கூட்டாஞ்சோறு வார சமையல்- பகுதி-4

அறுசுவை சமையல் வாரம் 6(4/11/2007 - 10/11/2007)

1) திருமதி சிமுக்கி அவர்களின் குறிப்புகள்
மில்கி மேகி நூடுல்ஸ் #5021
உருளைக்கிழங்கு வறுவல் #4956
முட்டை பொடிமாஸ்#4704

2) திருமதி மனோகரி அவர்களின் குறிப்புகள்
மெட்ராஸ் பெப்பர் சிக்கன் #2405
தயிர் போண்டா #2725
இட்லி அல்வா #2876

3) திருமதி செந்தமிழ் செல்வி அவர்களின் குறிப்புகள்
சாதம் சீஸ் உருண்டை #3382
மிஸ்ஸி ரொட்டி #3666
பள்ளிப்பாளையம் சிக்கன் #3308

4) திருமதி செய்யத் கதீஜா அவர்களின் குறிப்புகள்
இறால் பிரியாணி #3324
வட்டலப்பம் #3340
மஹாராஷ்டிரா சிக்கன் கறி #3074

5) திருமதி சுபா ஜெயப்பிரகாஷ் அவர்களின் குறிப்புகள்
மலாய் குல்பி #5299
அசைவ கொத்து சப்பாத்தி #5549
எக் வெஜ் நூடுல்ஸ் #4960

6) திருமதி சித்ரா செல்லதுரை அவர்களின் குறிப்புகள்
ஓட்ஸ் உப்புமா #2030
திரட்டுப்பால் #1960
காலிப்ளவர் மிளகு வறுவல் #1863

7) திருமதி வாணி ரமேஷ் அவர்களின் குறிப்புகள்
கார்லிக் மட்டன் #4443
திடீர் ஜிலேபி #4296
ஈசி வெஜ் பிரைட் ரைஸ் #1809

எளிதாக தேர்வுசெய்யும் வண்ணம் உதவி செய்த மனோஹரி மேடத்திற்கு என் நன்றி. மனோஹரி மேடம், உங்க பெப்பர் சிக்கன் ரெசிப்பியை என் தம்பி செய்துப் பார்த்துவிட்டு ரொம்பப் பிடித்துப் போய் இப்போது வாரா வாரம் பெப்பர் சிக்கனையே செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். தீபாவளி டைம் என்பதால் நிறைய ஸ்வீட்ஸ் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அடுத்த வாரம் யார் செலெக்ட் செய்யப் போறாங்க?

சித்ரா,

எப்படி இருக்கீங்க?

சிக்கன் ரசிகையா நீங்க? எல்லாருடைய சிக்கன் குறிப்பும் வந்திடுச்சு:-)

அடுத்த வாரம் யார்னு நீங்க தானே சொல்லனும்:-) யார்னு சொல்லுங்க:-)[நான் எல்லாம் செலெக்ட் பண்ணி முடிச்சிட்டேன்:-) ]

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்பு தங்கை தேவசேனா எப்படி இருக்கீங்க? நேரநெருக்கடியில் கூட ஆர்வமாக இதில் பங்கேற்றதற்க்கு ரொம்ப நன்றிடா செல்லம். மீண்டும் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆகவே அடுத்த வார குறிப்பு தேர்வாளரை உங்கள் சார்பாக நானே கூறிவிடுகின்றேன்.நமது அன்பு சகோதரி திருமதி ரோஸ்மேரி அவர்களை அடுத்தவார குறிப்புகளை தேர்வுச் செய்ய அன்புடன் அழைக்கின்றேன். நன்றி.

வாங்கம்மா மின்னல்(ரோஸ்மேரி உங்களத்தான்)வந்து ஒரு வணக்கம் போடுங்க பார்க்கலாம்.உங்களுக்கு இதில் பங்களிக்கச் சம்மதமென்றால் குறிப்புகள் தேர்வுச் செய்வதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கட்டாயம் கேட்க்கவும்.

ரோஸ்,

அடுத்த வாரம் உங்கள தேர்ந்தெடுக்க சொல்லி, வாமா மின்னல்னு கூப்பிட்டாக்கூட வந்து மின்னாம இருந்தா எப்படி :-) இடி வேணுமா சொல்லுங்க :-) வந்து இடிக்கறோம்:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இடி, மின்னல், மழை எதற்கு நானே கொடுத்துவிட்டேன்.மனோகரி அக்கா,ஷர்ஷினி போதுமா?என்னையும் கூட்டாஞ்சோறு பக்கம் வர வைத்துவிட்டீர்கள்.முடிந்தவரை சமைத்து பார்க்கிறேன்.

அன்பு தங்கை ரோஸ்மேரி எப்படி இருக்கீங்க? கூட்டாஞ்சோறு குறிப்புகளை தேர்வுச் செய்து வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி. தேர்வுச் செய்வதோடு மட்டுமல்லாமல் அவைகளை முடிந்த வரையில் சமைத்து பார்த்து பின்னூட்டத்தையும் அனுப்பிவிடுங்கள் சரியா.மேலும் இதே பகுதியில் நீங்கள் தேர்வுச் செய்த குறிப்புகளை பதித்து விடுங்கள். காரணம் ஒவ்வொறு பகுதியிலும் குறைந்தது முப்பது பதிவுகளாவது இருந்தால் நல்லது.மேலும் அடுத்த தேர்வாளர் யார் என்பதையும் நீங்களே அறிவித்து விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

திருமதி மனோகரி அவர்களுக்கு
என்னோட பிரச்சனை தெரியாம இப்படி கரார் பண்றீங்களே?முதலில் இதில்தான் போட்டிருந்தேன்.பிறகு சில மாற்றங்கள் செய்யும்பொது மீண்டும் எனக்கு பதிலளி வரவில்லை.அதனால்தான் அங்கு போட்டேன்.நான் புதிதாக ஆரம்பித்த திரட் என்றால் அதில் மேலே வரும் மாற்று எப்போதும் வரும்.அதனால் மாற்றங்கள் செய்ய விரும்பினால் எளிதாக செய்யமுடியும்.இப்போது புரிந்ததா?இது யுஎஇ பிரச்சனையா யுனிவர்சல் பிரச்சனையானு உங்க தம்பிதான் பதில் சொல்லவேண்டும்.மற்றபடி புதிதாக திரட் ஆரம்பிப்பதற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை.யாராவது நான் முதலில் இதில் சேர்த்ததை பார்த்திருந்தால் வந்து சாட்சி சொல்லுங்கப்பா.பாவம் ரோஸ்.
கூட்டாஞ்சோறுக்கான விதிமுறைகள் எதுவும் இருந்தால் முதலிலே கொடுத்துவிட்டால் தேர்வு செய்பவர்களுக்கு எளிதாக இருக்குமே.

அடுத்து தேர்வு செய்ய திருமதி அனிதா சாந்தி அவர்களை அழைக்கிறேன்.

அன்பு தங்கை ரோஸ்மேரி எப்படி இருக்கீங்க? எனது வேண்டுகோளுக்கிணங்க அடுத்த தேர்வாளரை தேர்வுச் செய்ததற்கு மிக்க நன்றி. மற்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்.

அன்பு தங்கை அனிதா எப்படி இருக்கீங்க? அடுத்த வார கூட்டாஞ்சோறு சமையல் குறிப்புகள் தேர்வாளர் நீங்கள் தான். இதில் பங்கு பெற உங்களுக்கு சம்மதமா என்று கூறீனீர்களானால் குறிப்புகள் தேர்வுச் செய்யும் முறையை உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றேன் சரியா. ஆகவே வந்து முதலில் உங்கள் நிலையைக் கூறும் படி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

அன்பு தங்கை ரோஸ்மேரி எப்படி இருக்கீங்க? கவனீச்சீங்களா சகோதரி அனிதாசாந்தி அவர்கள் நமது அழைப்பை பார்க்கவில்லை போல் தெரிகின்றது, ஆகவே அடுத்த வார குறிப்புகளை நானே தேர்வுச் செய்து விடுகின்றேன்.அதற்கடுத்த வாரம் மீண்டும் அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன், உங்கள் கருத்தைக் கூறவும் நன்றி.

மேலும் சில பதிவுகள்