முறுக்கு

தேதி: November 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பச்சரிசி - 4 கப்
உளுந்து - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
வெள்ளை எள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பச்சரிசியை கழுவி (ஊற வைக்கக்கூடாது) நன்றாக காய வைக்க வேண்டும்.
உளுந்து, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
காய்ந்த பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு மூன்றையும் சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முறுக்குமாவு, வெண்ணெய், எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பக்குவமாக பிசைந்து முறுக்கு உரலில் இட்டு பிழிந்து எடுக்கவும்.
இந்த முறுக்கு சிவக்காமல் நல்ல கரகரப்புடன் ருசியாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

முறுக்கு செய்தேன் நன்றாக வந்தது .
பாசிப்பயறு சேர்த்து செய்வது இதுவே முதல் முறை ..((படங்களுடன் அனுப்புகிறேன் )வாழ்த்துக்கள் அம்மா....

வாழு, வாழவிடு..

மாலதிஅக்கா உங்களுடைய முருக்கு செய்தேன் நல்ல சுவையாக இருந்தது.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"