அதிரசம்

தேதி: October 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பச்சரிசி- 400 கிராம்
வெல்லம்- 400 கிராம்
ஏலப்பொடி- 1 ஸ்பூன்
நெய்- 2 ஸ்பூன்
பொரிப்பதற்குத்தேவையான எண்ணெய்


 

பச்சரிசியை போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் நீரை வடிகட்டி நிழலில் உலர்த்தவும்.
ஓரளவு ஈரப்பசை இருக்கும்போதே மிக்ஸியில் மாவாக்கவும்.
மூன்று முறை சலிக்கவும்.
வெல்லம் உருண்டை வெல்லமாகவோ அச்சு வெல்லமாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தாற்போல இருப்பது நல்லது.
பழுப்பு வெல்லம் சுவையைத்தராது.
வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து வெல்லத்தை அதில் போட்டு அது மூழ்குமளவு நீர் ஊற்றறி பாகு காய்ச்சவும்.
பாகு கொதிக்க ஆரம்பிக்கும்போது அதை வடிக்கட்டி ஏலப்பொடி சேர்த்து மறுபடியும் காய்ச்ச ஆரம்பிக்கவும்.
பாகு இளம்பாகு பதம் வரும்போது, கெட்டியாக ஆரம்பிக்கும்.
ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீரை எடுத்து வைத்துக் கொண்டு, கொதிக்கும் பாகில் ஒரு சொட்டை எடுத்து அதில் ஊற்றினால் பாகு மெழுகுபோல கையில் திரட்ட வரவேண்டும்.
இதுதான் சரியான பதம்.
அப்போது அடுப்பை நிறுத்தி, கொஞ்சம் பாகை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதிப்பாகில் மாவை கொஞ்சம் கொஞ்சமாகத்தூவி மாவை நன்கு கலக்க வேண்டும்.
சப்பாத்திமாவுப்பதத்தை விட சற்று இளகலாக அதிரச மாவுப்பதம் இருக்க வேண்டும்.
பாகு தேவைப்பட்டால் எடுத்து வைத்துள்ள பாகை கொஞ்சம் கொஞ்சமாக உபயோகித்துக் கொள்ளலாம்.
பாகின் மீது நெய்ய சமமாகப் பரப்பி மூடி வைக்கவும்.
இரண்டு நாட்கள் கழித்து மிதமான தீயில் அதிரசங்களைத்தட்டி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் அதிரசம் செய்து பார்க்க இருக்கிறேன்.அதிரசம் ஒரு தடவை சாப்பிட்டு இருக்கிறேன்.மிக்க சுவையான பலகாரம் ,எனக்கு அதிரசம் செய்து தந்த தோழி இப்போது உயிருடன் இல்லை என்பது மிக்க மன வருத்தமான செய்தி .

shall we do athirasam with some other rice..like ponni or idli rice..is it comes good??

everyone is the sculpture of his own lyf!!

அன்புள்ள மனோ மேடம்,

தீபாவளி டைம்க்கு தேவையான ஒரு குறிப்பு தந்திருக்கீங்க. இந்த குறிப்பை அம்மாகிட்ட கேக்கனும்னு இருந்தேன்:-)அறுசுவையிலேயே கிடச்சிடுச்சு. நான் நிச்சயம், சென்சு பாத்து உங்களுக்கு பின்னூட்டம் தரேன், மேடம்:-)ரொம்ப நன்றி:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அதிரசம் செய்து பார்த்தீர்களா? எப்படி வந்தது?

இப்ப தான் செய்யப்போறேன். தீபாவளி வரைக்கும் பண்ணமுடியல. அதான் இந்த வீகெண்ட் பண்ணனும். மாவு எல்லாம் நேத்து ரெடி பண்ணிட்டேன். இன்னைக்கு தான் செஞ்சு முடிக்கனும். செஞ்சிட்டு உங்களுக்கு சொல்றேன். இப்பவே வாசனை சூப்பரா இருக்கு:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்புள்ள மனோ மேடம்,

உங்க குறிப்பு பார்த்து அதிரசம் எப்பவோ சென்சு, சாப்பிட்டோம்:-) ஆனா லேட்டா நன்றி சொல்றதுக்கு முதல்ல சாரி, மேடம்:-(
ரொம்ப அருமையா வந்தது:-) அன்னைக்கே எல்லாமே காலி ஆயிடுச்சு :-). இன்னொரு முறையும் செய்யலாம்னு இருக்கேன். எங்க பாட்டி சென்சு நாங்க சாப்பிட்ட அதே டேஸ்ட் :-) அதனால ரொம்ப பிடிச்சிருந்தது :-). இந்த குறிப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்புள்ள மனோ மேடம்,

உங்க குறிப்பு செபார்த்து அதிரசம் செய்தேன்.. நல்லா இருந்தது...ஆனால் மாவு நைசக சலிக்க முடியவில்லை மாவு சலிப்பது எப்படி ( நம்ம ஊர் சல்லடை என்னிடம் இல்லை)

சல்லடை கிடைக்காவிட்டால் பரவாயில்லை. காப்பி, பால் இவற்றை வடிகட்டும் வடிகட்டியால் சலிக்கலாம்.

மனோ மேடம் அதிரசம் ரொம்ப நல்ல வந்தது.. ...எனக்கு ஒரு சந்தேகம் மேடம் எத்தனை நாள் மாவை வெளியே வைக்கலாம்?

தீபாவளி வாழ்த்துகள்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அதிரசமாவு தயாரித்த பிறகு வெளியே ஒரு நாள் வைக்கலாம். அதற்குப் பிறகு மாவு மிகவும் புளித்து விடும். குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதென்றால் 3 நாட்கள் வரை வைத்திருக்கலாம். அதிரசம் சுடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வெளியே எடுத்து வைத்து அதிகமான குளிர்ச்சி விலகிய பின், அப்போதும் மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தயிர் சேர்த்து பிசைந்தால் இளகலாகி விடும். தயிர் சேர்ப்பதில் கவனம் தேவை

திருமதி. அருண்கவி (கவிதா) அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த அதிரசத்தின் படம்

<img src="files/pictures/athirasam.jpg" alt="athirasam" />

அன்புள்ள கவிதா!

அதிரசம் மிகவும் அழகாக இருக்கிறது. எனக்கே மீண்டும் அதிரசத்தைச் செய்து பார்க்க வேண்டும்போல இருக்கிறது.

மனோ மேடம் உங்களுடைய அதிரசம் நான் தீபாவளிக்கு செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.அதைதான் அட்மின் அவர்களுக்கு படம் எடுத்து அனுப்பினேன்.ஆனால் உங்களிடம் கருத்து தெரிவிக்க முடியவில்லை..மன்னிக்கவும்.
நன்றி,
கவிதா.

kavitha

அட்மின் அவர்களுக்கு நன்றி
நன்றி,
கவிதா.

kavitha

Hello mano madam,

i tried this recipe, but the problem is i couldn't make out the "pagu" patham. i put it in the water but it dilute with the water after some time the syrup stay bottom of the water but im sure its not correct ball consistancy, i kept that dough for 2 days i made it yesterday ennaku adhirasamaga thatta varavillai.breaking. adhirasam is hard to eat.

i dont know where is the and what is the mistake is?
lezzzzzzzzz let me know becoz my son like it verymuch
thanks
jayanthivinay

நீங்கள் பாகு கொதிக்க ஆரம்பித்து கம்பிப் பதம் வந்ததும் அடுப்புத் தீயைக் குறைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பாகு கெட்டியாக ஆரம்பிக்கும். கிளறியவாறே இருங்கள். அவ்வப்போது ஒரு சொட்டு எடுத்து தண்ணீருள்ள கிண்ணத்தினுள ஊற்றிப் பாருங்கள். முத்து அப்படியே தேங்கி நிற்கும் சமயம் வரும். விரல்களால் கலைத்தால் முதலில் கலையும். அதன் பிறகு சில நொடிகளில் இலேசாக உருட்டும் பதம் வரும். அப்படி உருட்டும் பதம் வந்தாலே போதும். அதன் பிறகு சில நொடிகளில் நன்கு உருட்டும் பதம் வந்து விட்டால் பாகு கெட்டியாகி விடும். அப்புறம் அதிரசம் சரியாக வராமல் கெட்டியாகத்தான் வரும். ஒரு கப் மாவுக்கு செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

மனோ மேடம்
இங்கு துபயில் கிடைக்கும் ரெடிமேட் அரிசி மாவில் செய்யலாமா.
என்க்கும் அதிரசம் ரொம்ப பிடிக்கும் முன்பு ஒரே ஒரு தடவை செய்து பார்த்தேன்,
சரியாக வரவில்லை. இந்த முறை படி செய்து பார்க்கிறேன்.
நீங்கள் மாமி இல்லையா சிரி நான் நம்புகிறேன்.
ஜலீலா

.

Jaleelakamal

அன்புள்ள ஜலீலா!

நான் திரு. பாபுவிற்கு அத்தை என்கிறபோது நான் மாமியில்லை, அசைவம் நன்றாகவும் சமைப்பதுடன் சாப்பிடவும் செய்வேன் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

அதிரச மாவை fresh ஆகத்தான் தயாரிக்க வேண்டும். கடையில் வாங்குவது ஒன்று அப்படியே அரைக்கப்பட்ட மாவு அல்லது வறுக்கப்பட்ட மாவாக இருக்கும். துபாயில் கிடைக்கும் மாவு வகைகள் அப்படிப்பட்ட ரகங்கள்தான்!

இன்னக்கி ராத்திரியே பச்சரிசியை ஊற வெச்சிருக்கேன்..நாளைக்கு காலைல தான் அரக்க முடியும்...இப்ப பன்லாம் அப்ப பன்லாம்னு இப்ப தான் ஊற வெக்க முடிஞ்சது...ஒரு நாள் இரவு முழுவனும் ஊறினா நல்ல வருமா?எப்படியும் ட்ரை பன்னிட வேன்டியது தான்..நான் இன்னும் 3 நாளைல உங்களுக்கு அது அதிரசமா வந்ததா இல்லை நெய்யப்பமா வந்துதான்னு சொல்ரேன்:-)

I saw this receipe only now. I tried making Athirasam during Diwali with Meenakshiammal Receipe

Problem is once I put it in Ghee/oil, it broke into powder.

I am not sure, if the oil was too hot or less hot, too much oil or less, whether too much jaggery in less flour or the paagu consistency was a little before..

Somehow, I added more flour, but after a point though it didnt break too much, it was not in Athirasam Shape also...

I could make other sweets, but this Athirasam, appapppa. Kannu kattudhuppa
What to do

அதிரசம் செய்து பார்த்தேன்..மாவு செய்தபொழுது கொஞ்சம் டவுட் வருமான்னு பாக்க தன்னி மாதிரி இருக்கே எப்படி இதை தட்டி பொரிக்கரது??அப்ரம் பாத்தா அடுத்தனாள் மாவு கெட்டியா இருக்கு...மணமோ ஆஹா அப்படி ஒரு மணம் என் newphews பொரிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடரோம்னு ஸ்பூன்ல எடுத்து லேகியம் மாதிரி பாதியை சாப்பிட்டாங்க.
அப்ரம் பாதி மாவை பொறுக்க முடியாம அப்பவே 2 பொரிச்சு பாத்தேன் சரியா வர்ல கெட்டியா இருந்தது..அப்ரம் சரி பொறுத்திருப்போம்னு முனாவது நாள் தான் எடுத்தேன் பொரித்தேன்..நிமிஷத்தில் அதுவும் காலி...அவ்வளவு டேஸ்ட் ...ரோஓம்ப நன்றி அக்கா இந்த குறிப்புக்கு...இனிப்பை அதிகமா சேத்துட்டதால என்னைவிட என் கனவருக்ம்,பொன்னுக்கும் கு ரொம்ம்ப புடிச்சு போச்சு..அன்னக்கே பின்னூடம் கொடுக்க தேடி கிடைக்கல இன்னக்கி தான் சேர்ச் பன்னி கொடுக்க முடிஞ்சது.