மருதானி

குங்குமத்தில் மருதானி தயாரிப்பார்களே யாருக்காவது தெரியுமா?சிறு வயதில் வைத்த ஞாபகம்.நல்ல மனமாக இருக்கும்.அதன் செய்முறைதான் தெரியவில்லை....

அன்புள்ள ரேணுகா,
எப்படியிருக்கீங்க? அறுசுவைக்குப் புதிசா? வாழ்த்துக்கள்.
குங்குமத்த தண்ணில கரைச்சு, சர்க்கரை 1/2 ஸ்பூன் சேர்த்து, கொதிக்க வைத்து, ஒரு குச்சியால் எடுத்து டிசைன் போடவும். ரொம்ப தண்ணியாக இல்லாமல் திக்காக இருக்க வேண்டும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நலமா? நம்ம 'தோழியர் சங்கத்'தில் உங்களோடு பேசலாம் என்றிருந்தேன். இப்போதைக்கு கொஞ்சம் முடியல. இந்த த்ரெட் ஆரம்பித்த ரேணுகா புதிய வரவு அல்ல என்று நினைக்கிறேன். கூட்டாஞ்சோறு பகுதியில் 20 குறிப்புகளைக் கொடுத்து, இடையில் அறுசுவையில் தலைக்காட்டாமல் இப்போ வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என் யூகம் தவறென்றால், இவர்கள் ஜூனியர் ரேணுகாவாக இருக்கும்.

நீங்களே சந்தேகத்தை தீர்த்து வச்சுடுங்க ரேணுகா!

உங்க யூகம் சரிதான் அஸ்மா.ஆனால் நான் தினமும் அறுசுவையை பார்வையிடுவேன்.எல்லாருடைய அரட்டையையும் ரசித்து படிப்பேன்.ஆனால் என் பையனை வைத்து கொண்டு பதில் தான் போடமுடிவதில்லை.இந்த இரண்டு வரி பதிவை மூன்றாம் முறை டைப் செய்து வெற்றிகரமாக அனுப்பி விட்டேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இது சிறு வயதில் போட்டது,என்ன சேர்ப்பார்கள் என்று கூட தெரியாது.மிக்க நன்றி செல்வி மேடம்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கேள்வி பட்டு இருக்கேன்..ஆனால் குங்குமத்தில் மெஹந்தியா???நல்ல ஐடியாவா இருக்கே......
அதன் கலர் நிஜமான மெஹந்தி மாதிரியே இருக்குமா???எதனை மனி நேரம் கய்யில் வைக்க வேண்டும்???
எதனை நாள்வரை கலர் இருக்கும்????

love all...hate only hatred

love all...hate only hatred

அன்பு சஞ்சிதா,
நிஜமான மெஹந்திய விட இது கலர் நல்லாயிருக்கும். காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். அரைமணியில் காய்ந்து விடும். 4,5 நாட்களூக்கு இருக்கும். மருதாணி கிடைக்காத போது இதை உபயோகிக்கலாம். நல்ல கலரா இருக்கும்.
ட்ரை பண்ணிப் பாருங்க.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்