பேரிச்சம்பழம் பற்றிய சந்தேகங்கள்

பேரிச்சம்பழம் பற்றிய சந்தேகங்கள்

பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா,கெட்டதா?

பேரிச்சம்பழத்தில் என்ன மாதிரியான சத்துக்கள் உள்ளன.ஒரு நாளைக்கு எத்தனை பழங்கள் சாப்பிடலாம்.

பேரிச்சம்பழத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது அது கெட்டுபோகாமல் இருக்க எதாவது மருந்து சேர்ப்பார்களா,இல்லையா?.

அப்படி மருந்து சேர்த்தால் அந்த மருந்து உடம்புக்கு நல்லதா,கெட்டதா?.

பேரிச்சம்பழத்தை தண்ணீரில் கழுவி சாப்பிடனுமா இல்லை சும்மா அப்படியே சாப்பிடலாமா?.

இதை பற்றி தெரிந்த சகோதர,சகோதரிகள் விளக்கம் அளித்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது
பேரீசம்பழத்தில் oil, calcium, sulphur, iron, potassium, phosphorous, manganese, copper and magnesium போன்ற சத்துக்கள் உள்ளது...அதிக அளவு iron ,fibre உள்ளது. 98% carbs அடங்கியது.(இந்த விவரம் நெட்டில் இருந்து இப்ப சுட்டது:-))
இதைத்தவிற இன்னும் பல குணங்களைப் பெற்றது இது.
பேரீசம்பழம் நம் புளியைப் போன்று அதிக நாள் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது என்று நினைக்கிரேன்..அதனால் அதனை பாதுகாக்கவென்று எந்த ரசாயனமும் தேவையில்லை..அதனால் இறக்குமதி செய்யப்பட்ட பழத்தை கவலையில்லாமல் உன்னலாம்..
இதனை கழுவி அதாவது சாப்பிடுவதற்கு சற்று முன் மட்டும் தண்ணீரில் இரு முறை அலசி சாப்பிட்டால் நல்லது..தூசு அழுக்கு போன்றவைகள் அதில் ஒட்டியிருக்கலாம் என்ற காரணத்துக்காக.ரொம்ப நேரம் முன்னேயே கழிவி வைத்தால் சில நேரம் ஊறவைத்தது போல் ஆகி ருசி போய் விடுவதுண்டு.
கர்பகாலத்தில் முதல் 5 மாதங்களுக்கு மட்டும் பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொள்ளவேண்டாம் என சிலருக்கு அறிவுறை கொடுகப்படுகிறது மருத்துவரிடமிருந்தே..எதனால் என்று தெரியவில்லை.அதிகளவு இரும்பு சத்து காரணமாக இருக்கலாம்.
ஆனால் நாம் தினமும் 1 பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொள்வது போதுமானது.
மேலே உள்ள சத்துக்கள் மட்டும் தேடிக் கண்டுபிடித்து கொடுத்தது..மற்றவை அனுபவத்தில் எழுதப்பட்டது..தவறிஉந்தால் மற்றவர்கள் தாரளமாக திருத்திக் கூறலாம்.

தளிகா:-)

மாலதிமொஹனுக்கு வணக்கம்.5 கப் ஈசி ஸ்வீட் இல் எத்தனை கப் ரீஃபைண்ட் ஆயில் என்று தெரியவில்லை.

அன்புள்ள
சங்கீதாஜகராஜன்

vazhga vazhamudan

ரீஃபன்ட் ஆயில் - 1 கப் சேர்க்கவேன்டும்

ஹாய் தளிகா மேடம் , தாங்கள் அளித்த தகவல்களுக்கு மிக்க நன்றி.

'' கர்பகாலத்தில் முதல் 5 மாதங்களுக்கு மட்டும் பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொள்ளவேண்டாம் என சிலருக்கு அறிவுறை கொடுகப்படுகிறது மருத்துவரிடமிருந்தே..எதனால் என்று தெரியவில்லை.அதிகளவு இரும்பு சத்து காரணமாக இருக்கலாம் ''

கர்பமாக முயற்சி எடுப்பவர்கள் (எடுத்து கொண்டு இருப்பவர்கள்) பேரிச்சம்பழம் சாப்பிடலாமா,கூடாதா?.

ஹாய் தளிகா மேடம் ,

கர்பமாக முயற்சி எடுப்பவர்கள் (எடுத்து கொண்டு இருப்பவர்கள்) பேரிச்சம்பழம் சாப்பிடலாமா,கூடாதா?.

ஹாய் பானு பதிவு பதில் போட மறந்துட்டேன்..ஆனா எனக்கு தெரியாது பானு...எதுக்கும் தினம் சாப்பிடாம 3 நாளைக்கு ஒன்னு என்ற விகிதத்தில் சாப்பிடுங்க..யார்டயாவது கேட்டு கன்ஃபேர்ம் பன்னிட்டு தெரிஞ்சா சொல்ரேன்..சரியா பானு

ஹாய் தளிகா மேடம் , உங்கள மேடம் சொல்லவா இல்லா அக்கா சொல்லவா????????.

எனக்கு ரொம்ப குழப்பமா இருந்தது சாப்பிடலாமா கூடாதான்னு அதான் கேட்டேன்.ரொம்ப நன்றி நீங்க தந்த பதிலிற்க்கு.

அக்கான்னு கூப்பிடுங்க பானு..

ஹாய் ரூபிக்கா,
ஒகே இனிமே உங்கள அக்கான்னே கூப்பிடுறேன்

கர்ப்பமாக இருப்பவர்கள் முதல் 3 மாதங்கள் பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது என்று எனக்கு ஒரு ஃப்ரெண்ட் சொன்னார்கள். ஏன் என்று கேட்டதற்க்கு அது மலச்சிக்கலை ஏற்படுத்து அதனால் ஆரம்ப மாதத்தில் சாப்பிடும் போது அதிக சூடு வயிற்று வலி வரும் என்று சொன்னார்கள். இது எனக்கு முதலில் தெரியாததால் நான் சாப்பிட்டேன் வயிற்று வலி, மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த ஃப்ரெண்ட் சொன்ன பின்னாடி நான் பேரீத்தம்பழம் சாப்பிடுறதை நிறுத்திட்டேன் அதன் பிறகு எனக்கு வயிற்று வலி, மலச்சிக்கல் சரியானது. இந்தியா டாக்டர்கிட்ட கேட்கும்படி என் அம்மாவிடம் சொன்னேன் அந்த டாக்டரும் சாப்பிட வேண்டாம் 5 மாதத்தில் சாப்பிட்டால் நல்லது என்றார்களாம். வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்க்கவும். குழந்தை உண்டாக முயற்ச்சி செய்பவர்கள் சாப்பிடலாம் என்று தான் நினைக்கிறேன்.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்