ஊக்குவிங்க எல்லோரும் இங்கே வாங்க

கூட்டாஞ்சோறு குறிப்புகளை கொடுக்க ஊக்குவிப்போம்

செல்வி அக்கா அவர்களே இன்னுன் 15 குறிப்பு கொடுத்தால் 250 தொட்டு விடலாம்.
சஹத்கதீஜா 16 குறிப்புகள் கொடுத்தால் டபுள் சென்ட்சுரி தான்.
சுபா ஊருக்கு போகும் முன்னாடி 25 குறிப்புகள் கொடுத்து டபுள் சென்ட்சுரி தொட்டு விடுங்கள்.
சித்ரா துரை, வாணிரமேஷ் அவர்களே 10, 12 குறிப்புகள் கொடுத்து 150 தொட்டு விடுங்கள்.
மனோ, சித்ரா, ஜெயந்தி அவர்களே 5, 6, 9 குறிப்புகள் கொடுத்து சென்ட்சுரி தொட்டு விடுங்கள்.

ஜானகி

நன்றி ஜானகி. ஊக்குவிக்க ஆரம்பிச்சுட்டீங்க.
சதம் அடிக்காததற்கு காரணங்கள் (நொண்டிச்சாக்கு!)
1. அறுசுவைக்கு லேட்டா வந்தது (ஆனா எனக்கப்புறம் வந்த சுபா அடிச்சா க்விக் சென்சுரி, அடிக்கப்போறா டபுள் சென்சுரி)
2. சைவம் மட்டும்
3. நேரமின்மை
4. கொடுக்க நினைக்கிறதெல்லாம் ஏற்கெனவே சகோதரிகள் கொடுத்துட்டாங்க.
5. கொஞ்சம் சோம்பேறித்தனம்
6. அரட்டையில் இருக்கும் தீவிரம் குறிப்பு கொடுப்பதில் இல்லை.

இருந்தாலும் உங்கள் ஊக்குவிப்பு துங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை உசுப்பி விட்டது.
அன்புடன்
ஜெயந்தி

எனக்கு அறுசுவையுடன் என் கணிணிக்கும் பிரச்சனைபோல் தெரிகிறது.பிறகு வந்து பேசுகிறேன்.கருத்துகளை மட்டும் பறிமாறிக்கொள்வோம்.அதைதாண்டி நாம் எல்லாம் அறுசுவையால் இணைந்த நண்பர்கள்தானே.அதிகம் எழுத நேரம் இல்லை.பிறகு வருகிறேன்.

ஜானகி இவ்வளவு கவனமாக எண்ணி எண்ணி எப்படி வெச்சீங்க..நான் குறிப்புகளை பாக்குரதோட சரி எவ்வளவு எண்ணினதே இல்லை...இதில் சுபா தான் படு வேகம்...எல்லாரும் 100,200 ,300 என தொட்ட்டூவிடுவார்கள் விரைவில்.ரோஸ் அதான் உங்களை கானலியா..எனக்கு இப்ப என்னவோ 2 த்ரெட் ஓபென் ஆச்சு

தளிகா:-)

ஹாய் ஜானு,
நலமா? நெஜம் தான்மா. 200 குறிப்புகள் கொடுக்கற வரைக்கும் இருந்த வேகம் கொறஞ்சிருச்சு. அதுக்கு காரணம் அடிக்கடி (?) லீவில இருந்த நான் ஒழுங்கா ஆஃபீஸ் போக ஆரம்பிச்சது தான். இனிமே நேரம் கிடைக்கும்னு நினைக்கிறேன். நிச்சயமா உன்னுடைய ஊக்கத்துக்காகவாவது விரைவில் 250 தொட முயற்சிக்கிறேன். சரி பரவால்ல. தேவா வீட்டுக்கு வேண்டாம், தேவாவோட சேர்ந்து கிறிஸ்மஸ்க்கு என் வீட்டுக்கு வா (தேவா! அழுது அடம் பிடிக்காம சமத்தா வரணும், சரியா).
உன்னோட ஊக்குக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஜலீலா அக்கா இவ்வளவு வேலை கிடையிலும் உங்கள் குறிப்புகளை கொடுக்கிறீர்கள். இன்னும் 5 தான் இருக்கிறது சென்ட்சுரி தொட சீக்கிரம் கொடுங்கள்.

ஜானகி

ஜலீலா வீட்டு வேலை, அலுவலக வேளையிலும் உங்கள் குறிப்புகளை கொடுத்து அசத்தி விட்டீர்கள். இன்னும் 30 தான் சீக்கிரம் கொடுத்து 150 குறிப்புகளை தொட்டு விடுங்கள். அதற்காக வாழ்த்துக்கள்.

ஜானகி

ஜானகி இப்போது டயம் கிடைக்கவில்லை. ஒப்பன் பண்ணும் கொஞ்ச நேரம் யாராவது பேசிக்க்கொண்டிருந்தால் அங்கு பதில் பேசவெ நேரம் சரியாக இருக்கும். கிடைப்பது பத்து பத்து நிமிடம் தான்.
குறிப்புகளும், டிப்ஸுகலும் ந்னைத்து வைத்து மறந்தும் போய்விடுகிறது.என் நடையும் அப்படிதான் ஒரு இடத்தில் சும்மா உட்கார்ந்தால் எனக்கு பிடிக்காது.

ஜலீலா

Jaleelakamal

என்ன மனோகிரி மேடம் 303 குறிப்புகள் கொடுத்து விட்டு அப்படியே விட்டு விட்டீர்கள். ரொம்ப பிஸியாக இருக்கிறீர்களா?
செல்வி அக்கா 324 கொடுத்து விட்டோம் என்று விட்டு விடாதீர்கள். உங்களுடைய சேவை அறுசுவைக்கு தேவை.
ஜலீலா சீக்கிரம் டபுள் சென்ட்சுரி அடித்து விடுங்கள்.
மனோ மேடம், நர்ம்தா, சித்ரா, முத்துலஷ்மி 4,5,8 குறிப்புகள் கொடுத்து சதம் அடித்து விடுங்கள்.
நாங்கள் எல்லாம் உங்களை வாழ்த்த காத்து கொண்டு இருக்கிறோம்.

ஜானகி

ஹலோ ஜானகி எப்படி இருக்கீங்க? நீங்க கூறுவது சரிதான்,குறிப்புகள் கொடுக்காமல் இருப்பதற்கு நேர நெருக்கடியும் ஒரு காரணம் தான்.கொஞ்சம் ஃபிரீ ஆகும் பொழுது மீண்டும் எழுதுகின்றேன்.குறிப்பு கொடுப்போரை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் உங்கள் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது, தொடரட்டும் உங்கள் பணி அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி மீண்டும் சந்திப்போம்.

ஜலீலா இன்னும் 7 குறிப்புகள் கொடுத்தால் 150 தொட்டு விடலாம். முத்துலஷ்மி இன்னும் 5 குறிப்புகள் கொடுத்தால் சென்ட்சுரி தொட்டு விடலாம். உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

ஜானகி

மேலும் சில பதிவுகள்