கலகலா

தேதி: November 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 2 கப்
வெண்ணெய் - 100 கிராம்
சர்க்கரை - 3/4 கப்
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
ஃபுட் கலர் - 2 அல்லது 3


 

மைதாவில் வெண்ணெயை கலந்து பிசறி விடவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 3 பாகங்களாக பிரித்து கொள்ளவும்.
ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கலர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மாவை சப்பாத்தி போல் தேய்த்து சிறு சதுரங்களாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சர்க்கரையில் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
இரட்டை கம்பி பதம் வந்ததும் (நன்கு முற்றிய நிலை) எசன்ஸை சேர்த்து இறக்கி விடுங்கள்.
உடனே பொரித்து வைத்துள்ளவற்றை சேர்த்து, விடாமல் வேகமாக கிளறுங்கள்.
கலர்புல்லாக கலகலா ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

இது ஏறக்குரைய என் அம்மா செய்யும் மைதா பிஸ்கட் போல் உள்ளது. நான் செய்து பார்த்துவிட்டு எப்படி வந்தது என்று சொல்கிரேன்.
உடனே குறிப்பு கொடுத்ததற்கு நன்றி!

ஹாய் ரேணுகா,
கலகலா செய்து பாடசாலைக்குக் கொண்டு போனேன். கலகல என்று இருந்தது. :)
நான் கலரைத் தவிர்த்து விட்டேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா இது நான் எப்பொழுதும் தீபாவளிக்கு செய்வேன்,கலகல என்று இருந்ததில் மகிழ்ச்சி,லகலகலக என்று இல்லையே?கலர் தேவையில்லை தான் இமா,அம்மா கலர் போடமாட்டார்,நான் தான் கலரா இருக்கட்டும் என்று சேர்ப்பேன்,மிக்க நன்றி இமா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. இமா அவர்கள் தயாரித்த கலகலாவின் படம்

<img src="files/pictures/aa319.jpg" alt="picture" />

நன்றி அட்மின்.

ரேணு,
லகலக என்று இருக்கவில்லை. கலகல என்று தான் இருந்தது. ஆளாளுக்கு ஒரு பெயர் சொல்லிக் கொண்டு ரசித்துச் சாப்பிட்டார்கள். வீட்டுக்குப் போய் எல்லோரும் நன்றாக நடந்திருப்பார்கள். :) என்னவோ ஹங்கேரியன் பெயர் எல்லாம் சொன்னார்கள், மறந்துவிட்டது.
என் ரஷ்யன் தோழி நன்றாக இருக்கிறது என்று ரெசிபி வாங்கிக் கொண்டு போனார்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா என் அம்மா வீட்டில் செய்வது போல் உள்ளது,அழகாக படம் போடறீங்க,எனக்கு சாப்பிடனும் போல உள்ளது

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா உங்கள் குறிப்பைப்பார்த்து இமா செய்த கலகலா எங்களுக்கும் கொண்டு வந்து தந்தா. மிக மிகச்சுவையாக இருந்தது. நாங்கள் ரசித்துச்சாப்பிட்டோம். இன்று தான் பதிவு போட முடிந்தது.
அன்புடன்,
செபா.

என் குழந்தைக்கு ரொம்ப பிடித்துவிட்டது உங்கள் கலகலா.. அதனால் நான் அடிக்கடி செய்வேன் கலகலா..நன்றி

வாழு, வாழவிடு..