5 கப் ஈசி ஸ்வீட்

தேதி: November 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

கடலை மாவு - ஒரு கப்
பால் - ஒரு கப்
தேங்காய்துருவல் - ஒரு கப்
ரீஃபைன்ட் ஆயில் - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி


 

ஒரு வாணலியில் (இப்போது அடுப்பில் வைக்கவேண்டாம்) சலித்த கடலைமாவு, பால், மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்த தேங்காய் துருவல், ரீஃபைன்ட் ஆயில், சர்க்கரை இவை ஐந்தையும் போட்டு நன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும். ஏலக்காய்பொடி சேர்க்கவும்.
30 நிமிடம் கிளறியதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
விருப்பபட்டால் இதில் மஞ்சள் கலர் சேர்த்தும் செய்யலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் மாலதி, பாத்தால் மிக எளிதாகத் தெரிகிறது...நெய் வேறு இல்லை. பயமில்லாமல் டயட் செய்பவர்களும் சாப்பிடலாம். கட்டாயம் தீபாவளிக்கு செய்துவிடுகிறேன் :-)

ஹாய் மாலதி மேடம்,

உங்க கேரட் அல்வா ஐடியா, ரொம்ப உபயோகமா இருந்தது :-)

இப்ப சும்மா ட்ரை பண்ணி பாத்தேன் ஒரு கப் கேரட் வெச்சு:-) சூப்பரா இருந்தது :-) அதோட ரொம்ப சுலபமா இருந்தது :-) தீபாவளிக்கு எங்க வீட்டுல அந்த ஸ்வீட் இருக்கும் :-)[எங்களுக்கு நாளைக்கு தான் தீபாவளி:-)]

அந்த த்ரெட்ல போய் குடுக்கலாம்னு இருந்தேன். ஆனா நீங்க படிப்பீங்களான்னு தெரியல. அதான் இங்க வந்து போட்டுட்டேன்:-)

ரொம்ப நன்றிங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இந்த ஸ்வீட் செய்யலாம்னு இருக்கேன். அதே அளவில் செய்யாம அதில் பாதி அளவு செய்யலாம்னு இருக்கேன் அப்படி பண்ணலாமா மேடம்? நெய் தேவையில்லையா எண்ணெய் சேர்ப்பதால் டேஸ்ட் எதுவும் மாறாதே?

காயத்ரி!... தாராளமாக பாதி அளவில் செய்யலாம். நீங்கள் விரும்பினால் நெய், எண்ணெய் இரண்டும் சேர்த்து செய்யுங்கள். நன்றாக இருக்கும். நான் கொலஸ்ட்ரால் வேண்டாமே என்று நெய்யை தவிர்த்தேன்.

உங்க பதிலுக்கு தான் கத்துகிட்டு இருந்தேன் நன்றி மேடம். செய்துட்டு முடிந்தால் போட்டோ எடுத்து அனுப்பறேன் மேடம்.

மாலதி மேடம் உங்கள் 5 கப் ஈசி ஸ்வீட் 5 பாதாம் பொடிது சேர்த்து செய்தேன். சுவையும் நல்லா அபாரமா இருந்தது. என் ஹஸ்ஸூம் விரும்பி சாப்பிட்டார்.வந்திருந்த கேஸ்டும் சாப்பிட்டு ரொம்ப நல்லா இருக்கு சொன்னார்கள்.இந்த பாராட்டுகள்ளாம் உங்கலையே சேரும்.நல்ல குறிபுக்கு ரொம்ப நன்றி மேடம்.

அன்புடம்,
ஜாஸ்மின்.

ஜாஸ்மின் இந்த ஸ்வீட் தீபாவளிக்கு நான் தவறாமல் செய்வேன். ரிச்னஸ்ஸுக்கு நாம் பாதாம், முந்திரி சேர்த்துக்கொள்ளலாம்.
நன்றி ஜாஸ்மின்...!!

எனக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்கும் மேம் செய்தேன் சூப்பர் ..முதல் தடவை அதனால் பக்குவம் தெரியவில்லை அடுத்த முறை சரியாக செய்துடறேன் வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..