பொரி.....

பொரியை வைத்து உப்புமா, சாட் மசாலா பொரி (ஸ்பைசி பொரி), பொரி இனிப்பு உருண்டை தவிர வேறு என்ன வகையான பதார்த்தங்கள் செய்யலாம்?
-நர்மதா :)

பொரியை வைத்து வேறு எதுவும் செய்யவே முடியாதா? :(
-நர்மதா :)

நர்மதா, பொரியை எதுவும் சமைக்க வேண்டாம்! அப்படியே சாப்பிடலாம்.(அடிக்க வராதீங்க, நான் ஓடிடறேன்) யாருமே பதில் குடுக்கலையே, நாமாவது ஒரு பதில் குடுக்கலாமென்ற நல்ல எண்ணத்தில்தான் வந்தேன்:-) நீங்க பொரியை வாங்கி வைத்துக்கொண்டு வீணாகிவிடுமோ என்ற கவலை வேண்டாம். அதை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் க்ரிஸ்பினஸ் மாறாது

எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டு வேற் கேட்டா என்னத்த சொல்றது நர்மதா, வின்னி தான் சரியான ஆளு உங்களுக்கு :-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

லெமன் சாதம் மாதிரி பண்ணலாம் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

எப்படி இருக்கீங்க. பொரியில் செய்யும் எல்லாவற்றையும் நீங்கள் குறிப்பிட்டுவிட்டு மேலும் கேட்கிறீங்களே... இது நியாமா. ஹர்ஷினியை பாருங்க short and sweetaa பதில் கொடுத்திருக்கிறார்கள். ஹர்ஷினி லெமன் பொரி செய்ய சொல்லியிருக்கிறார்கள். நான் சொல்கிறேன் புளி பேஸ்ட் சேர்த்து புளிப்புபொரி செய்து பாருங்கள். திட்டாதீங்க நர்மதா......நான் ஒரு முறை செய்து பார்தேன். நன்றாக இருந்தது.

எனக்கு உண்மையிலேயே பொரியை வச்சு என்ன பண்றது எண்டே தெரியாது. திருமதி சுபா ஜெயபிரகாஷோட ஸ்பைசி பொரி குறிப்பு பார்த்துட்டு அது செய்யதான் பொரி வாங்கினேன். ஆனா அது சிறிய பாக்கெட்டில் கிடைக்கவில்லை போலும். பெரீய்ய்ய்ய்ய...பாக்கெட்தான் வந்தது. :) நெடுகவும் ஸ்பைசி பொரி சாப்பிட முடியாதுதானே அதான் இங்கேயே தேடிப்பார்த்தேன். உப்புமா ரெசிபி கிடைத்தது. பக்கத்து வீட்டில பொரி உருண்டை பண்ற ரெசிபி குடுத்தாங்க. அப்பிடியும் நிறைய பொரி இருக்குது. அதான் வேற ஏதாவது ரெசிபி கிடைக்குமா என்று இங்கே கேட்டேன். :)

எங்கட ஊரில கோவில்ல சாமி வீதி உலா வரும்போதுதான் அரிசிபொரி போடுவார்கள். சமைப்பதை பற்றி கேள்விப்படவில்லை.

ஹர்ஷினி, முத்துலக்ஷ்மி சொன்ன ரெசிபிஸ் செய்து பார்க்கிறேன். அப்பிடியும் பொரி மிஞ்சினால் வானதி சொன்னமாதிரி ஃபிரிட்ஜில் வைக்கிறேன். இல்லாட்டி ஹேமா பக்கத்திலதானே இருக்கிறீங்க. உங்கட வீட்டிற்கு பார்சல் பண்ணிவிட்டுர்றேன்.:)

குறிப்புக்கு மிகவும் நன்றி ஹர்ஷினி & முத்துலக்ஷ்மி. வானதி ஹேமாக்கும் நன்றி :)
-நர்மதா :)

அடிக்க வராம இதுக்கும் பதில் சொல்லிடுங்களேன். பொரிகடலை எப்பிடி இருக்கும்? Pop cornஆ?
-நர்மதா :)

டியர் நர்மதா,

பொரிகடலை என்றால் பொட்டுக்கடலை. பொட்டுக்கடலை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்

எண்ணயில் கடுகு,உளுந்து,கடலை பருப்பு,முந்திரி,வேர்கடலை,2 காய்ந்தமிளகாய் தாளித்து கடைசியில் பொரியை இரண்டு நிமிடம் பிரட்டி எடுக்கவும்.

lakshmi sri sundar

lakshmi sri sundar

என்னையில் கடுகு,வேப்பிலை,வரமிளகாய்,மஞ்சள் தூள் தாளித்து அதில் அம்மியில் வைத்து தட்டிய பூண்டு பல் 2 போட்டு சிவக்க வறுத்து தீயை அனைத்துவிட்டு உப்பு சேர்த்து பொரியை இட்டு கிளறவும்(கார பொரியே தான் ஆனால் சுவையும் பேஷா நன்னா இருக்கும் மணமும் கமகமங்கும்:-D)

மேலும் சில பதிவுகள்