செல்லப் பிராணிகள்

செல்லப் பிராணிகளை வைத்திருப்பவர்..அவை செய்த செய்யும் குறும்பு, பிறந்தது,பிரிந்தது போன்ற சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டால் என்னைப் போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்து பழக்கமில்லாதவர்களுக்கு தெரிந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும்.

ரூபிக்கு செல்ல பிராணிகள்னா ரொம்ப இஷ்டமோ. உங்க வீட்ல புறா வளர்க்குறீங்களா?

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

அத ஏன் கேக்குரீங்க ரீஹா ரொம்ப இஷ்டம் தான்..தூரமா மட்டும்....சின்ன வயசில் பூனை பிறான்டிடுச்சு அதிலிருந்து பூனை.நாய்,கோழி இதுவெல்லாம் பயம்..ஆனா தூரமா நின்னு பாக்கவும் அதைப் பத்தி சொல்லிக் கேக்கவும் புடிக்கும்.இன்னக்கி காலைல பொண்ணுக்கு வெளிய பூனையையும் அதோட குட்டிகளையும் காட்டினேன்..அப்ப அது ஒரு காலை தூக்கிட்டு வந்ததுல ரோடுன்னு பாக்காம ஓடி வந்துட்டேன்..அவ்வளவு பயம்.
வீட்ல ஆஸ்ட்ரேலியன் முயலும்,புறாவும் இருந்தது ஊர்ல...பாட்டி வீட்டில் பூனைகள் ஒரு 10 இருக்கும்.கோழி 25 இருக்கும், இதையெல்லாம் எல்லாரும் கொஞ்சுவாங்க என்னத் தவிற.இப்பத்திக்கி செல்லமா வளர்க்க விரும்புவது மீன்....அமைதியா கத்தாம கடிக்காம கண்ணுக்கு அழகா சாப்பிட்டுட்டு பேசாம இருக்கும்..பின்னாளின் ஒரு நல்ல அக்வேரியம் வெக்கனும்னு ஆசை இருக்கு.

தளிகா:-)

அவ்வளவு வீரமா ரூபி பூனைக்கு பயப்படுற
அளவுக்கு:-). மத்த பிராணிகளை விட மீன் வளக்குறத்துக்கு நாம ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம். பாக்குறதுக்கும் ரொம்ப அழகா இருக்கும். குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். வேற பிராணிகள்னா குழந்தைய பக்கத்துல விட கொஞ்சம் பயமா இருக்கும். மீனுனா அப்டி இல்ல.
எங்க வீட்ல பெட் அனிமல்னு எதுவும் வளர்த்ததில்ல. நெறய பேர் வீட்ல நாய்தா பெட்னு வளப்பாங்க. நா பாத்துருக்கேன் ப்ரெண்ட்ஸ் வீட்ல. அவங்க என்ன சொன்னாலும் அத செய்யும். நமக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கும். எப்டி அதுக்கு அவங்க சொல்றது புரியுதுனு.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

இந்த முறை நான் ஹார்ட் அட்டேகில் சாகாம உயிர் பெழச்சேன்..ஊரில்வேகேஷனுக்கு போனப்ப வாக்கிங் போனேன் பொண்ணை தூக்கிட்டு ...ஒரு நாய் ஓடி வந்து எங்களை ஒரு 10 ரவுன்ட் அடிச்சிருக்கும்...குய்யோ முய்யோன்னு நான் கத்தினதுல பக்கத்தில் இருக்கர எல்லாரும் அலறி அடிச்சு வந்து நாயை விரட்டிநாங்க. அதுகுள்ள தலை எல்லாம் வியர்த்து நடுங்கி ஒரு வழி ஆய்யிட்டேன்..அப்ப தமாஷ் நான் ஓடின ஓட்டத்தையும் சத்ததையும் என் பொண்ணு தமாஷுன்னு நெனச்சு ஒரே சிரிப்பு:-D
பாத்தா அந்த நாய் அங்க தென்னமரத்துல தெளிவு எடுத்துட்டிருந்தவரோட நாயாம்..சிரிச்சுட்டே சொல்ரார் அது கடிக்காது சும்மா விளையாடும்னு...யார்கு தெரியும் அது விளையாட்டுன்னு.

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்