தேதி: October 23, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பரங்கிக்காய் துண்டுகள்
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
தேங்காய்துருவல் - அரை கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
துவரம்பருப்பு - 4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8 பல்
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு
ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி சூடு பண்ணவும். கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் தாளிக்கவும்.
துவரம்பருப்பையும் போட்டு பொன் நிறமாக வறுக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். மிளகாய்தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும்.
அதில் புளியை கரைத்து ஊற்றவும். தேங்காயை அரைத்து ஊற்றி உப்பு நறுக்கிய பரங்கிக்காய் சேர்க்கவும்.
அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.
Comments
hello malathi
anbudanஹல்லோ மாலதி,
எப்படி இருக்கீங்க?, நாங்கள் நலமாக இருக்கிறோம்.நேற்று நீங்கள் கொடுத்துள்ள பறங்கிக்காய் புளிக்குழம்பு செய்தேன், தோழிகள் மிக அருமை என்று கூறினர்.செய்முறை கேட்டனர் எழுதிக்கொடுத்தேன். சுவை மிக நன்றாக
இருந்தது.நன்றி. மீண்டும் ச்ந்திபோம்.
என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.
anbudan
பறங்கிகாய் குழம்பை பாராட்டிய விஜயாவிற்கு நன்றி
பாராட்டுக்கு நன்றி விஜயா!...பறங்கிக்காயிற்கு பதில் முருங்கைகாய் போட்டாலும் நன்றாக இருக்கும்.
பறங்கிகாய் புளிக்குழம்பு
பறங்கிகாய் புளிக்குழம்பு
மாலதி அக்கா, இப் புளிக்குழம்பு மிகவும் அருமை. செய்வதற்கும் எளிதாக இருந்தது. நான் முருங்கைகாய் போட்டு செய்தேன். நன்றி உங்களுக்கு.
வின்னி..!! நன்றி
வின்னி..!! முருங்கைக்காய் போட்டு செய்தாலும் சுவையும் மணமும் நன்றகவே இருக்கும். எங்கள் கிராமத்தில் மழைகாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு காய்கறிகள் கிடைக்காது. மழைக்காற்றில் முருங்கைமரங்கள் விழுந்துவிடும். அப்போது இந்த வகை குழம்புகள்தான் அடிக்கடி வைப்போம்.