சாகமா இருக்கு. எல்லோருக்கும் நன்றி. வாய்ப்பளித்த அறுசுவைக்கும் நன்றி.
-நர்மதா :)
பி.கு: ஷாந்தா, உங்களைப்பற்றி சொல்லுங்களேன். A/L என்ன செய்தீர்கள்? நான் Bio-Science.
எனக்கும் ஆர்வமா இருக்கு
ஹாய் நர்மதா,
முகப்பில இந்த பெயிண்டிங் படத்தை பார்த்தவுடனே கிளிக் பண்ணி உள்ளே வந்துட்டேன். க்ராப்ட் ஒர்க்ஸ்க்குல எனக்கு இதுவரைக்கும் பெரிசா இண்ட்ரெஸ்ட் இல்ல. இப்ப இதெல்லாம் பார்க்கிறப்ப நானும் செஞ்சு பார்க்கணும்னு தோனுது. ரொம்ப அழகா பண்றீங்க. உங்க சமையல் குறிப்பு, கைவேலைகள் எல்லாமே நல்லா இருக்கு. இன்னும் நிறைய செஞ்சு காமிங்க.
ஹாய் நர்மதா!
ஹாய் நர்மதா!
உங்கள் பதில் கண்டு ரொம்ப சந்தோஷம். நானும் Bio தான் படித்தேன்,ஆனா இப்ப எல்லாமே மறந்தாச்சு!
வேம்படியில் நாங்க எப்படியும் சந்தித்திருப்போமென்று நினைக்கிறேன்.
யாழில் எங்கிருந்தீர்கள்?
என்னோட email addressஐ இப்பதிவில் தந்தால் தொடர்புகொள்வீர்களா?
விரும்பினால் தெரியப்படுத்துங்கள்:-))
உங்க "க்ளாஸ் மேட்ஸ்" யாரையாவது US இல் சந்தித்தீர்களா?
மீண்டும் சந்திக்கிறேன்,
அன்புடன்,
ஷாந்தா.
to narmadha
மிக அருமையாக செய்து காட்டிருக்கிரீகள் நர்மதா..வாழ்த்துக்கள்
mub
அழகு பெயிண்டிங்
ஹாய் நர்மதா,
உங்க பெயிண்டிங் ரொம்ப அழகா இருக்கு. மற்றும் உங்க மத்த டிசைன்ஸும் ரொம்ப அழகா இருக்கு. நீங்க விளக்கி இருக்கற விதம் அருமையா இருக்கு:-) நிச்சயம் நானும், இனி செய்ய முயற்சிக்கிறேன்:-)(சின்ன வயசுல ஸ்கூல்ல சென்சிருக்கேன்:-))
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
நன்றி
பாராட்டுக்கு நன்றி முபீனா & ஹர்ஷினி
-நர்மதா:)
ஹலோ ஷாந்தா
ஹலோ ஷாந்தா,
யாழ் நகர்தான்(Town) நாங்கள் இருந்தது. classmatesயாரும் இங்கில்லை. வேரு statesஇல் இருவர் உள்ளனர். பலருடன் தொடர்பு விட்டுப் போயிற்று. நீங்கள் ஜனனியின் class என்று நினைக்கிறேன் (வேறு டிவிஷனோ தெரியாது?)
இ-முகவரி அனுப்புங்கள். கண்டிப்பாக பதில் போடுகிறேன் :)
-நர்மதா :)
To Daisy Happy Anniversary.......
அன்புள்ள Daisy அண்ணி
திருமண நாள் வாழ்துக்கள்..........May God Bless you both.
leemacyril
leemacyril
ஹாய் நர்மதா!!
ஹாய் நர்மதா!!
மெய்ல் பண்ணுங்க :-)
நன்றி.
அன்புடன்,
ஷாந்தா.:-))
ஹலோ ஷாந்தா
ஹலோ ஷாந்தா, உங்களது இ-முகவரி எடுத்துவிட்டேன். இனி நீங்க அதை எடுத்துவிடலாம் :)
-நர்மதா:)
எப்படி பதிவை நீக்குவது?
எப்படி பதிவை நீக்குவது?
நான் எதுவும் பண்ணல!
நான் எதுவும் பண்ணல! எப்படி போச்சு?பாபு அண்ணாவாயிருக்குமோ?
About that painting
Your painting is simple and so good. Its easy to learn for a beginner in painting like me.
Regards,
Mrs. AnuSiva.
நன்றி
வாழ்த்துக்கு நன்றி அனு சிவா.
-நர்மதா :)
ரேணுகா ஓர் உதவி PLZ frolika 3D எங்கு கிடைக்கும்
POT PAINT செய்ய frolika 3D PAINT CAMEL COMPANY PAINT வேண்டும்
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta